தீர்வின்றித் தொடரும் அரசியல் நெருக்கடி

0 965

நாட்டில் தொடரும் அர­சியல் நெருக்­க­டிக்கு தீர்வு காணும் நோக்கில் ஜனா­தி­ப­திக்கும் சபா­நா­யக­ருக்குமிடையில் கடந்த வியாழக்கிழமை இடம்­பெற்ற சந்­திப்பில் இணக்­கப்பாடு எட்டப்பட்டுள்­ள­தாக சபா­நா­யகர் அலு­வ­லகம் அறிவித்திருந்தது.

இதன் தொடராக, மறுநாள்  ஜனா­தி­பதி மைத்திரிபால சிறி­சேன, தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரையும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் கட்­சி­களின் தலை­வர்­க­ளையும் சந்­தித்துப் பேச்சுவார்த்தை நடத்­தியிருந்தார்.

நாட்­டுக்குள் ஏற்­பட்­டுள்ள குழப்­ப­மான அர­சியல் நிலை­வரம் தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­யவும் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்­தனர். பல்­வேறு கட்சித் தலை­வர்கள் விடுத்த கோரிக்­கைக்கு அமை­வா­கவே சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இவ்­வாறு ஜனா­தி­ப­தியை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினார்.

இந்­நி­லையில் இந்தப் பிரச்­சி­னையை விரை­வாக தீர்க்கும் நோக்கில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, எதிர்க்­கட்­சித்­த­லைவர் சம்­பந்தன் மற்றும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் கூட்­டுக்­கட்சித் தலை­வர்­க­ளுடன் தனித்­த­னி­யாக சந்­திப்­புக்­களை நடத்தி பிரச்­சி­னைக்கு விரைவில் தீர்­வு­காண்­ப­து தொடர்பில் கலந்துரையாடியிருந்தார்.

இதற்கிடையில், ஐக்­கிய தேசிய முன்­னணி தலை­மை­யி­லான அர­சாங்­கத்­தினை அமைப்­ப­தற்கு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தமது முழு­மை­யான ஆத­ரவை வழங்கத் தீர்­மா­னித்­துள்­ளதாகவும் எனவே ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யினால் நிய­மிக்­கப்­பட்ட பாரா­ளு­மன்­றத்தின் பெருன்­பான்­மை­யினை பெறக்­கூ­டி­யவர் என  கருதும் நபரை பிர­த­ம­ராக  நிய­மிக்க வேண்­டு­மென்றும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு ஜனா­தி­ப­திக்கு கடிதம் மூலம் தெரி­வித்­துள்­ளது.

த.தே.கூட்டமைப்பின் ஆதரவைத் தொடர்ந்து, ஐக்கிய தேசிய முன்னணிக்கு பாராளுமன்ற பெரும்பான்மை இருப்பது மீளவும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்கமைய ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவிக்கு தமது கட்சி பிரேரிப்பதாகவும் ஐ.தே.கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் மீண்டும் ஒரு நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்து பாராளுமன்ற பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஜனாதிபதி மீளவும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

மறுபுறம் நேற்றைய தினம் விசேட அறிக்கை ஒன்றை விடுத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பொதுத் தேர்தலை நடத்துவதே நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த ஒரே வழி எனக் குறிப்பிட்டுள்ளார்.

“எந்தவொரு அரச தலைவரும் தாம் நினைத்த போக்கில்  பாராளுமன்றத்தை கலைப்பதில்லை. மிகவும் நெருக்கடியான நிலைமையில் மட்டுமே அவ்வாறு ஒரு தீர்மானத்தை யாரும் கையில் எடுப்பார்கள். அதையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்துள்ளார்.  பலவீனமடைந்துள்ள ஒரு நாட்டினை மீண்டும் பலப்படுத்த இருக்கும் ஒரே வழிமுறை பொதுத் தேர்தல்  மட்டுமேயாகும். ஜனநாயகத்தை மதிக்கும் அனைவரும் இதுகுறித்து சிந்திக்க வேண்டும்” என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு ஒவ்வொரு தரப்பும் தத்தமது நிலைப்பாடுகளில் விடாப்பிடியாக இருக்கின்ற நிலையில் நாட்டின் நிர்வாகம் மென்மேலும் மோசமடைந்து கொண்டு செல்வதை தவிர்க்க முடியவில்லை. இதற்கு தீர்வு காண வேண்டுமானால் ஐக்கிய தேசிய முன்னணி முன்மொழியும் நபரை பிரதமராக நியமிக்க ஜனாதிபதி முன்வர வேண்டும். இன்றேல் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்குச் செல்ல வேண்டும்.

எனினும் பாராளுமன்றத்தை கலைப்பதாக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 7 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. இதற்கு முன்னராக குறித்த வர்த்தமானியை ஜனாதிபதி வாபஸ் பெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு மிகவும் குழப்பகரமான நிலைமையில் நாட்டின் அரசியல் ஒரு மாத காலத்திற்கும் மேலாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலை தொடர்வது ஆரோக்கியமானதல்ல. இதற்கு விரைந்து தீர்வு காண சகலரும் விட்டுக்கொடுப்புகளுக்கு முன்வர வேண்டும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.