மத்ரஸாக் கல்வி தீவிரவாதத்தை போதிக்கின்றதா?

0 1,055

அரபு மத்­ர­ஸாக்கள் பற்­றிய சர்ச்­சை­களும், சந்­தே­கங்­களும் உரு­வாக்­கப்­பட்டு வரு­கின்­றன. நூற்­றாண்­டு­களைத் தாண்டி இயங்­கி­வரும் அரபுக் கல்­லூ­ரி­கள்­கூட அடிப்­ப­டை­வா­தத்­தையும், தீவி­ர­வா­தத்­தையும் போதிக்கும் தலங்­க­ளாக சந்­தேகக் கண் கொண்டு நோக்­கப்­படும் துர்ப்­பாக்­கிய நிலை உரு­வாக்­கப்­பட்டு வரு­கின்­றது. இதே­வேளை. அரபு மத்­ர­ஸாக்­க­ளி­லுள்ள குறை­களை நிவர்த்­தி­செய்து காலத்தின் தேவைக்­கேற்ப தகு­தியும், திற­மையும் வாய்ந்த உல­மாக்­களை உரு­வாக்­கத்­தக்க மாற்­றங்­க­ளையும் சீர்­தி­ருத்­தங்­க­ளையும் செய்ய வேண்­டி­யது காலத்தின் கட்­டா­ய­மாகும்.

“தரஸ” என்றால் கற்றான், படித்தான் என்­பது அர்த்­த­மாகும். மத்­ரஸா என்றால் கற்கும் இடம் என்­பது அர்த்­த­மாகும். பாட­சாலை, கல்­லூரி – ஸ்கூல் என்­ப­தைத்தான் மத்­ரஸா என்று அர­பியில் கூறப்­ப­டு­கின்­றது.
அரபு நாடு­களில் அவ்­வந்த நாட்­டுக கல்­வித்­திட்­டத்தைக் கற்­பிக்கும் கல்­விக்­கூ­டங்கள் மத்­ரஸா என்றே அழைக்கப் படு­கின்­றன. கல்­லூ­ரி­களின் தரா­த­ரத்­துக்­கேற்ப மத்­ரஸா, மஃஹத், குல்­லிய்யா, ஜாமிஆ என அழைக்கப் பட்­டாலும் இலங்­கையில் பொது­வாக தரா­த­ரத்தின் அடிப்­ப­டையில் இல்­லாமல் பொது­வாக அவ­ரவர் விருப்­பத்­திற்­கேற்ப இப்­பெ­யர்­களைச் சூட்­டி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இலங்­கையும் மத்­ர­ஸாக்­களும்
இலங்­கையில் குர்ஆன் மத்­ரஸா – அரபு மத்­ரஸா என இரு­வகை சொற்­ப­தங்கள் முஸ்­லிம்­களின் மரபில் உள்­ளன.

குர்ஆன் மத்­ரஸா
குர்ஆன் மத்­ரஸா என்­பது அவ்­வப்­ப­கு­தி­களில் வசிக்கும் சிறு­வர்­க­ளுக்கு குர்­ஆனை ஓது­வ­தற்கு கற்­பிப்­ப­துடன், அன்­றாட வாழ்வில் கடைப்­பி­டிக்க வேண்­டிய ஒழுக்­கங்­களைப் போதிப்­ப­தற்­கா­கவும் குறிப்­பிட்ட பிர­தேச பள்­ளியின் ஏற்­பாட்டில் நடக்கும் பள்­ளிக்­கூ­டங்­களைக் குறிக்கும் . சில­வேளை தனி­யாரும் இத்­த­கைய மத்­ர­ஸாக்­களை நடத்தி வரு­கின்­றனர். இது இலங்கை பூராக எல்லா ஊர்­க­ளிலும் நடை முறையில் உள்­ளது. சில­போது ஓர் ஊரில் பல குர்ஆன் மத்­ர­ஸாக்­களும் இருப்­ப­துண்டு.

பொது­மக்கள் ஆரம்ப காலத்­தி­லி­ருந்தே இதனை மக்தப், ஓதப்­பள்ளி என்­றெல்லாம் அழைத்து வரு­கின்­றனர். இதனை இலங்­கையில் ஜம்­இய்­யத்துல் உலமா ஒரு பாடத்­திட்­டத்­திற்குள் வடி­வ­மைத்து ‘மக்தப்’ என்ற பெயரில் இயக்கி வரு­கின்­றது. அனைத்து குர்ஆன் மத்­ர­ஸாக்­களும் இந்த திட்­டத்தின் அடிப்­ப­டையில் இயங்­கு­வ­தில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

அரபு மத்­ரஸா
அரபு மத்­ரஸா என்­பது இரு பிரி­வு­க­ளாக இயங்கி வரு­கின்­றது. ஒன்று ஹிப்ழ் பிரிவு. இந்தப் பிரிவில் பெரும்­பாலும் 6 ஆம் வரு­டத்­திற்­கு­ரிய மாண­வர்கள் இணைக்­கப்­பட்டு முழுக் குர்­ஆ­னையும் மன­ன­மி­டு­வ­தற்குப் பயிற்­சி­ய­ளிக்­கப்­படும். சில ஊர்­களில் ஊர் மஸ்­ஜிதில் காலை, மாலை வேளை­களில் மாண­வர்கள் ஒன்­று­கூடி குர்­ஆனை மன­ன­மி­டு­வதும் உண்டு. இவ்­வா­றான முயற்­சி­யி­னூ­டாக குர்­ஆனை முழு­மை­யாக மன­ன­மிட்ட ஆயி­ரக்­க­ணக்­கான ஹாபிழ்கள் இலங்­கையில் உரு­வாக்கப் பட்­டுள்­ளனர். வேறு எந்த வேதங்­களும் அவ்­வந்த மக்­களால் முழு­மை­யாக மன­ன­மி­டப்­பட்­ட­தாக அறிய முடி­யா­துள்ள நிலையில் இந்தச் சின்ன நாட்டில் ஆயி­ரக்­க­ணக்­கான ஆண், பெண் ஹாபிழ்கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளமை இத்­திட்­டத்தின் வெற்றி மட்­டு­மல்­லாது, எமது குர்­ஆனின் புனிதத் தன்­மைக்கும், இல­குத்­தன்­மைக்கும் எடுத்துக் காட்­டாகத் திகழ்­கின்­றது.

கிதாபுப் பிரிவு
பெரும்­பாலும் இப்­பி­ரிவு 7 வரு­டங்­களைக் கொண்­ட­தாக அமைந்­தி­ருக்கும். ஆரம்ப காலங்­களில் 7ஆம் வருடம் வரை பாட­சாலைக் கல்­வியைக் கற்­ற­வர்கள் இதில் இணைத்துக் கொள்­ளப்­பட்டு வந்­தனர். இன்று சில மத்­ர­ஸாக்கள் O/L முடித்­த­வர்­களை இணைத்து 5 வரு­டத்தில் இக்­கற்கை நெறியைப் பூர்த்தி செய்­கின்­றன.

இப்­பி­ரிவில் கற்றுத் தேறு­ப­வர்கள் மௌலவி, அல்­ஆலிம் என்ற பட்­டத்தைப் பெறுவர். இஸ்­லாத்தில் புரோ­கிதம் இல்லை. என்­றாலும், இவர்­களை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்­காக இஸ்­லா­மிய மத குரு­மார்­களை உரு­வாக்கும் கற்கை நெறி­யென்று இதனை அறி­மு­கப்­ப­டுத்­தலாம்.

இங்கே குர்ஆன், ஹதீஸ், இஸ்­லா­மிய வர­லாறு மற்றும் ஹதீஸ் கலை, பிக்ஹ் – இஸ்­லா­மிய சட்­டக்­கலை, அல்­குர்ஆன் விளக்கம் – தப்ஸீர், குர்­ஆ­னிய கலைகள் (உலூமுல் குர்ஆன்) என்­பன போன்ற கலை­களும் கற்­பிக்­கப்­ப­டு­கின்­றன.
பொது­வாக அரபு மத்­ர­ஸாக்கள் மார்க்கக் கல்விக் கூடங்­க­ளாகப் பார்க்­கப்­ப­டு­வ­துண்டு. இலங்­கையில் இயங்­கி­வந்த ஆரம்­ப­கால மத்­ர­ஸாக்கள் சில­வற்றில் மேலே குறிப்­பிட்ட சில கலைகள் மட்­டுமே கற்­பிக்­கப்­பட்டு வந்­தன. இருப்­பினும், நாட்­டி­லுள்ள முன்­னோடி அரபு மத்­ர­ஸாக்கள் சில­வற்றில் இலங்கைப் பாடத் திட்­டத்­தையும், மௌலவி கற்கை நெறி­யையும் இணைத்து O/L, A/L பொதுப் பரீட்­சை­க­ளையும் மாண­வர்கள் எதிர்­கொள்ளும் விதத்தில் கல்வித் திட்­டத்தை மாற்­றி­ய­மைத்­ததன் பின்­ன­ணியில் இன்று பெரும்­பா­லான அரபு மத்­ர­ஸாக்கள் இந்த அடிப்­ப­டையில் இயங்க ஆரம்­பித்து அதில் வெற்­றியும் கண்டு வரு­கின்­றமை குறிப்­பிடத் தக்­க­தாகும்.

ஏன் அரபு மொழி?
ஏப்ரல் 21 பயங்­க­ர­வாதத் தாக்­கு­தலின் பின்னர் நாட்டில் சில­ருக்கு அரபு மொழி மீது வெறுப்­புண்­டா­கி­யுள்­ளது. சிலர் இலங்­கையில் தமிழ், சிங்­களம், ஆங்­கிலம் ஆகிய மொழிகள் இருக்­கும்­போது ஏன் அரபு கற்க வேண்­டு­மென்று கேள்வி எழுப்­பு­கின்­றனர்.

அரபு என்­பது ஒரு மொழி என்ற அடிப்­ப­டையில் யார் வேண்­டு­மா­னாலும் அதைக் கற்­கலாம். ஏன் கற்­கி­றீர்கள் என விளக்கம் பெற கேள்வி கேட்­க­லாமே தவிர கற்­பதை எதிர்த்துக் கேள்வி கேட்க யாருக்கும் உரி­மை­யில்லை. யாரும் எந்த மொழி­யையும் கற்­கலாம் எனும்­போது, ஏன் அரபு கற்­கி­றீர்­க­ளென எதிர்த்து நிற்­பது மனித உரிமை மீற­லாகும்.

இந்­நாட்டில் தொழில் நோக்­கத்­திற்­காக சைனீஸ், கொரிய மொழி, ஜப்பான் மொழி என்­பன கற்­கப்­பட்டு வரு­கின்­றன. இலங்கை மக்கள் ஜப்பான், கொரியா போன்ற நாடு­களில் தொழில் செய்­வ­தை­விட அதி­க­மாக அரபு நாட்டில் தொழில் செய்­து­வரும் நிலையில் அரபு மொழியை ஏன் கற்க வேண்­டு­மென்ற கேள்வி உலக அறி­வற்ற அறி­வீ­னர்­களால் எழுந்­த­தா­கவே நோக்க வேண்­டி­யுள்­ளது.

அத்­துடன் இலங்கை O/L பாடத்­திட்­டத்தில் அரபு ஒரு பாட­மாகக் கற்­பிக்­கப்­ப­டு­கின்­றது. இலங்கை அரச பல்­க­லைக்­க­ழ­கங்­களில் அரபுப் பிரிவு உள்­ளது. O/L சித்­தி­ய­டை­யா­த­வர்கள் அர­சியல் தலை­வர்­க­ளானால் இத்­த­கைய கேள்­வி­களை எதிர்­கொண்­டுதான் தீர­வேண்டும்.

முஸ்­லிம்கள் ஏன் அரபைக் கற்­கின்­றனர் என்றால் எல்லா முஸ்­லிம்­களும் கட்­டாயம் குர்ஆன் ஓத வேண்டும். இஸ்­லாத்தில் மத­கு­ரு­மார்கள் மட்­டு­மின்றி அனை­வரும் குர்­ஆனை ஓதி­யாக வேண்டும். இதற்­காக குர்ஆன் மத்­ர­ஸாக்­களில் குர்ஆன் ஓது­வ­தற்குப் போதி­ய­ளவு அரபு எழுத்­துக்கள் கற்­பிக்­கப்­ப­டு­கின்­றன. இவ்­வாறே அரபுக் கல்­லூ­ரி­களில் இஸ்­லா­மிய கற்­கைகள் அரபு மொழியில் இருப்­பதால் அங்கு அரபு மொழி கற்­பிக்­கப்­ப­டு­கின்­றன. இவ்­வ­டிப்­ப­டையில் பாளி மொழிக்­கென தனி­யாக பல்­க­லைக்­க­ழகம் உள்­ளது. எப்­படி பாளி, சமஸ்­கி­ருதம் என்­பன வேத மொழி­க­ளாக உள்­ள­னவோ அவ்­வாறே அரபும் உயிர்­வாழும் அதிக மக்­களால் பேசப்­படும் வேத மொழி­யாக உள்­ளது.
பௌத்த, இந்து மதத்­தி­னர்கள் தமது மதம் சார்ந்த மொழியை கற்­பித்து அதைப் பரப்­பு­வதில் ஆர்வம் காட்­ட­வில்லை. அவர்­க­ளது வேத மொழியை அவர்கள் சார்ந்த சமூ­கத்­திற்கு கற்றுக் கொடுக்­க­வில்லை என்­ப­தற்­காக அரபு மொழிக்கும் அரபு மத்­ர­ஸாக்­க­ளுக்கும் எதி­ராகப் பேசு­வது ஆரோக்­கி­ய­மா­ன­தல்ல.

இலங்­கையில் ஏன் அதிக அரபு மத்­ர­ஸாக்கள் உள்­ளன என்ற கேள்­வியும் உள்­ளது. இலங்கை முஸ்­லிம்­க­ளிடம் தேவைக்­க­தி­க­மான மத்­ர­ஸாக்கள் உரு­வாக்­கி­யுள்­ளமை உண்­மை­யென்­றாலும், இது பிற­ச­மூக மக்கள் எதிர்க்க வேண்­டிய அம்­ச­மல்ல. பொது­வாக சிலர் பாட­சாலைக் கல்­வியில் நாட்டம் போதாமை, ஒழுக்க ரீதி­யான பிரச்­சி­னைகள், மார்க்­கத்தின் மீது கொண்ட பற்று என்­ப­வற்றால் இன்று அதி­க­மாக மத்­ர­ஸாக்­களில் இணைந்து வரு­கின்­றனர். குறிப்­பாக, ஒழுக்க ரீதி­யான சீர்­கே­டு­க­ளுக்குப் பயந்த பெற்றோர், பெண் பிள்­ளை­களை அதிகம் மத்­ர­ஸாக்­களில் இணைத்து வரு­கின்­றனர்.

பிற சமூக மக்­களும் மார்க்­கத்தைக் கற்க வேண்­டு­மென ஆர்­வப்­பட்டால் அவ­ரவர் சம­யத்தைப் போதித்க சமயக் கூடங்­களை நிறு­வு­வதில் எமக்கு எந்த ஆட்­சே­ப­னையும் இல்லை. முஸ்­லிம்கள் தமது மார்க்­கத்தைத் தாம் கற்று மத்­ர­ஸாக்­களை அமைப்­பதை இன­வா­திகள் ஏன் எதிர்க்க வேண்டும்?

அரபு மத்­ர­ஸாக்­களும் தேசத்­துக்­கான பங்­க­ளிப்பும்
இன்று இலங்­கையில் இயங்­கி­வரும் அரபு மத்­ர­ஸாக்­களில் கற்­ற­வர்கள் சமூ­கத்­திற்குப் பொறு­மை­யையும், சகிப்­புத்­தன்­மை­யையும், விட்டுக் கொடுப்­பையும் போதித்து வரு­கின்­றனர். உயர்­கல்வி மற்றும் அரச சேவைகள், கற்­பித்தல் போன்­ற­வற்றில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். அரபு மத்­ர­ஸாக்கள் நாட்­டுக்கு நல்ல பிர­ஜை­களை உரு­வாக்கி வரு­கின்­றன. நாட்­டுக்கு அந்­நிய செலா­வ­ணியைப் பெற்­றுத்­த­ரு­வ­திலும் இவர்­க­ளுக்குப் பங்­குள்­ளது. இவ்­வாறு அரபு மத்­ர­ஸாக்­களில் கற்று வெளி­யா­ன­வர்­களால் நாடும், சமூ­கமும் நல்ல பல அணு­கூ­லங்­களை அனு­ப­வித்து வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

அரபு மத்­ர­ஸாக்கள் தீவி­ர­வா­தத்தைப் போதிக்­கின்­றனவா?
இலங்கை, இந்­தியா போன்ற நாடு­களில் இந்தக் கேள்வி பல­மாக எழுந்­துள்­ளது. இதற்கு சிறு நியா­ய­மான கார­ணங்கள் இல்­லா­ம­லில்லை. இலங்கை ஏப்ரல் 21 தாக்­கு­தலின் முக்­கிய சூத்­தி­ர­தாரி அரபு மத்­ர­ஸாவில் கற்­றவர் என்ற அடிப்­ப­டையில் இந்த சந்­தேகம் வலு­வ­டைந்­துள்­ளது.

முதலில் இந்த தாக்­கு­தலில் சம்­பந்­தப்­பட்ட அனை­வரும் அரபு மத்­ர­ஸாக்­களில் கற்­ற­வர்கள் அல்லர். பல்­வேறு துறை­களில் உள்­நாட்­டிலும், வெளி­நாட்­டிலும் கற்­ற­வர்கள் இத­னுடன் சம்­பந்­தப்­பட்­டுள்­ளனர். அப்­ப­டி­யி­ருக்­கும்­போது மத்­ரஸா கல்­வியில் மட்டும் எப்­படி சந்­தே­கப்­பட முடியும்?

அடுத்து இவ­ரது இந்தப் பயங்­க­ர­வாத செயற்­பாட்­டுடன் இவ­ரது மத்­ர­ஸாவில் கற்ற வகுப்பு நண்­பர்­க­ளாக இருந்­த­வர்­கள்­கூட சம்­பந்­தப்­ப­ட­வில்லை எனும் போது, அவர் கற்ற மத்­ர­ஸாவில் தீவி­ர­வாதம் போதிக்­கப்­பட்­டி­ருக்க முடி­யுமா? இலங்­கையில் 250க்கும் அதி­க­மான மத்­ர­ஸாக்கள் உள்­ளன. அவை­களில் சில, நூறு வரு­டங்­களைத் தாண்­டியவை. 250க்கும் மேற்­பட்ட மத்­ர­ஸாக்­களில் பல வரு­டங்­க­ளாகப் படித்து வெளி­யே­றிய பட்­ட­தா­ரிகள், இடையில் வில­கி­ய­வர்கள் பல்­லா­யிரம் பேருக்கும் மத்­தியில் 10 அரபுக் கல்­லூரி பட்­ட­தா­ரி­க­ளைக்­கூட பயங்­க­ர­வா­தி­களால் ஈர்க்க முடி­ய­வில்லை என்றால் இந்த மத்­ர­ஸாக்கள் தீவி­ர­வாதத்­திற்கு எதி­ரான கல்­வி­யைத்தான் போதித்­துள்­ளன என்­பது மிக உறு­தி­யாகும்.

இந்த அரபு மத்­ர­ஸாக்­களில் கற்ற அறி­ஞர்கள் அன்­பையும், பொறு­மை­யையும், கட்டுக் கோப்­பையும் அதி­க­ம­திகம் போதித்­த­தால்தான் தீவி­ர­வா­தி­களால் மக்­களை ஈர்க்க முடி­யாமல் போனது. சில நண்­பர்­க­ளையும் குடும்ப உறுப்­பி­னர்­க­ளையும் மட்­டுமே அவர்­களால் ஈர்க்க முடிந்­தது.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக நூற்­றுக்­க­ணக்­கான இன­வாத செயற்­பா­டுகள் நடத்­தப்­பட்டு வந்த நிலை­யிலும், இஸ்­லாத்­திற்கு எதி­ரான கடு­மை­யான விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்டும் பயங்­க­ர­வா­தி­களால் மக்­களைத் திரட்ட முடி­யாது போன­மைக்கு அரபு மத்­ர­ஸாக்­களில் கற்ற மார்க்க அறி­ஞர்­களின் வழி­காட்­டல்­களே முக்­கிய கார­ண­மாகும். இந்த அடிப்­ப­டையில் அரபு மத்­ர­ஸாக்கள் தேசத்தின் பாது­காப்­பிற்குப் பாரிய பங்­காற்­றி­யுள்­ளன என்­பது கண்­கூடு.

இன்று இன­வா­தத்­தையும், மத­வா­தத்­தையும் மக்கள் மனங்­களில் பல மத­கு­ருக்கள் விதைத்து வரு­கின்­றனர். இதற்கு நிச்­ச­ய­மாக அவர்கள் பின்­பற்றும் மார்க்­கமோ அவர்­க­ளுக்கு மார்க்­கத்தைக் கற்றுக் கொடுத்த மத­பீ­டங்­களோ கார­ண­மாக இருக்க முடி­யாது. அவர்­களின் இயல்பும் குடும்ப மற்றும் சமூகப் பின்­ன­ணியும், அவர்­க­ளுக்குப் பின்­னா­லி­ருக்கும் தீய­சக்­தி­களும், சுய­வி­ருப்பு – வெறுப்­புக்­க­ளுமே முக்­கிய கார­ணங்­க­ளாக இருக்கும். இந்த அடிப்­ப­டையில் அரபு மத்­ர­ஸாக்­களில் கற்ற ஒருவர் தீவி­ர­வாத செயற்­பாட்டில் ஈடு­பட்­ட­தால்­அ­ரபு மத்­ர­ஸாக்கள் தீவி­ர­வாதத்தைப் போதிக்­கின்­றன என்ற குற்றச்சாட்டு போலியானதாகும்.

இன்று அரச அதிகாரிகள் இலஞ்சம் வாங்குகின்றனர். அவர்களுக்கு எந்தப் பாடசாலையில் இலஞ்சம் வாங்குமாறு போதிக்கப் பட்டது? அதிகாரிகள் ஊழல் செய்கின்றனர். மதகுருக்கள் மற்றும் உயர் அந்தஸ்த்திலுள்ளவர்கள்கூட பாலியல் குற்றத்தில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு எங்கும் இது போதிக்கப்படவில்லை. இருப்பினும் அவர்களது இயல்பு, குடும்பப் பின்னணி, சமூகக் கட்டமைப்பு, தவறான தொடர்புகள் போன்றவையே அவர்களை இந்நிலைக்கு உள்ளாக்குகின்றன.

தீவிரவாதம் சிலரது உள்ளத்திலும் உடம்பிலும் ஊறிப்போயுள்ளது. அது சிலரின் குறையே அல்லாமல் அவர்களுக்கு வழங்கப்பட்ட போதனையின் குறையல்ல. எனவே, அரபு மத்ரஸாவில் கற்ற ஒருவர் தீவிரவாத செயற்பாட்டில் ஈடுபட்டதற்காக அரபு மத்ரஸாக்களில் தீவிரவாதம் போதிக்கப்படுகின்றது என்ற குற்றச்சாட்டு அர்த்தமற்றது. இஸ்லாத்தின் வளர்ச்சி மீதும் முஸ்லிம்கள் அளவுக்குத் தமது மக்களை மார்க்க ஆர்வம் உள்ளவர்களாக ஆக்க முடியவில்லையே என்ற பொறாமையினாலும் எழுந்த போலிக் குற்றச்சாட்டே இதுவாகும்.

மத்ரஸா கல்வியில் பல மாற்றங்கள், திருத்தங்கள் தேவை என்பது முஸ்லிம் சமூகத்தின் உள்ளகப் பிரச்சினையாகும். மத்ரஸா கல்வித்திட்டத்தின் மீது சந்தேகம் இருந்தால் அதை அரசு இன, மதவாத போக்கில் இல்லாது நடுநிலை மனதுடன் கண்காணிப்பது வரவேற்கத் தக்கதே!-Vidivelli

  • ஷெய்க் இஸ்மாயில் ஸலபி

Leave A Reply

Your email address will not be published.