அமுலிலுள்ள வக்பு சட்டத்தில் திருத்தங்கள் துரிதப்படுத்தப்படும்

வக்பு சபையின் புதிய தலைவர் சப்ரி ஹலீம்தீன்

0 772

தற்­போது அமு­லி­லுள்ள வக்பு சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்கள் துரி­தப்­ப­டுத்­தப்­படும். கடந்த கால அர­சாங்­கத்தின் ஆட்சிக் காலத்தில் சிபா­ரிசு செய்­யப்­பட்­டுள்ள வக்பு சட்­டத்­தி­ருத்­தங்­களை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வுள்ளேன். இது தொடர்பில் பிர­த­மரும் கலா­சார அமைச்­ச­ரு­மான மஹிந்த ராஜபக் ஷவுடன் பேச்­சு­வார்த்­தை­களை நடாத்­த­வுள்ளேன் என வக்பு சபையின் புதிய தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் ‘விடி­வெள்ளி’ க்குத் தெரி­வித்தார்.

வக்பு சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்கள் தொடர்பில் வின­விய போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், ‘1956 ஆம் ஆண்டின் வக்பு சட்­டத்தில் இறு­தி­யாக 1982 ஆம் ஆண்டே திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. அதன் பிறகு திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. கடந்த கால அர­சாங்­கத்தின் காலத்தில் வக்பு சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யது.

திருத்­தங்­களைச் சிபா­ரிசு செய்­வ­தற்கு குழு­வொன்றும் நிய­மிக்­கப்­பட்­டது. அந்­தக்­கு­ழுவில் நானும் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தேன். கமிட்­டியின் திருத்த சிபா­ரி­சுகள் சட்ட வரைஞர் திணைக்­க­ளத்­துக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டது. அதன் பின்­னரே ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டது. இதனால் தாம­தத்­திற்­குள்­ளா­கி­யுள்ள வக்பு சட்­டத்­தி­ருத்­தங்­களைத் துரி­தப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முஸ்லிம் விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பான கலா­சார அமைச்சர் பிர­தமர் ஊடாக முன்­னெ­டுப்பேன்.

முஸ்லிம் சமூகம் தனி­மைப்­பட்­டி­ருப்­ப­த­னாலே பெரும்­பான்மை சமூ­கத்­தி­ன­ருடன் பிரச்­சி­னைகள் உரு­வா­கின்­றன. பள்­ளி­வா­சல்கள் இன நல்­லி­ணக்க நிலை­யங்­க­ளாக செயற்­பட வேண்டும். பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் விழிப்­பு­ணர்­வூட்­டப்­பட வேண்டும்.

இட­வ­ச­தி­க­ளுடன் கூடிய பள்­ளி­வா­சல்கள் சமூக மத்­திய நிலை­யங்­க­ளாக மாற்றம் பெற வேண்டும். பள்­ளி­வாசல் வளா­கத்தில் வாசி­க­சா­லைகள், சிறுவர் பூங்­காக்கள் அமைக்­கப்­பட வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து முஸ்லிம் சமூகம் ஏனைய சமூ­கங்­க­ளுடன் இணைந்து வாழ வேண்­டிய கட்­டாய நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளது. எனது பதவிக் காலத்தில் வக்பு சொத்­துக்­களைப் பாது­காப்­ப­திலும், இன நல்­லி­ணக்­கத்தைப் பலப்­ப­டுத்­து­வ­திலும் அதிக கவனம் செலுத்­துவேன்.

வக்பு சட்டம் எதிர்­வரும் காலங்­களில் கடு­மை­யாக அமுல்­ந­டாத்­தப்­படும். பள்­ளி­வாசல் நிர்­வா­கங்கள் தங்கள் பொறுப்­புக்­களை நேர்­மை­யாக முன்­னெ­டுக்க வேண்டும்’ என்றார்.

இதே­வேளை, வக்­பு­ச­பையின் முன்னாள் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம்.யாசீன் கருத்து தெரி­விக்­கையில் ‘எமது பத­விக்­கா­லத்தில் நாம் மேற்­கொண்ட வக்பு சட்­டத்­தி­ருத்­தங்­களை சட்­ட­மாக்கிக் கொள்­வ­தற்கு வக்பு சபையின் புதிய தலைவர் முன்­வ­ர­வேண்டும். புதிய தலைவர் அனு­ப­வ­முள்­ளவர். அவர் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி திற­மை­யா­னவர். அவர் தனது கட­மையைப் பொறுப்­பு­ணர்­வுடன் மேற்­கொள்வார் என்ற நம்­பிக்­கை­யுண்டு.
வக்பு சொத்­துகள் மக்­க­ளுக்­கு­ரி­யவை. அவை மக்­களின் நலன்­க­ளுக்கு பயன்­பட வேண்டும். அச்­சொத்­துக்கள் பாது­காக்­கப்­பட வேண்டும்.

எனது பத­விக்­கா­லத்தில் வக்பு சட்­டத்­தி­ருத்­தங்­களைச் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. திருத்த சிபாரிசுகள் சட்டவரைஞர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அத்திருத்தங்களை சட்டவரைஞர் திணைக்களம் சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்­துக்கு அனுப்பி வைக்­கப்­பட வேண்டும். சட்ட மா அதி­பரின் அங்­கீ­காரம் கிடைக்கப் பெற்ற பின்பே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்’ என்றார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.