மார்ச் 1 க்கு பின்னர் எந்நேரமும் பாராளுமன்றை கலைக்கலாம். : ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு சட்டமா அதிபர் எழுத்து மூலம் அறிவிப்பு

0 674

அர­சி­ய­ல­மைப்பின் 19ஆம் திருத்­தத்­திற்­க­மைய மார்ச் 1ஆம் திக­திக்கு பின்னர் எந்த வேளையும் பாரா­ளு­மன்­றத்தை கலைக்க ஜனா­தி­ப­திக்கு முடியும் என சட்­டமா அதிபர் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ஷ­வுக்கு எழுத்து மூலம் அறி­வித்­துள்ளார்.

அர­சி­ய­ல­மைப்பின் 19ஆம் திருத்­தத்­திற்­க­மைய பாரா­ளு­மன்­றத்தை கலைப்­ப­தற்கு ஜனா­தி­ப­திக்கு இருக்கும் சட்ட ஏற்­பா­டுகள் தொடர்­பாக வினவி, ஜனா­தி­ப­தியின் செய­லாளர் பீ.பி.ஜய­சுந்­த­ர­வினால் சட்­டமா அதி­ப­ருக்கு அனுப்­பி­யி­ருந்த கடி­தத்­துக்கு பதில் கடி­தத்­திலே இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.
அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,
தற்­போ­தைய பாரா­ளு­மன்­றத்­துக்கு எதிர்­வரும் மார்ச் மாதம் 1ஆம் திக­திக்கு 4வரு­டங்­களும் 6மாதங்­களும் பூர­ண­மா­கின்­றது. அதனால் எதிர்­வரும் மார்ச் 1ஆம் திக­திக்கு பின்னர் எந்த வேளையும் பாரா­ளு­மன்­றத்தை கலைப்­ப­தற்­கான அதி­காரம் அர­சி­ய­ல­மைப்­பி­னூ­டாக ஜனா­தி­ப­திக்கு கிடைக்­கப்­பெ­று­கின்­றது என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, பாரா­ளு­மன்­றத்தை உரிய காலத்­துக்கு முன்னர் கலைத்தல் மற்றும் தேர்­தல்கள் நட­வ­டிக்­கைகள் தொடர்­பாக வினவி, ஜனா­தி­ப­தியின் செய­லாளர் பீ.பி.ஜய­சுந்­தர தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேஷப்­பி­ரி­ய­வுக்கு கடந்த வாரம் கடி­த­மொன்று அனுப்பி இருக்­கின்றார்.
ஜனா­தி­பதி உரிய காலத்­துக்கு முன்னர் பாரா­ளு­மன்­றத்தை கலைத்தால், பாரா­ளு­மன்ற தேர்­த­லுக்கு வேட்­பாளர் பட்­டி­யலை கோரும் திகதி, அதன் இறு­தித்­தி­கதி, பொதுத் தேர்­தலை நடத்தும் திகதி, பாரா­ளு­மன்ற சபை அமர்வு ஆரம்­ப­மாகும் திகதி என்ற விட­யங்­களை பாரா­ளு­மன்­றத்தை கலைப்­ப­தாக அறி­விக்கும் வர்த்த­மானி அறி­விப்பில் உள்­ள­டக்­க­வேண்டும் என்­ப­தற்­காவே ஜனா­தி­பதி செய­லாளர் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ருக்கு குறித்த கடி­தத்தை அனுப்­பி­யி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அதன் பிர­காரம் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் இந்த வாரத்­துக்குள் தனது நிலைப்­பாட்டை ஜனா­தி­பதி செய­லா­ள­ருக்கு அறி­விக்க இருப்­ப­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.

அத்­துடன் பாரா­ளு­மன்­றத்தை கலைப்­ப­தற்­கான அதி­காரம் ஜனா­தி­ப­திக்கு கிடைக்கப்பெறும் பட்சத்தில் ஒரு நாள்கூட தாமதிக்காமல் பாராளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என அரசாங்கத்தின் இணை ஊடகப்பேச்சாளரும் ராஜாங்க அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli

  • எம்.ஆர்.எம்.வஸீம்

Leave A Reply

Your email address will not be published.