தேசிய கீதத்தை இரு மொழிகளில் பாடுவது இனங்களுக்கு மத்தியில் பிரிவை ஏற்படுத்தும்

அஸ்கிரிய பீடத்தின் பிரதான பதிவாளர்

0 733

நாட்டை இரு துண்­டு­க­ளாக்க எந்த ஒரு அர­சி­யல்­வா­தி­யா­வது நட­வ­டிக்கை எடுப்­பா­ராயின் அவ­ருக்கு எதி­ராக சட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மென்று அஸ்­கி­ரிய பீடத்தின் பிர­தான பதி­வாளர் மெத­கம தம்­மா­கந்த தேரர் தெரி­வித்தார்.

கண்­டியில் நடத்­தப்­பட்ட ஊடக சந்­திப்­பிலே அவர் இதனைத் தெரி­வித்தார்.அவர் மேலும் ​தெரி­வித்­த­தா­வது, எமது நாட்டை ஒரு தனி ஆட்­சி­யாக முன­்னெ­டுத்துச் செல்­லவே அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இருப்­பினும் குறிப்­பாக எமது தேசிய கீதம் தொடர்­பான விட­யங்கள் பற்றி சற்று சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது. இந்­தி­யா­வி­லுள்ள சில பிரி­வி­னை­வா­திகள் அதற்கு அழுத்தம் கொடுத்து வரு­கின்­றனர்.

தேசிய கீதம் என்­பது நாட்­டி­லுள்ள சகல பிரி­வி­னரும், சகல மதத்­தி­ன­ருக்கும் பொருத்­த­மாக சகல இனங்­களும் ஒன்­றி­ணைந்து ஏற்­ப­டுத்­திக்­கொண்ட ஒரு தனி விட­ய­மாகும். ஆனால், இன ரீதி­யாக வெவ்­வேறு மொழி­களில் அது பாடப்­ப­டு­மாயின் தேசியம் என்ற வகையில் அது இனங்­க­ளுக்கு மத்­தியில் பிரிவை ஏற்­ப­டுத்தும்.

இது வேண்­டு­மென்றே நாட்டைத் துண்­டாட எடுக்கும் ஒரு முயற்­சி­யாகக் காண­மு­டி­கி­றது. எனவே, அதனை வன்­மை­யாகக் கண்­டிக்­கிறேன். அர­சி­யல்­வா­திகள் அவ்வாறு நடவடிக்கை எடுப்பார்களாயின் அவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றார்.-Vidivelli

  • ஜே.எம்.ஹபீஸ்

Leave A Reply

Your email address will not be published.