டுபாயில் ராட்­சத அலையில் சிக்கி கடலில் மூழ்­கிய கப்பல்: 7 ஊழி­யர்கள் உயி­ருடன் மீட்பு

0 767

அமீ­ர­கத்தில் அரே­பிய கடலில் ஏற்­பட்­டுள்ள குறைந்த காற்­ற­ழுத்த தாழ்வு மண்­டலம் கார­ண­மாக கடந்த 2 நாட்­க­ளாக வானி­லையில் அசா­தா­ரண சூழ்­நிலை நிலவி வரு­கி­றது. மேலும் பல்­வேறு இடங்­களில் இடி­யுடன் பலத்த மழை பெய்து வரு­கி­றது.

மேலும் தேசிய வானிலை ஆய்வு மையம் கடலில் 12 அடி வரை அலைகள் உய­ரக்­கூடும் என எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்­தது. இந்த நிலையில் நேற்று முன்­தினம் கடலில் பயணம் செய்து கொண்­டி­ருந்த கப்­பலில் இருந்து உதவி வேண்டி பொலிஸ் கட்­டுப்­பாட்டு நிலை­யத்­திற்கு தொலை­பேசி அழைப்பு வந்­தது. அதில் ராட்­சத அலை­களில் சிக்­கி­யதால் கப்பல் பழு­தாகி கடலில் மூழ்கி கொண்டு இருப்­ப­தாக தகவல் அனுப்­பினர்.

இதை­தொ­டர்ந்து அந்த கப்பல் எங்கு உள்­ளது என கட­லோர மீட்பு குழு­வினர் வேட்­டையில் ஈடு­பட்­டனர். குறிப்­பிட்ட கப்­பலில் ஜி.பி.எஸ். கருவி எதுவும் பொருத்­தப்­ப­டாத கார­ணத்தால் அவர்­களை கண்­டு­பி­டிப்­பதில் சிக்கல் ஏற்­பட்­டது. பின்னர் தீவிர தேடுதல் வேட்­டைக்கு பிறகு கடலில் மூழ்கிக் கொண்­டி­ருந்த கப்­பலை கண்­டு­பி­டித்­தனர். அப்­போது கப்­பலில் சிக்­கிக்­கொண்­டி­ருந்த 5 பேரை உயி­ருடன் பத்­தி­ர­மாக பட­கு­களில் மீட்­டனர். மேலும் கப்­பலில் இருந்து கடலில் தவறி விழுந்து உயி­ருக்கு போரா­டிக்­கொண்டு இருந்த 2 பேரையும் கட­லோர மீட்பு குழு­வினர் பத்­தி­ர­மாக மீட்­டனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.