சுதந்திர தின உரை மூலம் ஜனாதிபதி கோத்தாபய நாட்டின் மத சுதந்திரத்தை உறுதிப்படுத்தியுள்ளார்

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர்

0 670

எவரும் தனக்கு விருப்­ப­மான மதத்தை பின்­பற்றும் சுதந்­தி­ரத்தை உத்­த­ர­வா­தப்­ப­டுத்தும் மற்றும் தேசிய பாது­காப்பை வலுப்­ப­டுத்தும் அர­சாங்­கத்தின் நோக்­கத்தை ஜனா­தி­பதி தனது உரை­யின்­போது வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தமை வர­வேற்­புக்­கு­ரி­ய­தாகும்.

அந்த வகையில் நாட்டின் 72 ஆவது சுதந்­திர தினத்­தன்று ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ ஆற்­றிய உரை அனை­வ­ரதும் பாராட்டைப் பெற்­றுள்­ளதில் எவ்­வித சந்­தே­கமும் இல்­லை­யென முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யு­மானஎம்.எம். ஸுஹைர் தெரி­வித்­துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறி­யுள்­ள­தா­வது, ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ ஆற்­றிய சுதந்­திர தின உரையில் மக்­களின் சுதந்­தி­ரத்தை வலுப்­ப­டுத்தல், சட்­டத்தின் ஆட்­சிக்கு மதிப்­ப­ளித்தல், ஒரு குறிப்­பிட்ட சமூ­கத்­துக்கு மட்­டு­மன்றி அனைத்து மக்­க­ளுக்கும் தான் தலை­வ­ரென்றும் மதத்தைப் பின்­பற்றும் சுதந்­தி­ரத்தை உறு­தி­ய­ளித்­ததும் சக­ல­ரதும் பாராட்­டுக்­களைப் பெற்­றுள்­ளது. இவ்­வு­ரையில் நாட்டின் தேசிய பாது­காப்பு குறித்த அவ­ரது கொள்­கை­களும் சக­ல­ரையும் ஈர்த்­தி­ருக்கும் என்­பது உறுதி.

பொரு­ளா­தாரப் பிரச்­சி­னை­களை தீர்த்து உணவில் தன்­னி­றை­வ­டைதல், வறுமை, வேலை­யில்­லாமை ஆகிய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணல், இன, மத, வேறு­பா­டு­க­ளை­க­ளையும் அவ­ரது தெளி­வான சிந்­த­னை­களும் ஜனா­தி­ப­தியின் சுதந்­திர தின உரையில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.
நாட்டின் முன்­னேற்­றத்தை செம்மையாக நெறிப்படுத்தும் துணிச்சலான தலைமை எமது நாட்டுக்கு கிடைத்துள்ளமை, அவரது உரையில் தென்பட்டதாகவும் முன்னாள் எம்.பி. ஸுஹைர் தெரிவித்துள்ளார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.