இவ்வருட ஹஜ் ஏற்பாடுகளில் ஹஜ் யாத்திரிகர்களின் கட்டண கொடுப்பனவுகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். கடந்த காலங்களில் போன்று ஹஜ் யாத்திரிகர்கள் ஊழல் மோசடிகளுக்கு உட்படுத்தப்படுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது’ என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ‘புனிதமான பயணம் ஒன்றினை மேற்கொள்ளும் யாத்திரிகர்கள் ஏமாற்றப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்த ஊழல் மோசடிகளிலிருந்து ஹஜ் யாத்திரிகர்களை எவ்வாறு காப்பாற்றுவது. அவர்கள் செலுத்தும் கட்டணங்களுக்கு எவ்வாறு உத்தரவாதம் வழங்குவது என்பது தொடர்பில் திணைக்களம் திட்டங்களை வகுத்து சில தினங்களில் அறிவிக்கவுள்ளது.
திணைக்களத்தின் திட்டங்களுக்கு ஹஜ் முகவர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஹஜ் யாத்திரிகர்கள் தாம் செலுத்தும் கட்டணத்துக்கு உரிய உயர்ந்த சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் திட்டங்கள் வகுக்கப்படவுள்ளன என்றார்.-Vidivelli
- ஏ. ஆர்.ஏ. பரீல்