பயங்கரவாத சந்தேக நபரை விடுவிக்க அழுத்தம் பிரயோகித்த விவகாரம்: ரிஷாத்துக்கு எதிராக விசாரணை ஆரம்பம்

நீதிமன்றுக்கு அறிவித்தது மேல்மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவு, பயங்கரவாத தடை சட்டம், ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் கீழ் நடவடிக்கை

0 912

கைது செய்­யப்­பட்ட பயங்­க­ர­வாத சந்­தேக நபர் ஒரு­வரை விடு­விக்க பாது­காப்புத் தரப்­புக்கு அழுத்தம் பிர­யோ­கித்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ராக சிறப்பு விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரி­வினர் நேற்று கொழும்பு பிர­தான நீதி­வா­னுக்கு அறி­வித்­தனர். 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் 2,3,4,5 ஆம் அத்­தி­யா­யங்­களின் கீழும் 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில்,அர­சியல் உரி­மைகள் தொடர்­பி­லான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் (ஐ.சி.சி.பி.ஆர்.) 3 (1), 3 (2) ஆம் அத்­தி­யா­யங்­களின் கீழும் தண்­டனை சட்டக் கோவையின் 486 ஆம் அத்­தி­யா­யத்தின் கீழும் தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மொன்றைப் புரிந்­துள்­ளா­தாகக் கரு­தியே இந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

இது­கு­றித்து சட்­டத்­த­ரணி பிரே­மநாத் சி தொல­வத்த பொலிஸ் தலை­மை­ய­கத்தில் செய்த முறைப்­பாடு, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஊடாக மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ரிடம் கைய­ளிக்­கப்­பட்டு அவ­ரின்கீழ் மேல் மாகாண தெற்கு குற்­றத்­த­டுப்புப் பிரிவின் பணிப்­பா­ளரின் ஆலோ­ச­னைக்­க­மைய விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக நேற்று கொழும்பு பிர­தான நீதிவான் லங்கா ஜய­ரத்­ன­வுக்கு அந்த விசா­ரணைப் பிரி­வி­னரால் அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டது.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லை­ய­டுத்து கைது செய்­யப்­பட்ட பயங்­க­ர­வாத சந்­தேக நபரை விடு­விக்க அப்­போ­தைய அமைச்­ச­ரான ரிஷாத் பதி­யுதீன், அப்­போ­தைய இரா­ணுவத் தள­பதி மகேஷ் சேன­நா­யக்­க­வுக்கு தொலை­பே­சியில் அழைத்­தமை சட்­டத்தின் ஆட்சி மீதான பாரிய தாக்­கு­த­லென முறைப்­பாட்­டாளர் தமது முறைப்­பாட்டில் தெரி­வித்­துள்­ள­தா­கவும், இதே­போன்று மேலும் பல பயங்­க­ர­வாத சந்­தேக நபர்­களை விடு­விக்க ரிஷாத் பதி­யுதீன் அழுத்தம் கொடுத்­தாரா என்­பது குறித்தும் தேட வேண்­டு­மென அவர் கோரி­யுள்­ள­தா­கவும் பொலிஸார் மன்­றுக்கு நேற்று விஷேட அறிக்­கை­யூ­டாகத் தெரி­வித்­தனர்.

இந்­நி­லையில் ரிஷாத் பதி­யுதீன் சந்­தேக நபரை விடு­விக்க அழுத்தம் கொடுத்­தமை தொடர்பில் அப்­போ­தைய இரா­ணுவத் தள­பதி செய்­தி­யாளர் சந்­திப்­பொன்­றினை நடாத்தி வெளி­யிட்ட கருத்­துக்கள் ஊட­கங்­களில் வெளி­யான நிலையில், அவற்றை ஒளி­ப­ரப்­பிய 5 ஊடக நிறு­வ­னங்­க­ளி­லுள்ள செம்­மைப்­ப­டுத்­தப்­ப­டாத அந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் காணொ­லி­களை விசா­ர­ணை­க­ளுக்கு சமர்ப்­பிக்க உத்­த­ர­விட வேண்­டு­மென இதன்­போது விசா­ர­ணை­யா­ளர்­களால் நீதிவானிடம் கோரப்பட்டது.

அந்தக் கோரிக்கைக்கு அனுமதியளித்த பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன, இந்த விவகாரத்தில் விசாரணைகளை முன்னெடுத்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்க மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிட்டார். -Vidivelli

  • எம்.எப்.எம்.பஸீர்

Leave A Reply

Your email address will not be published.