சீனா முழுவதும் வைரஸ் பரவியது

உயிரிழப்பு 170 ஐ தாண்டியது: 7711 பேர் வரை பாதிப்பு , உலகளாவிய சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்துவதா என ஆராய்கிறது சுகாதார நிறுவனம்

0 824

திபெத் பிராந்­தி­யத்­திலும் கொரோனா வைரஸ் தொற்­றுக்கு ஒருவர் இலக்­கா­கி­யி­ருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. இது­வ­ரையில் அந்த வைர­ஸினால் மர­ண­ம­டைந்­த­வர்­களின் எண்­ணிக்கை 170 ஐ தாண்­டி­விட்­ட­தா­கவும், நேற்று வரையில் தொற்­றுக்கு உள்­ளா­கி­ய­தாக உறுதி செய்­யப்­பட்­ட­வர்­களின் எண்­ணிக்கை 7 ஆயி­ரத்து 711 என்றும் சீன சுகா­தார அதி­கா­ரிகள் தெரி­வித்­தி­ருக்­கின்­றனர். இத்­த­கைய சூழ்­நி­லையில் சீனப் பெரு­நி­லப்­ப­ரப்பின் சகல பகு­தி­க­ளையும் கொரோனா வைரஸ் சென்­ற­டைந்­தி­ருப்­ப­தாக அஞ்­சப்­ப­டு­கி­றது.

அதே­வேளை ஆரம்­பத்தில் கொரோனா வைரஸின் தாக்­கத்தைப் பெரி­து­ப­டுத்­தாத உலக சுகா­தார ஸ்தாபனம் உலகின் சகல அர­சாங்­கங்­க­ளையும் விழிப்­புடன் இருக்­கு­மாறு எச்­ச­ரிக்கை செய்­தி­ருப்­ப­துடன், உல­க­ளா­விய சுகா­தார அவ­சர நிலையைப் பிர­க­ட­னப்­ப­டுத்­து­வதா இல்­லையா என்­பது குறித்து தீர்­மா­னிக்க அந்த ஸ்தாப­னத்தின் அவ­சர நிலைமை கமிட்டி நேற்­றைய தினம் கூடி ஆராய்ந்­தது. சீனா­விற்கு வெளியே ஜப்பான், ஜேர்­மனி, கனடா மற்றும் வியட்­நாமில் மனி­த­ரி­லி­ருந்து மனி­த­ருக்கு கொரோனா வைரஸ் தொற்­றி­யி­ருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டி­ருப்­பது பெரும் கவலை தரு­வ­தாக உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் அவ­சர நிலை நட­வ­டிக்கை பிரிவின் தலைவர் டாக்டர். மைக்கேல் றியான் கூறி­யி­ருக்­கின்றார்.

சீனா­விற்கு வெளியே கொரோனா வைரஸ் தொற்­றுக்­குள்­ளா­ன­வர்­களின் எண்­ணிக்கை ஒப்­பீட்­ட­ளவில் இன்­னமும் கூட சிறி­ய­தாக இருக்­கின்ற போதிலும், பெரி­ய­ளவில் உலக நாடு­களில் இந்த வைரஸ்­தொற்று பரவக் கூடிய வாய்ப்­பி­ருப்­ப­தா­கவும் றியான் தெரி­வித்தார். ஏற்­க­னவே இந்த வைரஸ் உலகின் 18 நாடு­க­ளுக்குப் பர­வி­யி­ருக்­கி­றது.

அமெ­ரிக்­காவும் , ஜப்­பானும் அவற்றின் பிர­ஜை­களை சீனாவில் இருந்து அப்­பு­றப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களை புதன்­கி­ழ­மையே ஆரம்­பித்­தி­ருந்­தன. மற்­றைய நாடுகள் வாடகை விமா­னங்­களை வூஹான் நக­ருக்கு அனுப்­பு­வ­தற்குத் தயா­ரா­கு­கின்­றன. ஆனால் சீன அதி­கா­ரி­க­ளி­ட­மி­ருந்து அனு­மதி பெறு­வதில் ஏற்­படும் தாமதம் இந்த நட­வ­டிக்­கை­க­ளுக்கு இடை­யூ­றாக இருப்­ப­தாக செய்­திகள் கூறு­கின்­றன.

பிரிட்டிஷ் நாட்­டுக்கு ஏற்றிச் செல்­வ­தற்­காக வந்­தி­றங்­கிய பிரிட்டிஷ் விமா­ன­மொன்று திட்­ட­மிட்­ட­படி வியா­ழக்­கி­ழமை புறப்­பட இய­லாத நிலையில் இருப்­ப­தா­கவும் சாத்­தி­ய­மா­ன­ளவு விரைவில் ஐக்­கிய இராச்­சி­யத்­திற்­கு­ரிய விமா­னங்கள் பறப்­ப­தற்கு அவ­சி­ய­மான நட­வ­டிக்­கை­களில் இறங்­கி­யி­ருப்­ப­தா­கவும் பிரிட்டிஷ் வெளி­யு­றவு அமைச்சு அறி­வித்­துள்­ளது.

அவுஸ்­ரே­லி­யா­விற்கு அதன் நூற்­றுக்­க­ணக்­கான பிர­ஜை­களை அப்­பு­றப்­ப­டுத்­து­வ­தற்கு சீன அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து இன்­னமும் அனு­மதி கிடைக்­க­வில்லை. நியூ­ஸி­லாந்து அதன் அயல்­நா­டு­க­ளி­லி­ருந்து புறம்­பான மீட்­புப்­ப­ணி­யொன்றை ஆரம்­பித்­தி­ருக்­கின்ற போதிலும் அது­கு­றித்த கால அட்­ட­வணை எதுவும் தெரி­ய­வில்லை.

பிரான்ஸ், தென்­கொ­ரியா மற்றும் ஏனைய நாடு­களும் சீனா­வி­லி­ருந்து அதன் பிர­ஜை­களை வெளி­யேற்றிக் கொண்­டி­ருக்­கின்­றன. அல்­லது வெளி­யேற்­று­வ­தற்­கான திட்­டங்­களை வகுத்துக் கொண்­டி­ருக்­கின்­றன. சுமார் 250 பிரெஞ்சு பிர­ஜை­களும், ஏனைய ஐரோப்­பிய நாடு­களைச் சேர்ந்த 100 பேரும் இரு பிரெஞ்சு விமா­னங்­களில் இவ்­வாரம் வூஹா­னி­லி­ருந்து ஏற்றிச் செல்­லப்­பட்­டனர்.

உல­க­ளா­விய வர்த்­தக  நட­வ­டிக்­கை­களில் தாக்கம்

இது இவ்­வா­றி­ருக்க, கொரோனா வைரஸ் பரவல் உல­க­ளா­விய வர்த்­தக நட­வ­டிக்­கை­களில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்த ஆரம்­பித்­தி­ருக்­கி­றது. பிரிட்டிஷ் எயார்வேஸ் உட்­பட பல விமா­ன­சே­வைகள் சீனா­விற்­கான சேவை­களை இடை­நி­றுத்­தி­யி­ருக்­கின்ற அதே­வேளை டொயோட்டா, ஐகீயா, ஸ்டார் பக்ஸ், ரெல்ஸா மற்றும் மக்­டொனால்ஸ் உட்­பட பாரிய கம்­ப­னிகள் அவற்றின் உற்­பத்­தி­களைத் தற்­கா­லி­க­மாக முடக்­கு­வ­தற்கு அல்­லது சீனா­வி­லுள்ள அவற்றின் பெரும் எண்­ணிக்­கை­யி­லான விற்­பனை நிலை­யங்­களை மூடு­வ­தற்குத் திட்­ட­மிட்­டி­ருக்­கின்­றன. சீன உதை­பந்­தாட்ட சங்கம் உள்­நாட்டில் சகல ஆட்­டங்­க­ளையும் பிற்­போட்­டி­ருக்­கி­றது.

வூஹா­னி­லி­ருந்து புதன்­கி­ழமை நாட்­டுக்கு ஏற்­றிச்­செல்­லப்­பட்ட சுமார் 200 அமெ­ரிக்­கர்கள் தெற்கு கலி­போர்­னியா இரா­ணு­வத்­த­ளத்தில் 3 நாள் மருத்­துவப் பரி­சோ­த­னைக்கும், கண்­கா­ணிப்­பிற்கும் உள்­ளாகி வரு­கின்­றனர்.
ஜப்­பானில் புதன்­கி­ழமை சீனா­வி­லி­ருந்து அழைத்­து­வ­ரப்­பட்ட 206 பேரில் மூவர் மீது நடத்­தப்­பட்ட பரி­சோ­தனை, அவர்­க­ளுக்கு கொரோனா வைரஸ் தொற்­றி­யி­ருப்­பதை உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. ஜப்­பானில் இது­வரை 11 பேர் அந்த வைரஸ் தொற்­றுக்கு இலக்­கா­கி­யி­ருப்­பது உறு­தி­செய்­யப்­பட்­டுள்­ளது. 210 பேரைக் கொண்ட இரண்­டா­வது குழு வியா­ழக்­கி­ழமை காலை டோக்­கியோ வந்­த­டைந்­தது.

தாய்­வானில் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்­றி­யி­ருப்­ப­தாக உறு­தி­செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது. சீனாவின் ஹுபே மாகா­ண­வா­சிகள் தாய்­வா­னுக்குப் பிர­வே­சிப்­ப­தற்குத் தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ளது. இதே­வேளை, ஆசி­யாவின் பல நாடுகள் இரண்­டா­வது முனை­யொன்றில் இந்த வைர­ஸுக்கு எதி­ராகப் போரா­டிக்­கொண்­டி­ருக்­கின்­றன. அதா­வது வைர­ஸினால் பாதிக்­கப்­பட்ட பகு­திகள் மற்றும் இறந்­தோரின் எண்­ணிக்கை தொடர்பில் இணை­யத்­தள வதந்­தி­களின் பர­வலை எதிர்த்தே அந்தப் போராட்டம் இடம்­பெ­று­கி­றது.

கப்­பலில் 6000 பய­ணிகள் கடலில் தடுத்­து­வைப்பு

மக்­கோவூ தீவைச்­சேர்ந்த பெண்­ணொ­ருவர் கொரோனா வைரஸின் தொற்­றுக்கு இலக்­கா­கி­யி­ருப்­ப­தாகச் சந்­தேகம் ஏற்­பட்­ட­தை­ய­டுத்து, ரோமுக்கு அண்­மை­யாக பய­ணிகள் கப்­ப­லொன்று 6000 பேருடன் கரையை வந்­த­டை­வ­தற்குத் தடை­வி­திக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

சீனா­வு­ட­னான 4300 கிலோ­மீற்றர் தூர­கி­ழக்கு எல்­லையை ரஷ்யா மூடி­யி­ருக்­கி­றது. இதே­வேளை வூஹானில் கல்­வி­கற்ற தென்­னிந்­தி­யாவின் கேரள மாநி­லத்தைச் சேர்ந்த மாண­வ­னொ­ரு­வ­னுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்­பட்­டி­ருப்­ப­தாக இந்­தியா உறு­தி­செய்­தி­ருக்­கி­றது. அந்த மாண­வனே இந்­தி­யாவில் தொற்­றுக்கு இலக்­கான முதல் நப­ராவார்.

சீனாவின் நட­வ­டிக்­கை­க­ளுக்குப் பாராட்டு

கொரோனா வைரஸ் தொற்றுப் பர­வலைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கும், வெளி­நா­டு­க­ளுக்கு அது பர­வு­வதைத் தடுப்­ப­தற்கும் சீனா எடுத்த மிகவும் உறு­தி­யான நட­வ­டிக்­கை­க­ளுக்­காக சர்­வ­தேச சமூகம் அந்த நாட்­டுக்கு நன்­றிக்­க­டன்­பட்­டி­ருக்­கி­றது என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் ரெட்றோஸ் அதானொம் கேப்ரிசஸ் ஜெனீவாவில் வியாழன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கூறினார்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு விசேட நடவடிக்கைகளை எடுத்தமைக்காக சீன அரசுக்கு அவர் நன்றி தெரிவித்தார். வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களில் 99 சதவீதமானவர்கள் சீனாவிற்குள் இருந்தவர்களே. இதன்விளைவாக மரணங்களும் கூட சீனாவிற்குள்ளேயே இடம்பெற்றுள்ளன. சீனாவிற்கு வெளியே 18 நாடுகளில் 68 பேருக்கு மாத்திரமே தொற்று ஏற்பட்டதாகவும், எவரும் மரணிக்கவில்லை என்றும் ரெட்றோஸ் தெரிவித்தார். ‘மிகவும் கடுமையான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியதற்காக சீனாவை நாம் பாராட்டுகிறோம். சீனாவிற்கு நாம் நன்றியுடையவர்களாக இருக்கவேண்டும்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.