அவர் அந்த திட்டத்தில் எனது தந்தையின் சார்பில் எமது குடும்பத்தை பதிவு செய்தார். சில வாரங்களின் பின்னர் எனது தந்தைக்கு DMD வியாதி தொடர்பில் பயனுள்ள தகவல்களைக் கொண்ட பொதியொன்று பெற்றோர் திட்ட தலைவரிடமிருந்து கிடைக்கப்பெற்றது. அதன் பின்னர் டச்சு பெற்றோர் திட்ட தலைவி எலிசபத் ரூம் இடமிருந்து ஹோலந்து நாட்டில் இடம்பெறவுள்ள பெற்றோர் மாநாட்டில் கலந்துகொள்வதற்கான அழைப்புக் கடிதம் கிடைத்தது.
அவருக்கும் ஒரு DMD வியாதியுள்ள ஒரு மகன் இருக்கிறார். இந்த அனைத்து நிகழ்வுகளுடனும் சடுதியாக எனது தந்தையின் வாழ்வு மற்றும் வெளித்தோற்றம் என்பனவற்றில் மாற்றங்கள் தென்படத் தொடங்கின.
எனது தந்தை பெற்றோர் திட்டத்தின் அங்கத்தவரானதன் பின்னர் எனது தந்தையிடமிருந்து அதிக நம்பிக்கை மற்றும் தைரியம் என்பவற்றை என்னால் பெற முடிந்தது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இடம்பெறும் பெற்றோர் மாநாடுகளில் பங்குகொள்வதன் மூலம் என்னைப் போல் நூற்றுக்கணக்கான பெற்றோரிடம் இருந்து DMD வியாதி பற்றி அதிக அறிவைப் பெறமுடியுமென்று அவர் கூறி