நாட்டிலுள்ள சிறுவர்கள் குறைந்த வயதில் திருமணம் செய்துகொள்வதைத் தடுக்கும் வகையில் பதினெட்டு வயதை ஆகக் குறைந்த திருமண வயதாக அறிமுகப்படுத்தும் தனிநபர் சட்டமூலமொன்று பாராளுமன்ற உறுப்பினர் துஸிதா விஜேமான்னவினால் நேற்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்தச் சட்டமூலத்துக்கு அமைய திருமணத்துக்கான ஆகக்குறைந்த வயது அடையா ளப்படுத்தப்படுவதுடன்¸ இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்படும்.
இந்தச் சட்டம் வலுவுக்கு வந்த பின்னர் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட திருமணம் எதுவும் குறித்த திருமணத்துக்குரிய இரண்டு தரப்பினர்களும் பதினெட்டு வயதைப் பூர்த்திசெய்யாதவிடத்து செயல்லுபடியாகாது. அத்துடன்¸ வயது¸ இனம்¸ மதம்¸ மொழி¸ சாதி¸ பால்¸ அரசியல் கொள்கை அல்லது அத்தகைய காரணங்களுள் ஏதேனும் ஒன்றைப் பொருட்படுத்தாது இலங்கை அதன் அனைத்து பிரசைகளுக்கும் சட்டத்தின் சமமான பாதுகாப்பை உத்தரவாதமளிக்க வேண்டும் என்றும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறைந்த வயதில் மேற்கொள்ளப்படும் திருமணங்களைக் காரணமாகக் கொண்டு சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவது மற்றும் உடல், உளரீதியான வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுவதைத் தடுக்கும் வகையிலேயே இந்தத் தனிநபர் சட்டமூலத்தை சமர்ப்பித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் துஸிதா விஜேமான்ன தெரிவித்துள்ளார்.-Vidivelli