மத அடையாளத் தடைக்கு எதிராக கனடா ஆசிரியைகள் வழக்கு தாக்கல்

0 1,589

கியூ­பெக்­கி­லுள்ள 45,000 ஆசி­ரி­யர்­களைக் கொண்ட பல­மான ஆசி­ரியர் சங்கம் பல அமைப்­புக்­க­ளுடன் இணைந்து மாகா­ணத்­தினால் விதிக்­கப்­பட்­டுள்ள மத அடை­யாளத் தடைக்கு எதி­ராக வழக்குத் தாக்கல் செய்­துள்­ளது.

தற்­போது பணி­யி­லுள்­ள­வர்­க­ளுக்கு விதி­வி­லக்­க­ளித்­துள்ள மத அடை­யாளத் தடை புதி­தாக ஆட்­சேர்ப்புச் செய்­யப்­படும் பொலிஸ் அதி­கா­ரிகள், ஆசி­ரி­யர்கள் மற்றும் சட்­டத்­த­ர­ணி­க­ளுக்கு அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. வைத்­தி­யர்கள் மற்றும் பஸ் சார­திகள் ஆகியோர் தமது முகங்­களை மூடா­தி­ருப்­பார்­க­ளானால் அவர்­க­ளுக்கு இச்­சட்டம் விதி­வி­லக்­கா­ன­தாக இருக்கும்.

கடமை நேரத்­தின்­போது அர­ச­துறைப் பணி­யா­ளர்கள் சமயம் சார்ந்த சின்­னங்­களை அணி­வதைத் தடுக்கும் சர்ச்­சைக்­கு­ரிய சட்டம் கன­டாவின் கியூபெக் மாகா­ணத்தில் கடந்த ஜூன் மாதம் நிறை­வேற்­றப்­பட்­டது. சிவில் உரி­மைகள் மற்றும் முஸ்லிம் குழுக்கள் இதற்கு பலத்த எதிர்ப்­பினை வெளி­யிட்­டன.
நீண்­ட­கா­ல­மாக எதிர்­பார்க்­கப்­பட்­டு­வந்த ‘சட்­ட­மூலம் 21’ என்ற பெய­ரி­லான இச்­சட்­ட­மூலம் பிரெஞ்சு மொழி பேசு­வோரைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்ட மாகா­ணத்தில் 73 இற்கு 35 என்ற வாக்கு வித்­தி­யா­சத்தில் சட்­ட­மாக நிறை­வேற்­றப்­பட்­டது.

பாட­சாலை ஆசி­ரி­யர்­களைப் பொறுத்­த­வரை மார்ச் 28 ஆம் திக­திக்குப் பின்னர் பணியில் இணைத்துக் கொள்­ளப்­பட்­ட­வர்கள் சமயம் சார்ந்த சின்­னங்­களை அணி­வ­தற்கு அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டார்கள் என உள்ளூர் ஊட­க­மொன்று தெரி­வித்­துள்­ளது. எனினும், மார்ச் 28 ஆம் திக­திக்குப் முன்னர் பணியில் இணைத்துக் கொள்­ளப்­பட்ட போதிலும் பத­வி­யு­யர்வைப் பெற­வுள்ள ஆசி­ரி­யர்கள் எந்த வகை­யான சம­யம்­சார்ந்த சின்­னங்­க­ளையும் அணி­வ­தற்கு அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டார்கள்.

மதச்­சார்­பற்ற சமூ­கத்தை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக வெளிப்படையாகத் தெரியும் சமயம் சார்ந்த சின்னங்களை அணிவதற்கு அரச பணியாளர்களுக்கு தடைவிதிக்கும் செயற்பாட்டினை மேற்கொள்வதற்கு கியூபெக் அரசாங்கம் நீண்டகாலமாக முயன்று வந்தது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.