கொரோனா வைரஸினால்: பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனையில் ஈடுபடவும்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

0 689

கொரோனா வைர­ஸினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­காக பிரார்த்­திக்குமாறு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா கோரியுள்­ளது.

இது தொடர்பில் அ.இ.ஜ.உ.வின் பொதுச் செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபா­றக்­கினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, உல­க­ளா­விய ரீதியில் மக்­களை அச்­சத்­துக்­குள்­ளாக்­கி­யுள்ள கொரோனா வைர­ஸினால் சீனா உட்­பட பல நாடு­களில் பலர் பாதிக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­வ­துடன், இது­வரை சிலர் உயி­ரி­ழந்­துள்­ளார்கள். மர­ணித்­த­வர்­களின் குடும்­பங்­க­ளுக்கு ஆழ்ந்த அனு­தா­பங்­களை தெரி­விப்­ப­துடன் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் விரைவில் குண­ம­டைய வேண்­டு­மென அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா பிரார்த்­திக்­கின்­றது.

இது­போன்ற சந்­தர்ப்­பங்­களில் அல்­லாஹ்வின் அன்­பையும் அரு­ளையும் நெருக்­கத்­தையும் பெற்­றுத்­த­ரக்­கூ­டிய வணக்க வழி­பா­டு­க­ளிலும், நற்­கா­ரி­யங்­க­ளிலும் ஈடு­ப­டு­மாறும், தற்­போது நிலவும் அசா­தா­ரண நிலை நீங்கி பாதிக்­கப்­பட்ட நாடுகள் தமது வழ­மைக்குத் திரும்­பு­வ­தற்­காக பிரார்த்­த­னை­களில் ஈடு­ப­டு­மாறும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா அனை­வ­ரையும் அன்­புடன் வேண்டிக் கொள்­கின்­றது.

இவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களில் வீணான பதி­வு­களை சமூக வலைத்­த­ளங்­களில் பதிவு செய்­வ­தா­னது வீண் பிரச்­சி­னை­களை தோற்­று­விக்­கவும், மக்கள் மத்­தியில் அச்­சத்தை ஏற்­ப­டுத்­தவும் கார­ண­மாக அமை­கின்­றன. எனவே, இவ்­வா­றன விட­யங்­க­ளி­லி­ருந்து தவிர்ந்து நடந்து கொள்­ளு­மாறும் வேண்டிக் கொள்­கி­றது.

மேலும், மக்­களின் நல­னுக்­காக சுகா­தார அதி­கா­ரி­க­ளினால் வழங்­கப்­படும் ஆலோ­ச­னை­களை கடைப்­பி­டிப்­ப­துடன் இவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களில் நோய் இருக்­கின்ற இடங்­க­ளுக்கு செல்­வதை தவிர்ந்து கொள்­ளு­மாறு இஸ்லாம் எமக்கு வழி­காட்­டி­யுள்­ளது. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரழி­யல்­லாஹு அன்ஹு அவர்கள், கூறு­கி­றார்கள் இறைத்­தூதர் ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘ஓர் ஊரில் கொள்ளை நோய் பர­வி­யி­ருப்­ப­தாக நீங்கள் கேள்­விப்­பட்டால் அந்த ஊருக்கு நீங்­க­ளாகச் செல்­லா­தீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்­கும்­போது அங்கு கொள்­ளைநோய் பர­வினால் அதி­லி­ருந்து (அவ்­வூ­ரை­விட்டு) வெளி­யே­றா­தீர்கள்” என்று சொல்ல கேட்டேன் என கூறி­னார்கள். (புஹாரி 5729)

மேலும், இது­போன்ற சந்­தர்ப்­பங்­களில் நபி ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத் தந்த பின்­வரும் துஆவை நாம் அதி­க­மாக ஓதி வர­வேண்டும்.

யா அல்லாஹ்! வெண்­குஷ்டம், பைத்­தியம், தொழுநோய் மற்றும் மோசமான நோய்களில் இருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். (அபூதாவூத் 1554)

எனவே, இவ்வாறான நோய்கள், அனர்த்தங்கள் போன்ற சோதனைகளிலிருந்து அல்லாஹுதஆலா நம் அனைவரையும் பாதுகாப்பானாக என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.