மத்ரஸா பதிவுகளுக்கு இராணுவத்தினரை பயன்படுத்தி முஸ்லிம்களை அச்சுறுத்தாதீர்
தனித்து செயற்படாது முஸ்லிம் பிரதிநிதிகளிடம் பேச்சு நடத்துக என முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்து
குர்ஆன் மத்ரஸாக்கள், அரபுக் கல்லூரிகளை மீளப் பதிவு செய்து முழுமையான மறுசீரமைப்பொன்றை மேற்கொள்வதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக நாம் அறிகிறோம். குறித்த பதிவுகளுக்கு இராணுவத்தைப் பயன்படுத்துவதனூடாக முஸ்லிம் மக்களை அச்சுறுத்த வேண்டாமென கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 19 முஸ்லிம் உறுப்பினர்கள் இருக்கின்ற நிலையில் பிரதமர் தனித்து சுயாதீனமாக செயற்படாது மக்கள் பிரதிநிதிகளிடம் பேச்சு நடத்தி ஆலோசனை பெற்று செயற்பட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், 2015 ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கம் நிறுவப்பட்ட பின்னர் முஸ்லிம் சமய விவகார அமைச்சராகப் பதவிவகித்த ஹலீமின் முகாமைத்துவத்தின் கீழ் நாட்டிலுள்ள பெரும்பாலான குர்ஆன் மத்ரஸாக்களும் அரபுக் கல்லூரிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும், புதிதாக மீண்டும் பதிவு நடவடிக்கைகளை ஏன் மேற்கொள்ள வேண்டுமென்றும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டிலுள்ள அனைத்து மத்ரஸாக்களும் அரபுக் கல்லூரிகளும் கலாசார அமைச்சின் கீழுள்ள முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2015 க்கு முன்னர் மத்ரஸாக்கள் பதிவு செய்தல் மற்றும் அரபுக் கலாசாலைகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் தடைப்பட்டிருந்தன. அல்லது நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிடலாம். எனினும், நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னாள் அமைச்சர் ஹலீமின் முயற்சியினால் பெரும்பாலான மத்ரஸாக்களின் பதிவுகள் இடம்பெற்றன. இருந்தபோதிலும் இன்னும் பதிவுசெய்யப்படாத மத்ரஸாக்கள் இருப்பின் அவற்றை பதிவுசெய்து கொள்வதற்கான கால அவகாசத்தை அரசாங்கத்தால் வழங்க முடியும். இதனை தவிர்த்து அனைத்து மத்ரஸாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளையும் மீண்டும் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்திருப்பது வீணான கால விரயத்தையே ஏற்படுத்தும். அத்தோடு, அரசுக்கு மேலும் செலவீனத்தையும் ஏற்படுத்தக்கூடியதாக அமையும். எனவே, கடந்தகாலப் பதிவுகளை பேணுவது சிறப்பானதாக அமையும்.
இதுதவிர, தற்போது மத்ரஸாக்களை பதிவு செய்யும் நடவடிக்கைக்குப் பொறுப்பாக இராணுவ அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டிருக்கிறா
அத்துடன், மத்ரஸாக்கள் மறுசீரமைப்பு அல்லது ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் செய்வதாயின் அதனை பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி அவர்களின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கலாம். எனினும், தனித்து செயற்படுவது ஏற்புடையதல்ல. இதேவேளை, ஒருசில முஸ்லிம் சிவில் அமைப்புகளுடன் மாத்திரம் பேசி அரசாங்கத்தின் இரகசிய திட்டங்களை முன்னெடுப்பதானது ஆபத்தானதாகும். மத்ரஸா பதிவு நடவடிக்கைகளும் ஒழுங்குபடுத்தல் திட்டங்களும் வெளிப்படையானதாக இருக்க வேண்டும். முஸ்லிம் சமூகத்தை மறைமுகத் திட்டங்களினூடாகவும் இராணுவத்தின் ஊடாகவும் நசுக்க முற்படவேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார். -Vidivelli
|
|
|