ஹிஜாப் அணிந்து வந்த மாணவிக்கு பட்டமளிப்பு விழாவில் அனுமதி மறுப்பு

தங்கப் பதக்கத்தை ஏற்க மறுத்தார்; புதுச்சேரியில் சம்பவம்

0 883

தென்­னிந்­திய, புதுச்­சே­ரியில் குடி­ய­ரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்­து­கொண்ட பட்­ட­ம­ளிப்பு விழாவில் ஹிஜாப் அணிந்­தி­ருந்த இஸ்­லா­மிய மாண­வியை வெளி­யேற்­றிய சம்­பவம் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

புதுச்­சேரி பல்­க­லைக்­க­ழ­கத்தின் 27ஆவது பட்­ட­ம­ளிப்பு விழா நேற்று பல்­க­லைக்­க­ழக வளா­கத்­தி­லுள்ள ஜவ­ஹர்லால் நேரு அரங்கில் நடை­பெற்­றது. அதில் குடி­ய­ரசுத் தலை­வரும், புதுச்­சேரி பல்­க­லைக்­க­ழ­கத்தின் வேந்­த­ரு­மான ராம்நாத் கோவிந்த் முதன்மை விருந்­தி­ன­ராகக் கலந்­து­கொண்டு மாண­வர்­க­ளுக்குப் பட்­டங்­க­ளையும் பதக்­கங்­க­ளையும் வழங்­கினார்.விழாவில் முதல்வர் நாரா­ய­ண­சாமி, கவர்னர் கிரண்­பேடி, பல்­க­லைக்­க­ழ­கத்தின் துணை­வேந்தர் குர்மீத் சிங் ஆகியோர் கலந்­து­கொண்­டனர். அப்­போது தகவல் தொடர்­பியல் துறையில் முது­நிலைப் பட்­டத்தில் தங்கம் வென்ற கேரள இஸ்­லா­மிய மாணவி ரபீ­ஹாவின் தலையில் இருந்த ஹிஜாபை அகற்­றும்­படி பாது­காப்பு அதி­கா­ரிகள் வற்­பு­றுத்­தினர்.

ஆனால், அதை ஏற்க மறுத்த மாணவி ரபீஹா, “வேண்­டு­மானால் என்னை இன்­னொரு முறை சோதனை செய்து கொள்­ளுங்கள். நான் ஏன் அதைக் கழற்ற வேண்டும்” என்று அவர்­க­ளிடம் கேள்வி எழுப்­பினார். ஆனால், அவர் கோஷம் போட்­டு­வி­டுவார் என்று நினைத்த பாது­காப்பு அதி­கா­ரிகள் அவரை அங்­கி­ருந்து வலுக்­கட்­டா­ய­மாக வெளி­யேற்­றினர்.

விழா அரங்கின் வெளியே நிறுத்­தப்­பட்ட அவர், குடி­ய­ரசுத் தலைவர் விழாவை முடித்­து­விட்டுச் சென்ற பிறகே, உள்ளே அனு­ம­திக்­கப்­பட்டார். குடி­ய­ரசுத் தலைவர் சென்­ற­தை­ய­டுத்து பல்­க­லைக்­க­ழ­கத்தின் இயக்­குநர் ராஜீவ் ஜெயின் மற்ற மாண­வர்­க­ளுக்குப் பட்­டமும், பதக்­கங்­க­ளையும் வழங்­கினார்.

தொடர்ந்து மாணவி ரபீஹா அழைக்­கப்­பட்­டதால் மேடை­யே­றிய அவர் பட்­டத்தை மட்டும் பெற்­றுக்­கொண்டார். தங்கப் பதக்­கத்தை வாங்க அவர் மறுத்­து­விட்டார். மேடை­யி­லி­ருந்த அனை­வரும் வாங்­கிக்­கொள்­ளும்­படி திரும்பத் திரும்பக் கூறியும் அதை வாங்க மறுத்த அவர், “குடி­யு­ரிமைச் சட்­டத்தை எதிர்த்துப் போராடிக் கொண்­டி­ருக்கும் எனது சகோ­தர சகோ­த­ரி­களின் உணர்­வு­க­ளுக்கு மதிப்­ப­ளித்து இதை நான் ஏற்க விரும்­ப­வில்லை” என்று கூறி­விட்டு அங்­கி­ருந்து நகர்ந்தார்.

தொடர்ந்து செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசிய மாணவி ரபீஹா, “கேரள மாநிலம் கோழிக்­கோட்டைச் சேர்ந்த நான், படிப்பு நிறைவு செய்து தங்கப் பதக்கம் வென்­றி­ருந்தேன். விழா தொடங்கும் முன்பு என்னை அரங்­கி­லி­ருந்து வெளி­யேற்றி தனியே அம­ர­வைத்­தனர். நான் ஹிஜாப் அணிந்­தது குற்­றமா எனத் தெரி­ய­வில்லை. தலையில் அணிந்­தி­ருந்த ஹிஜாபை அகற்­றும்­படி கூறி­னார்கள். அதற்கு நான் மறுப்பு தெரி­வித்தேன். என்னை உடனே வெளியே அழைத்து வந்­து­விட்­டார்கள். எதற்­காக என்னை வெளி­யேற்­றி­னார்கள் என்று தெரி­ய­வில்லை. குடி­யு­ரிமை சட்டத் திருத்தம் தொடர்­பாகப் போராட்­டத்தில் மாண­வர்கள் அமை­தி­யாக நடத்தி வரு­கின்­றனர். என்னை வெளி­யேற்றி தனி­யாக அம­ர­வைத்­தது அவ­மா­னப்­ப­டுத்­தி­யதை மேடையில் தெரி­வித்து, எனது தங்கப் பதக்கத்தை வாங்க மறுத்துவிட்டேன். பட்டத்தை மட்டும் பெற்றேன்.குடியரசுத் தலைவர் அங்கிருந்து சென்ற பிறகே என்னை உள்ளே அனுமதித்தார்கள். போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் எனது சகோதர சகோதரிகளுக்காக அந்தப் பதங்கத்தை நான் வாங்கவில்லை” என்றார்.-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.