பள்­ளி­வாசல் மதில்­களில் உரு­வப்­ப­டங்­களை வரை­வதை முஸ்லிம்கள் ஏற்கமாட்டார்கள்

ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் அஸாத் சாலி

0 699

நக­ரத்தை அழ­கு­ப­டுத்­து­வ­தென்ற போர்­வையில் பள்­ளி­வாசல் மதில்­களில் உரு­வப்­ப­டங்­களை வரை­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. இஸ்­லா­மிய கலா­சா­ரத்­துக்கு இது விரோ­த­மா­ன­தாகும். அதனால் ஜனா­தி­பதி இது­தொ­டர்­பாக கவனம் செலுத்­த­வேண்­டு­மென தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அஸாத் சாலி தெரி­வித்தார்.

தேசிய ஐக்­கிய முன்­னணி நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில், நகர்ப்­பு­றங்­களில் வெறு­மை­யாக இருக்கும் மதில்­களில் சுவ­ரொட்­டிகள் ஒட்­டப்­பட்டு மிகவும் அசிங்­க­மா­கவே காட்­சி­ய­ளித்துக் கொண்­டி­ருந்­தன. ஆனால் இவ்­வாறு அசிங்­க­மாக இருக்கும் நக­ரத்தை அழ­கு­ப­டுத்தும் நோக்­கத்தில் வீதி­யோ­ரங்­களின் மதில்கள் மற்றும் மேம் பாலங்­களின் சுவர்­களில் இளை­ஞர்கள் சித்­தி­ரங்­களை வரைந்து வருன்­றனர். இது வர­வேற்­கத்­தக்­கது.

ஆனால் சித்­திரம் வரை­வ­தென்ற பெயரில் முஸ்லிம் பள்­ளி­வாசல் மதில்­களில் உரு­வப்­ப­டங்­களை வரை­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. இஸ்­லா­மிய கலா­சா­ரத்தின் பிர­காரம் உரு­வப்­ப­டங்கள் வரை­வ­தில்லை. முஸ்­லிம்கள் தங்­களின் வீடு­க­ளிலும் உரு­வப்­ப­டங்­களை வைத்­துக்­கொள்­வ­தில்லை. அது அந்த மார்க்­கத்தின் வழி­முறை. அதற்கு நாங்கள் மதிப்­ப­ளிக்­க­வேண்டும்.

ஆனால், கடந்த சில தினங்­க­ளுக்கு முன்னர் வேவல்­தெ­னிய, ரதா­வ­டுன்ன பள்­ளி­வாசல் மதிலில் இவ்­வாறு உரு­வப்­ப­டங்கள் அடங்­கிய சித்­திரம் வரை­யப்­பட்­டி­ருக்­கின்­றது. அந்தப் பிர­தே­சத்தில் முஸ்­லிம்கள் சிறி­த­ள­வா­ன­வர்­களே வாழ்ந்து வரு­கின்­றனர். அதனால் அவர்கள் இதற்கு பகி­ரங்­க­மாக எதிர்ப்பு தெரி­விக்க முடி­யாது அச்­சத்தில் இருந்­துள்­ளனர். அத்­துடன் பள்­ளி­வாசல் மதிலில் வரை­வ­தற்கு முன்னர் அந்த பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­திடம் அதற்­கான அனு­ம­தியை பெற்­றி­ருக்­க­வேண்டும். அவ்­வாறு எதுவும் இல்­லாமல் தாங்கள் நினைத்த பிர­காரம் இவ்­வாறு செய்­வது மனித உரிமை மீற­லாகும். இது­தொ­டர்­பாக தெளி­வு­ப­டுத்தி ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு கடி­த­மொன்றை அனுப்­ப­வி­ருக்­கின்றோம். இவ்­வா­றான சம்­ப­வங்கள் தொடர்­பாக ஜனா­தி­பதி கவனம் செலுத்­த­வேண்டும்.

அத்­துடன் சிறு­பான்மை மக்கள் தங்­க­ளுடன் இணைந்து செயற்­பட முன்­வ­ர­வேண்­டு­மென ஜனா­தி­பதி தெரி­விக்­கின்றார். அதனை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால் அதற்கான சூழலை ஏற்படுத்தவேண்டும். சிறுபான்மை மக்களுக்கு எதிரான இனவாதப் பிரசாரங்களை தடுக்கவேண்டும். அதேபோன்று சிறுபான்மை மக்கள் மனதில் ஏற்பட்டிருக்கும் அச்சத்தை போக்கும் வகையில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இடம்பெறவேண்டும் என்றார்.-Vidivelli

  • எம்.ஆர்.எம்.வஸீம்

Leave A Reply

Your email address will not be published.