துருக்கியின் தென்மேற்கே நேற்று 5.7 ரிச்டர் அளவிளான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்ளூர் நேரப்படி காலை 9.34 இற்கு டெனிஸ்லி மாகாணத்தை இந்த நிலநடுக்கம் தாக்கியதாக அனர்த்த மற்றும் அவசரநிலை முகாமைத்துவ சபை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையம் அந்த மாகாணத்தின் அசிபாயம் மாவட்டத்தின் தென்பகுதி கிராமப்புறத்தில் 11.36 கிலோமீற்றர் (7 மைல்) ஆழத்தில் காணப்படுகின்றது.
இதற்கு முன்னதாக கடந்த புதன்கிழமை 4.8 மற்றும் 4.5 ரிச்டர் அளவான நிலநடுக்கங்களும் அம் மாகாணத்தைத் தாக்கியுள்ளன.
இந்த நிலநடுக்கம் அயீஜியன் பிராந்தியம் முழுவதிலும் மற்றும் மர்மாரா கடலின் தென்பகுதியிலும் உணரப்பட்டுள்ளது.
மேலும் உயிரிழப்புக்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என டெனிஸில் ஆளுநர் தெரிவித்தார்.
-Vidivelli