அனைத்து நிர்வாக மாவட்டங்களின் பாதுகாப்பு முப்படையினர் வசம்
விசேட வர்த்தமானியில் நேற்று ஜனாதிபதி கைச்சாத்து
நாட்டின் அமைதியை பாதுகாக்கும் வகையில் அனைத்து நிர்வாக மாவட்டங்களுக்கும் முப்படையினரை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ அனுப்பி வைத்துள்ளார். இதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் அரசியலமைப்பின் 40 ஆம் அத்தியாயத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தில் 12 ஆம் பிரிவின் பிரகாரம் ஆயுதம் தாங்கிய படையின் சகல உறுப்பினர்களையும் நாட்டு மக்களின் அமைதியை பேணுவதற்கு அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பணியில் ஈடுபடுத்த ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு நிர்வாக மாவட்டமும் அதனை அண்மித்துள்ள ஆட்புல நிலப்பரப்புக்களும், கம்பஹா நிர்வாக மாவட்டமும் அதனை அண்மித்துள்ள ஆட்புல நிலப்பரப்புக்களும், களுத்துறை நிர்வாக மாவட்டமும் அதனை அண்மித்துள்ள ஆட்புல நிலப்பரப்புக்களும் கண்டி நிர்வாக மாவட்டம், மாத்தளை நிர்வாக மாவட்டம், நுவரெலியா நிர்வாக மாவட்டம், காலி நிர்வாக மாவட்டமும் அதனை அண்மித்துள்ள ஆட்புல நிலப்பரப்புக்களும், மாத்தறை நிர்வாக மாவட்டமும் அதனை அண்மித்துள்ள ஆட்புல நிலப்பரப்புக்களும், அம்பாந்தோட்டை நிர்வாக மாவட்டமும் அதனை அண்மித்துள்ள ஆட்புல நிலப்பரப்புக்களிலும் முப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுவர்.
மேலும், யாழ்ப்பாணம் நிர்வாக மாவட்டமும் அதனை அண்மித்துள்ள ஆட்புல நிலப்பரப்புக்களும், கிளிநொச்சி நிர்வாக மாவட்டம், மன்னார் நிர்வாக மாவட்டமும் அதனை அண்மித்துள்ள ஆட்புல நிலப்பரப்புக்களும், வவுனியா நிர்வாக மாவட்டம், முல்லைத்தீவு நிர்வாக மாவட்டமும் அதனை அண்மித்துள்ள ஆட்புல நிலப்பரப்புக்களும், மட்டக்களப்பு நிர்வாக மாவட்டமும் அதனை அண்மித்துள்ள ஆட்புல நிலப்பரப்புக்களும், அம்பாறை நிர்வாக மாவட்டமும் அதனை அண்மித்துள்ள ஆட்புல நிலப்பரப்புக்களும், திருகோணமலை நிர்வாக மாவட்டமும் அதனை அண்மித்துள்ள ஆட்புல நிலப்பரப்புக்களும், குருநாகல் நிர்வாக மாவட்டம், புத்தளம் நிர்வாக மாவட்டமும் அதனை அண்மித்துள்ள ஆட்புல நிலப்பரப்புக்களும், அநுராதபுரம் நிர்வாக மாவட்டம், பொலன்னறுவை நிர்வாக மாவட்டம், பதுளை நிர்வாக மாவட்டம், மொனராகலை நிர்வாக மாவட்டம், இரத்தினபுரி நிர்வாக மாவட்டம், கேகாலை நிர்வாக மாவட்டம் ஆகிய மாவட்டங்களிலும் இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை என முப்படைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் விசேட பாதுகாப்பு பணிகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.-Vidivelli