தீவிரவாதம் தலைதூக்காதிருப்பதற்கு முஸ்லிம் எம்.பி.க்கள் ஒன்றுபட்டு செயற்படுகின்றனர்.

நெதர்லாந்துத் தூதுவரிடம் ஹக்கீம் எடுத்துரைப்பு

0 795

தேர்தல் நெருங்­கி­வரும் சூழ்­நி­லையில், சிறிய மற்றும் சிறு­பான்மை அர­சியல் கட்­சிகள் சிவில் சமூக அமைப்­புகள் என்­ப­வற்­றையும் தொடர்­பு­ப­டுத்தி கூட்­டாக செயற்­ப­டு­வ­தற்­கான சாத்­தி­யக்­கூ­றுகள் பற்றி சீர்­தூக்கிப் பார்க்கும் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

அத்­துடன், சமூ­கத்தில் வன்­மு­றை­யோடு கூடிய தீவி­ர­வாதம் தலை­தூக்­காமல் இருப்­ப­தற்கு பாரா­ளு­மன்­றத்­தி­லுள்ள முஸ்லிம் உறுப்­பி­னர்­களை ஒன்­று­ப­டுத்தி பங்­க­ளிப்பு செய்­வது பற்­றிய முன்­னெ­டுப்­புகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. அதற்கு உறுப்­பி­னர்­க­ளி­ட­மி­ருந்து போதிய ஆத­ரவு தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் ஹக்கீம் கூறினார்.

இலங்­கைக்­கான நெதர்­லாந்துத் தூதுவர் டன்ஜா கொங்­ரிஜிப் நேற்று முன்­தினம் தம்மைச் சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டி­ய­போதே ரவூப் ஹக்கீம் இதனைத் தெரி­வித்தார்.

இதற்கு சற்று முன்னர் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் தூதுக் குழு­வி­னரும் முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்­கீமை சந்­தித்து உரை­யா­டி­யி­ருந்­தனர். அவர்­க­ளு­டனும் பல்­வேறு பய­னுள்ள கருத்­துக்­களை அவர் பரி­மா­றினார். தற்­போது இலங்கை வந்­துள்ள ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் குழு­வி­னரும், இங்­குள்ள அதன் பிர­தி­நி­தி­களும், அதில் பங்­கு­பற்­றினர்.

இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்கம், சகிப்­புத்­தன்மை, நாட்­டுப்­பற்று என்­ப­வற்றின் முக்­கி­யத்­துவம் பற்­றியும் உரை­யா­டப்­பட்­டன. தாம் செனகல் நாட்டில் நெதர்­லாந்தின் தூது­வ­ராக முன்னர் பணி­யாற்­றிய காலத்தில் பெரும்­பான்மை முஸ்லிம் மக்­க­ளுடன் பழ­கிய அனு­பவம் உண்­டெ­னவும் தூதுவர் கூறினார்.

நெதர்­லாந்துத் தூதுவர் டன்ஜா கொங்­ரிஜிப், பாரா­ளு­மன்­றத்­திலும் ஏனைய மட்­டங்­க­ளிலும் பெண்­களின் பிர­தி­நி­தித்­துவம் உரிய முறையில் இடம்­பெற வேண்­டி­யதன் அவ­சி­யத்தை கவ­னத்­திற்கு கொண்­டு­வந்தபோது, அதுபற்றிய விளக்கங்களை ஹக்கீம் வழங்கினார். பெண்களுக்கான தொழில் சந்தை வாய்ப்புகள், போதிய வேதனம் வழங்கப்படுதல், அவர்களது நலவுரிமைகள் பேணப்படுவதன் அவசியம் என்பன பற்றியும் பரஸ்பரம் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.