Q ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் பிணக்கு இருப்பதாகவும், அரசாங்கத்துக்குள்ளேயே முரண்பாடுகள் நிலவுவதாகவும் இப்பொழுது நாங்கள் ஊடகங்களில் காண்கிறோம். அவற்றை நீங்கள் எவ்வாறு நோக்குகின்றீர்கள்?
வேறுபட்ட கொள்கைகளை கொண்ட பிரதான இரண்டு கட்சிகளை உள்ளடக்கிய தேசிய அரசாங்கத்தில் அடிக்கடி அதிர்வலைகள் ஏற்படுவதுண்டு. அரசியல் விவகாரங்களை பொறுத்தவரையில் சில வேறுபாடுகள் காணப்படலாம். அரசாங்கத்தின் பொருளாதாரம் மற்றும் நிதி முகாமைத்துவம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் மோதல்கள் இடம்பெறக் கூடாது என்பது தான் முக்கியமானதாகும். ஜனாதிபதியும் பிரதமரும் அவர்களது கட்சியை சேர்ந்தவர்களுக்கு பதிலளிக்க கடமைப்பட்டவர்கள். உள்ளக கட்டமைப்பு, அபிவிருத்தி போன்ற விடயங்களில் உடன்பாடின்மை ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். ஒரு விடயத்தை எடுத்துக் கொண்டால் அதனால் ஏற்படும் பிரதிபலனை பகிர்ந்துகொள்வதில் இவ்வாறு சம்பவிக்கின்றது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவின் ஆட்சிக் காலத்தில் 2002 – 2004 ஆம் ஆண்டுகளில் நாங்கள் அரசாங்கத்தின் பங்காளிகளாக சக வாழ்வு நடத்திய காலத்தில் இவ்வாறான அனுபவ