முஸ்லிம் பெண்கள் முகத்திரையை நீக்கி ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும்

தேர்தல் ஆணைக்குழு திட்டவட்டமாக தெரிவிப்பு

0 1,463

எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் வாக்­க­ளிப்­ப­தற்­காக வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்கு முகத்­திரை (புர்கா, நிகாப்) அணிந்து செல்லும் முஸ்லிம் பெண்கள் வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்குள் தமது ஆள­டை­யா­ளத்தை நிரூ­பிப்­ப­தற்­காக முகத்­தி­ரையை நீக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்­கு­ழுவின் உறுப்­பினர் பேரா­சி­ரியர் ரத்­ன­ஜீவன் ஹூல் தெரி­வித்தார். தேர்­தலில் வாக்­க­ளிக்­கச்­செல்லும் முஸ்லிம் பெண்­களின் ஆடை தொடர்பில் வின­வி­ய­போதே அவர் ‘விடி­வெள்­ளி’க்கு இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் விளக்­க­ம­ளிக்­கையில், ‘வாக்­க­ளிப்­ப­தற்­காகச் செல்லும் முஸ்லிம் பெண்கள் முகத்­திரை (புர்­கா–­நிகாப்) அணி­வ­தற்கு எந்தத் தடை­யு­மில்லை. அவர்கள் முகத்­திரை அணிந்து செல்­லலாம். அதற்கு எவரும் தடை­வி­திக்க முடி­யாது. ஆனால் வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்குள் சென்று வாக்­க­ளிப்­ப­தற்­கான நடை­மு­றை­க­ளுக்கு உள்­ளாகும் போது வாக்­க­ளிப்பு நிலைய அதி­கா­ரிகள் ஆள­டை­யா­ளத்தை நிரூ­பிக்­கும்­படி கோரு­வார்கள். அப்­போது முகத்­தி­ரையை அகற்­றியே தமது அடை­யா­ளத்தை நிரூ­பிக்க வேண்­டி­யேற்­படும். சில சந்­தர்ப்­பங்­களில் தலையை மறைத்­தி­ருப்­ப­தையும் அகற்­றும்­படி கோரப்­ப­டலாம்’ என்றார்.

ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­த­லை­ய­டுத்து அவ­ச­ர­காலச் சட்டம் அமுல்­ப­டுத்­தப்­பட்­ட­போது முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்­தி­ரைக்கும் தடை­வி­திக்­கப்­பட்­டது. பின்பு அவ­சர காலச்­சட்டம் நீக்­கப்­பட்­டதை யடுத்து முகத்­தி­ரைக்­கான தடையும் நீங்­கி­யது. என்­றாலும் நாட்டின் பல பகு­தி­களில் பெண்கள் அணியும் முகத்­தி­ரைக்கு சவால்கள் விடுக்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றன. பொது போக்­கு­வ­ரத்து பஸ் வண்­டி­களில் இந்தத் தடை தொடர்ந்து அமுல்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது. பொது இடங்­களில் இன­வா­தி­களால் பிரச்­சி­னைகள் உரு­வாக்­கப்­படு கின்­றன. இப்­பி­ரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்கு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை அவ­ச­ர­மாக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென கண்­டியைத் தள­மாகக் கொண்­டுள்ள தேசிய ஐக்­கி­யத்­துக்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான புத்­தி­ஜீ­விகள் ஒன்­றியம் கோரிக்கை விடுத்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. தற்­போ­தைய சூழ்­நி­லையைக் கருத்­திற்­கொண்டு முஸ்லிம் பெண்கள் பொது இடங்­களில் முகத்­தினை மறைப்­பதை தவிர்ப்­ப­தற்­கான அறி­வு­றுத்­தல்­களை உலமா சபை பொ-து மக்­க­ளுக்கு வழங்க வேண்­டு­மெ­னவும் புத்­தி­ஜீ­விகள் ஒன்றியம் கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.தேர்தலில் வாக்களிப்பதற்குச் செல்லும் முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிந்து செல்வதற்குத் தடையில்லை. ஆனால் வாக்களிப்பு நிலையங்களுக்குள் முகத்திரையை அகற்றி தமது ஆளடையாளத்தை உறுதிசெய்ய வேண்டும்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.