கிழக்கின் அரசியல் தலைமைத்துவம் தமிழர் கைகளிலே இருக்க வேண்டும்

கோத்தாவை ஆதரிப்பதே அதற்கு வழி என்கிறார் கருணா

0 1,256

கிழக்கு மாகா­ணத்­திற்கு மீண்டும் முஸ்லிம் ஆளு­ந­ரையோ, முத­ல­மைச்­ச­ரையோ எம்மால் ஏற்க முடி­யாது என்று தெரி­வித்த முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விநா­ய­க­மூர்த்தி முர­ளி­தரன் (கருணா அம்மான்) தமிழ் தலை­மைத்­து­வத்தின் கீழ் கிழக்கு மாகாணம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

 

கிரு­லப்­ப­னையில் சனிக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இதனை தெரி­வித்தார். மேலும் கருத்து தெரி­வித்த அவர்.

 

ஐ.தே.க அர­சாங்கம் மீண்டும் ஆட்­சிக்கு வந்தால் கிழக்கில் மீண்டும் முஸ்லிம் தலை­மைத்­துவம் ஒன்றே மேலோங்கும். இந்த இடத்தில் தமிழ் மக்கள் சிந்­தித்து செயல் பட வேண்டும்.  பொது­ஜன பெர­முன ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தா­பய ராஜ­பக்­ ஷவை வெற்றி பெற வைக்கும் போதே தமிழ் மக்­களின் இருப்பை தக்­க­வைத்து கொள்ள முடியும். தமிழ் மக்­களை கோத்­தா­பய முற்­று­மு­ழு­தாக நம்­பி­யுள்ளார். யுத்தம் முடி­வ­டைந்த காலத்தில் இருந்து முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ மூலம் வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் என பல செயற்­திட்­டங்கள் மூலம் பாரிய அபி­வி­ருத்­திகள் செய்­யப்­பட்­டன.

 

அன்று பல்­லா­யிரக் கணக்­கான போரா­ளிகள் புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்டு சமூ­கத்­திற்குள் சேர்க்­கப்­பட்­டனர். இன்று ரணிலின் அர­சாங்கம் 134  அர­சியல் கைதி­களை கூட விடு­விக்க முடி­யாமல் தமிழ் மக்­களை ஏமாற்றிக் கொண்­டி­ருக்­கின்­றது. கோத்­த­ாபய அர­சியல் கைதி­களை விடு­விப்­ப­தாக வாக்­கு­றுதி வழங்­கி­யு­ளளார். மற்றும் கல்­முனை பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்தி தரு­வ­தா­கவும் ஒரு லட்சம் இளைஞர் யுவ­தி­க­ளுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத் தரு­வ­தா­கவும் மலை­யக மக்­க­ளுக்­கான சம்­பள பிரச்­சி­னை­க­ளையும் தீர்த்து தரு­வ­தா­கவும் வாக்­கு­றுதி வழங்­கி­யுள்ளார்.

 

ரவூப் ஹக்கீம் சஹ்­ரானின் சகாக்­க­ளுடன் சேர்ந்து புகைப்­படம் எடுத்­துள்ளார். இவ்­வா­றான தீவி­ர­வாத முஸ்லிம் தலை­வர்கள் அனை­வரும் சஜித் பிரே­ம­தா­சவின் பக்­கமே உள்­ளனர். தமி­ழர்­க­ளுக்கு எவ்­வித முக்­கி­யத்­து­வமும் ஐக்­கிய தேசிய கட்­சியில் இல்லை. இதனை எதிர்த்தே தமி­ழர்­க­ளா­கிய நாங்கள் கோத்­தா­ப­ய­விற்கு எங்­களின் ஆத­ர­வினை வழங்­கி­யுள்ளோம்.

 

முஸ்லிம் தலை­வர்­களை புறம் தள்ளும் நோக்கில் எதையும் நான் குறிப்­பி­ட­வில்லை. எனது அர­சியல் சாணக்­கி­யத்தை  மட்­டுமே இங்கு தெரி­விக்­கிறேன். தலைமைப் பொறுப்பு தமிழ் தலை­வர்­க­ளிடம் இருக்க வேண்டும்.  ஏனென்றால் தாங்கள் மட்­டுமே கிழக்கு மாகா­ணத்தின் ஆளு­நர்­க­ளாக இருக்க வேண்டும் என்பதில் முஸ்லிம் தலைவர்கள் திட்டவட்டமாக இருக்கின்றனர். முஸ்லிம் தலைவர்களின் எதிரொலிப்புகளே இனத்துவேசமாக மாற்றமடைந்துள்ளது. தலைமை தாங்கும் சக்தி தமிழ் தலைவர்களுக்கு வர வேண்டும் என்றார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.