ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 3519 முறைப்பாடுகள் இதுவரை தேர்தல் ஆணைக்குழுவில் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியிலேயே இம்முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. தேர்தல் விதிமீறல்கள் தொடர்பில் 3387 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 26 முறைப்பாடுகளும் மற்றும் 106 வேறு முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.
கடந்த 10 ஆம் திகதி பிற்பகல் 4.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 102 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேற்று வரை கபே அமைப்புக்கு 700 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 8 ஆம் திகதியுடன் ஒரு மாதம் பூர்த்தியாகியுள்ள நிலையில் தற்போது முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாகவும் கபே அமைப்பின் பதில் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் தெரிவித்தார்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்