என்னை சு.க.விலிருந்து நீக்கியமை சட்ட விரோதம்

நீதிமன்றை நாடுவேன் என்கிறார் பௌசி

0 1,433

நான் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு எந்­தக்­குற்­றமும் செய்­ய­வில்லை. என்னைக் கட்­சியின் உறுப்­பு­ரி­மை­யி­லி­ருந்து நீக்­கி­யுள்­ளமை சட்ட விரோ­த­மா­ன­தாகும்.இந்தத் தீர்­மா­னத்­துக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு நான் நீதி­மன்­றினை நாடு­வ­தற்குத் தீர்­மா­னித்­துள்ளேன் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம். பௌசி விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

கட்சி ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுப்­ப­தென்றால் கட்­சியின் தலைவர் முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மீதே நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­க­வேண்டும். அவரே தான் தேர்­தலில் நடு­நி­லைமை வகிப்­ப­தாகக் கூறிக்­கொண்டு ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக இருந்த தற்­போ­தைய ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு ஆத­ர­வ­ளித்தார். அதனால் அவர்தான் கட்­சி­யி­லி­ருந்தும் நீக்­கப்­பட்­டி­ருக்­க­வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் செய­லாளர் என்னை கட்­சி­யி­லி­ருந்தும் நீக்­கி­யுள்­ள­தாக கடிதம் அனுப்­பி­யுள்ளார். நான் கட்­சியின் மூத்த உறுப்­பினர் கட்­சியின் மாதாந்த கட்­ட­ணத்தை இது­வரை தொடர்ந்தும் செலுத்தி வரு­கிறேன். இந்­நி­லையில் கட்­சி­யி­லி­ருந்தும் நான் நீக்­கப்­பட்­டுள்ளேன்.

பாரா­ளு­மன்­றத்தில் ஆளும் கட்­சியின் பக்கம் சார்ந்­த­தாலும் ஜனா­தி­பதி தேர்­தலில் சஜித் பிரே­ம­தா­வுக்கு ஆத­ர­வ­ளித்­த­த­னா­லுமே எனக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்கத் தீர்­மா­னித்­தி­ருந்­தார்கள். ஒழுக்­காற்று விசா­ர­ணைக்கு வரு­மாறு என்னை ஒரு­முறை அழைத்­தார்கள். ஆனால் அந்தத் திக­தியில் என்னால் செல்ல முடி­யா­மற்­போ­னது. வேறு திக­தி­யொன்று கேட்­டி­ருந்தேன். எனக்கு வேறு திகதி ஒன்று தரப்­பட்­டது.

அந்தத் திக­தியில் எனது சட்­டத்­த­ர­ணி­யுடன் ஒழுக்­காற்று விசா­ர­ணைக்குச் செல்லத் தயா­ரா­ன­போது கட்­சியின் தலைமைக் காரி­யா­ல­யத்­துக்கு வரு­மாறு திடீ­ரென அறி­விக்­கப்­பட்­டது. அதற்கு நான் இணங்­க­வில்லை. பொது­வான இட­மொன்­றுக்கு வரு­வ­தாகத் தெரி­வித்தேன். ஆனால் அதன் பின்பு அவர்கள் என்னை வேறு­எங்கும் அழைக்­க­வில்லை. இது நடந்து ஒரு மாத­மி­ருக்கும். இவ்­வா­றான நிலையில் என்னை கட்­சியின் உறுப்­பு­ரி­மை­யி­லி­ருந்தும் விலக்­கி­யுள்­ளார்கள்.

என்னை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வி­யி­லி­ருந்தும் அவர்­களால் நீக்­க­மு­டி­யாது. அவ்­வாறு நீக்­கி­னாலும் நான் சட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்வேன்.
ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைவர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை பாரா­ளு­மன்­றத்­துக்கு அனுமதித்துக்கொள்ள வேண்டுமென்றால் அதனை அவர்கள் நேரடியாக என்னிடம் தெரிவித்திருக்கவேண்டும். நான் முழு மனதுடன் எனது எம்.பி பதவியை விட்டுக்கொடுத்திருப்பேன். ஆனால் என் மீது குற்றம் சுமத்தி எதுவும் செய்யமுடியாது. நான் நீதிமன்றம் செல்வேன் என்றார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

 

Leave A Reply

Your email address will not be published.