அனர்த்தங்களிலிருந்து மக்களை காப்பதற்கு திட்டங்கள் வேண்டும்

0 1,106

நாட்டில் நிலவும் கடும்­மழை மற்றும் காற்­றுடன் கூடிய சீரற்ற கால­நிலை கார­ண­மாக பல மாவட்­டங்­களில் மக்­களின் இயல்பு வாழ்க்கை பாதிக்­கப்­பட்­டுள்­ளது. நாட்டின் 13 மாவட்­டங்­களில் 4153 குடும்­பங்­களைச் சேர்ந்த 14,164 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது.

சீரற்ற கால­நி­லையால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­வர்­களில் 946 குடும்­பங்­களைச் சேர்ந்த 3149 பேர் பாது­காப்­பான 29 முகாம்­களில் தங்­க­வைக்கப் பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தின் உதவிப் பணிப்­பாளர் பிரதீப் கொடிப்­பிலி தெரி­வித்­துள்ளார்.

வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மத்­திய மாகா­ணங்­களில் கடும் மழை­யு­ட­னான கால­நிலை தொடருமென வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் எதிர்வு கூறி­யுள்­ளது. இவ்­வாறு தொடர்ச்­சி­யாக மழை பெய்யும் சந்­தர்ப்­பங்­களில் காலி மற்றும் களுத்­துறை மாவட்­டங்­களில் மண்­ச­ரிவு ஏற்­படும் எனவும் எச்சரிக்­கப்­பட்­டுள்­ளது. குறிப்­பிட்ட வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மத்­திய மாகா­ணங்­களில் இன்றும் நாளையும் 100 மில்­லி­மீற்­றரை விட அதிக மழை­வீழ்ச்சி பதி­வா­கக்­கூடும் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதனால் குறித்த மாகா­ணங்­களில் வாழும் மக்கள் கடும்­ம­ழையால் ஏற்­ப­டக்­கூ­டிய அனர்த்­தங்­களில் இருந்தும் தம்மைப் பாது­காத்துக் கொள்­வ­தற்­காக அவ­தா­னத்­துடன் இருக்­கு­மாறும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளனர்.

மலைப்­பாங்­கான பிர­தே­சங்­களில் கடும்­மழை எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தோடு, குறித்த பிர­தே­சங்­களில் மண்­ச­ரிவு ஏற்­ப­டக்­கூ­டிய வாய்ப்­புகள் காணப்­ப­டு­வ­தா­கவும் வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. மண்­ச­ரிவு ஏற்­ப­டக்­கூ­டிய இடங்கள் இனங்­கா­ணப்­பட்டால் அங்­கி­ருந்து பாது­காப்­பான இடங்­க­ளுக்கு வெளி­யே­று­மாறும் மக்கள் கோரப்­பட்­டுள்­ளனர்.

சீரற்ற கால­நிலை அனர்த்தம் கார­ண­மாக ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த நால்­வரின் உயிர்கள் காவு கொள்­ளப்­பட்­டுள்­ளன. கடும்­மழை கார­ண­மாக வலப்­ப­னை–­ம­ல­பட்­டா­வயில் ஏற்­பட்ட மண்­ச­ரி­வினால் அவர்கள் நால்­வரும் வீட்­டுடன் புதை­யுண்டு பலி­யா­கி­யுள்­ளனர். இந்த சோக சம்­பவம் கடந்த 30 ஆம் திகதி இடம்­பெற்­றுள்­ளது. நால்­வரில் மூவரின் சட­லங்கள் மீட்­கப்­பட்­டுள்­ள­துடன் 15 வய­தான மாண­வனின் சட­லத்தை தேடிக்­கண்­டு­பி­டிக்கும் நட­வ­டிக்­கைகள் தொடர்­கின்­றன.

இவ்­வா­றான அனர்த்­தங்­களில் மக்கள் சிக்­கிக்­கொள்­வ­தற்கு அவர்கள் அனர்த்த முகா­மைத்­துவப் பிரிவு வழங்கும் அறி­வு­றுத்­தல்­களை கவ­னத்­திற்­கொள்­ளா­மையே கார­ண­மாகும். மண்­ச­ரி­வுக்­குட்­பட்ட வீட்டில் வசிப்­போ­ருக்கு அனர்த்த முகா­மைத்­துவ நிலையம் ஏற்­க­னவே எச்­ச­ரித்­துள்­ள­துடன் அவர்­களை வீட்டை விட்டும் வெளி­யே­று­மாறு அறி­வு­றுத்­தி­யுள்­ளது. அறி­வு­றுத்­தல்­களை அவ்­வீட்டில் வசித்தோர் புறக்­க­ணித்­த­த­னாலே அவர்கள் அனர்த்­தத்­திற்கு உட்­பட்டு பலி­யா­கி­யி­ருக்­கி­றார்கள்.

மண்­ச­ரிவு ஏற்­படும் அபாயம் நிலவும் பிர­தே­சங்­க­ளுக்கு அனர்த்த முகா­மைத்­துவ நிலையம் சிவப்பு எச்­ச­ரிக்கை விடுப்­ப­துடன் மாத்­திரம் நின்று விடக்­கூ­டாது. அவர்­களை அவ்­வா­றான இடங்­க­ளி­லி­ருந்து வெளி­யேற்­று­வ­தற்கு அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்க வேண்டும். அவ்­வா­றான பிர­தே­சங்­களில் வாழ்­வோரை மாற்று இடங்­களில் குடி­யேற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும். மக்­களும் அரச அதி­கா­ரி­களின் அறி­வு­றுத்­தல்­களைப் பின்­பற்ற வேண்டும். இதுவே அனர்த்­தங்­க­ளி­லி­ருந்தும் தப்­பித்துக் கொள்­வ­தற்­கான வழி­யாகும்.

பாதிக்­கப்­பட்­டுள்ள பதுளை, மொன­ரா­கலை, மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, மன்னார், முல்­லைத்­தீவு, கேகாலை, கண்டி, புத்­தளம், மாத்­தளை, கிளி­நொச்சி, நுவ­ரெ­லியா மற்றும் வவு­னியா மாவட்­டங்­களில் புத்­தளம் மாவட்­டமே அதிகம் பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ளது. இம்­மா­வட்­டத்தில் 1634 குடும்­பங்­களைச் சேர்ந்த 5335 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

அனர்த்த நிலைமைகளின் போது பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறும் அவர்களுக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தாமதமின்றி மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி கோத்தாபய அரச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மண்சரிவு அபாய பிரதேசங்கள் இனங்காணப்பட்டு அங்கு வாழும் மக்களுக்கு நிரந்தரத் தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்கும் அரசு திட்டங்களை வகுக்கவேண்டும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.