ஐ.தே.க. அரசாங்கத்தை வீழ்த்துவதற்கே ஈஸ்டர்தின தாக்குதல்கள் நடத்தப்பட்டதா?

சந்தேகம் வலுக்கிறது என்கிறார் முஜிபுர் ரஹுமான்

0 882

ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்­கத்தை தோல்­வி­ய­டையச் செய்­வ­தற்­கா­கவா உயிர்த்த ஞாயி­று­தினத் தற்­கொலை தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன என்ற சந்­தேகம் எழுந்­துள்­ள­தாக தெரி­வித்த ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹுமான் , ஸ்ரீலங்கா சுதந்­திர பொது­ஜன முன்­ன­ணியின் தவி­சா­ள­ராக முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நிய­மித்­தி­ருப்­பதன் மூலம் இந்த சந்­தேகம் மேலும் வலுக்­கி­றது என்றும் கூறினார்.

எதிர்க்­கட்சித் தலைவர் அலு­வ­ல­கத்தில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் இதனை தெரி­வித்த அவர் மேலும் கூறி­ய­தா­வது,

ஜனா­தி­பதி தேர்தல் காலத்­திலே நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்­கெ­தி­ராக முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டு­களில் பிர­தானமா­னது உயிர்த்த ஞாயி­று­தினத் தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­த­லாகும். எதிர்த்­த­ரப்­பினர் ஐக்­கிய தேசிய முன்­னணி மீதும் அதன் உறுப்­பி­னர்கள் மீதும் பாரிய குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­தனர். நாட்டின் தேசிய பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் எடுத்துக் காட்­டினர்.இது எமது கட்­சிக்கு மாத்­தி­ர­மன்றி, எமது ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்கும் பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யது. இந்­நி­லையில் தற்­போது வெளி­வரும் தக­வல்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு பார்க்­கையில் நல்­லாட்சி அர­சாங்­கத்தை இலக்கு வைத்­துத்­தானா இந்த தாக்­குதல் இடம்­பெற்­றுள்­ளது என்ற சந்­தேகம் எமக்கு எழுந்­துள்­ளது.

தாக்­குதல் தொடர்பில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் ஹேம­சிரி பெர்­னாண்­டோ­விடம் நடத்­தப்­பட்ட விசா­ர­ணை­க­ளின்­போது, நாட்டில் தாக்­கு­த­லொன்று மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தாக புல­னாய்வு அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்­த­தாக அப்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு தெரி­வித்­த­தாக வாக்­கு­மூலம் வழங்­கி­யுள்ளார்.

இவ்­வாறு தாக்­குதல் தொடர்பில் முன்­னரே தகவல் கிடைக்கப் பெற்­ற­போ­திலும் அது தொடர்பில் கவனம் செலுத்­தாது இருந்­த­மைக்கு காரணம் என்ன? ஜனா­தி­ப­தியே முப்­ப­டை­களின் தள­ப­தி­யாக செயற்­பட்டார். பாது­காப்பு அமைச்சும் அவ­ரி­டமே இருந்­தது. இதே­வேளை பாது­காப்பு சபையின் கூட்­டங்­க­ளிலும் ஐக்­கிய தேசியக் கட்­சியை சேர்ந்த எவ­ருக்கும் கலந்து கொள்­வ­தற்­கான வாய்ப்­பையும் முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கொடுத்­தி­ருக்­க­வில்லை.

அடிப்­ப­டை­வா­திகள் எனக் கூறப்­படும் சஹ்ரான் தலை­மை­யி­லான குழு­வினர் 2013 மற்றும் 2014 ஆம் ஆண்­டு­க­ளிலே வளர்ந்து வந்­துள்­ளனர் என்­பதும் தற்­போது உறு­தி­யா­கி­யுள்­ளது. இதனை அர­ச­த­ரப்பு அமைச்­சர்­களும் ஏற்றுக் கொண்­டுள்­ளனர்.

இதே­வேளை, விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க சில்வா, சஹ்ரான் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து, சஹ்­ரானை கைது செய்ய முற்­ப­டும்­போது அவர் முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வையும், ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவையும் கொலை செய்யத் திட்­ட­மிட்­டுள்­ள­தாகக் கூறி அவரை கைது செய்­தனர்.

இந்த நாலக்க சில்வா தொடர்பில் முறைப்­பா­ட­ளித்த நாமல்­கு­மார என்ற நபர் ஜனா­தி­பதி செய­ல­கத்­திலே ஊதியம் பெற்­று­வந்­துள்ளார். இவ­ருக்கும் ஜனா­தி­பதி செய­ல­கத்­திற்­கு­மான தொடர்பு என்ன? ஏன் அவ­ருக்கு இவ்­வாறு ஊதியம் அளிக்­கப்­பட்­டது என்­பது தொடர்பில் எமக்கு சந்­தேகம் எழுந்­துள்­ளது. அது­மாத்­தி­ர­மன்றி தற்­கொலை தாக்­கு­தல்­களை மேற்­கொள்ளும் அள­விற்கு இந்த நாட்டில் முஸ்லிம் மக்­க­ளுக்குப் பிரச்­சி­னைகள் இல்லை. இதனால் இந்த விட­யங்கள் தொடர்பில் தெளி­வான விசா­ர­ணைகள் வேண்டும்.

இவற்றை அடிப்­ப­டை­யாக கொண்டு பார்க்­கையில் சஹ்­ரானை நல்­லாட்­சியை தோல்­வி­ய­டைய செய்­வ­தற்­காக பயன்­ப­டுத்­தி­யுள்­ளார்­களா என்ற சந்­தேகம் எமக்கு எழுந்­துள்­ளது.

ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான 5 மாத இட­வெ­ளி­யிலே தாக்­கு­தல்­களும் இடம்­பெற்­றன. எனவே இது ஒரு சூழ்ச்­சி­கர செய­லாக இருக்­கலாம் என்றே நாங்கள் கரு­து­கின்றோம். தேர்தல் காலங்களின்போது ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலருக்கு எதிராக அரசதரப்பினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர். இவ்வாறு அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை என்றால் ஆட்சிக்கு வந்து மூன்று மாத காலத்திற்குள் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்கலாமே. ஏன் அவ்வாறு செய்யாதிருக்கின்றனர். இந்த தற்கொலை தாக்குதல் தொடர்பான உண்மை விவகாரங்களை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.