ஹஜ் ஏற்பாடுகள் : அரசியல் தலையீடுகளும் முகவர்களின் தில்லு முல்லுகளும்

ஏற்பாடுகளை மேம்படுத்துவதற்கான சில ஆலோசனைகள்

0 1,642
  • அஹமட்

முஸ்­லிம்­களின் கட­மை­களில் ஹஜ் ஐந்­தா­வது கட­மை­யாகும் என்­பதை முஸ்­லிம்கள் மாத்­தி­ர­மல்ல பெரும்­பா­லான முஸ்லிம் அல்­லா­த­வர்­களும் அறி­வார்கள். எனினும் ஹஜ் ஏற்­பா­டு­களை மேற்­கொள்ளும் ஹஜ் முக­வர்கள் தங்­க­ளது பொறுப்­பு­களை நேர்­மை­யாக நிறை­வேற்றத் தவறி விடு­கின்­றனர். அதனால் ஹஜ்ஜின் மூலம் எதிர்பார்க்கப்படும் அடைவுகளை அடைய முடியாதுள்ளது. இந் நிலையில் ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்பில் கவனம் செலுத்தி மேம்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது.

இம்முறை ஹஜ் முக­வர்­க­ளான என்.எம். டிரவல்ஸ் மற்றும் மௌலானா டிரவல்ஸ் என்­பன நூற்­றுக்கும் மேற்­பட்ட ஹஜ் யாத்­தி­ரி­கர்­களை அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளன. குறிப்­பாக யாத்­தி­ரி­கர்கள் ஏமாற்­றப்­பட்­டி­ருக்­கி­றார்கள். ஆறு ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் ஒவ்­வொ­ரு­வரும் தலா 7 இலட்சம் ரூபா கட்­டணம் செலுத்­தியும், இறு­தியில் அவர்­க­ளுக்கு ஹஜ் கட­மையை நிறை­வேற்ற முடி­யா­மற்­போ­னது.

ஹஜ் ஏற்­பா­டு­களின் எந்­த­வொரு விதி­மு­றை­யென்­றாலும் அதன் முன்­னேற்றம் கருதி சமூ­கத்­துடன் அல்­லது பங்­கு­தா­ரார்­க­ளுடன் தொடர்ச்­சி­யாக கலந்­து­ரை­யாடப்பட வேண்டும். தற்­போ­தைய குழு உணர்­வு­பூர்­வ­மாக தனது புதிய வழி முறை­களை முன்­வைத்­துள்­ளது. ஆனால் பொது மக்­க­ளிடம் சென்று அவற்றை மீளாய்வு செய்­வ­தற்கு பின் நிற்­கி­றது. இதற்­காக பொது மக்கள் அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்க வேண்டும். மீளாய்வு செய்­யப்­பட்டு புதிய வழி­மு­றைகள் உறுதி செய்­யப்­பட வேண்டும்.

2015 இற்கு முன்பு ஹஜ் ஏற்­பா­டுகள்

ஹஜ் முக­வர்­களால் உயர்­நீ­தி­மன்றில் சில வழக்­குகள் தாக்கல் செய்­யப்­ப­டும்­வரை ஹஜ் ஏற்­பா­டுகள் முறை­யாக அமுலில் இருக்­க­வில்லை. ஹஜ் மீது முக­வர்­களும் அடுத்து அர­சி­யல்­வா­தி­க­ளுமே கவனம் செலுத்­தி­னார்கள். பொது­வாக முஸ்­லிம்கள், சிவில் சமூகம் மற்றும் அகில இலங்கை ஜம்­மி­யத்துல் உலமா போன்ற சமயத் தலை­மைகள் ஹஜ்ஜில் எவ்­வித அக்­க­றையும் கொண்­டி­ருக்­க­வில்லை. முஸ்லிம் ஊட­க­வி­ல­யா­ளர்கள் கூட இல­வ­ச­மாக ஹஜ் கட­மையைப் பெற்றுக் கொள்­வ­தற்கு முயற்­சித்­தார்­க­ளே­யன்றி இது தொடர்பில் அக்­கறை கொண்­டி­ருக்­க­வில்லை.

அதனால் ஹஜ் ஏற்­பா­டு­களில் நில­விய ஒழுங்­காக திட்­ட­மி­டப்­ப­டாத அர­சியல் ரீதி­யான நிர்­வாக சீர்­கே­டு­க­ளுக்கு எதி­ராக சரி­யான இலக்கை நோக்கி எறி­யப்­பட்ட முத­லா­வது கல்­லாக ஹஜ் முக­வர்­களின் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­ட­மையைக் குறிப்­பி­டலாம். (அது பௌஸியின் கால கட்­ட­மாகும்) நீதி­மன்றம் ஹஜ் வழி­மு­றை­களை (Guidelines) வழங்­கி­யது. முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளம் மற்றும் ஹஜ் முக­வர்­க­ளுக்கு இடையில் இணக்­கப்­பாட்­டினைக் கொண்டு வந்­தது. ஆபத்­தான நிலை­யி­லி­ருந்த இஸ்­லாத்தின் 5 ஆவது கட­மைான ஹஜ்­ஜுக்­கான புதிய அத்­தி­யா­ய­மாக உயர் நீதி­மன்றம் வழங்­கிய ஹஜ் வழி­மு­றை­களைக் குறிப்­பி­டலாம்.

முன்­னைய பழைய முறைமை

முன்­னைய ஹஜ் ஏற்­பா­டு­களில் அமைச்­சரே கோட்­டாவை ஹஜ் முக­வர்­க­ளுக்கு இடையில் பகிர்ந்­த­ளிப்பார். ஹஜ் முக­வர்கள் ஏனைய ஏற்­பா­டு­களை முன்­னெ­டுப்­பார்கள். ஹஜ் யாத்­தி­ரி­கர்­களைப் பொறுத்­த­மட்டில் இது மிகவும் இல­கு­வான முறை­யாகும். ஆனால் இந்த முறை­மையின் கீழான பாதிப்பு என்ன வென்றால் ஒவ்­வொரு முக­வ­ருக்கும் குறிப்­பிட்ட அளவு கோட்­டாவே வழங்­கப்­பட்­டி­ருக்கும். அதனால் ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளினால் ஹஜ் கட்­டணம் தொடர்பில் பேரம் பேசு­வ­தற்கு வாய்ப்­பி­ருக்­க­வில்லை.

புதிய முறைமை

முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் ஒரு சிறந்த ஹஜ் குழுவை கலா­நிதி எம்.ரி. ஸியாத் தலை­மையில் நிய­மித்­துள்ளார். அவர் தேயிலை ஆராய்ச்சி நிலை­யத்தின் முன்னாள் பணிப்­பாளர் நாயகம். அவர் முஸ்லிம் சிவில் சமூக பிர­தி­நி­திகள் மற்றும் துறைசார் நிபு­ணர்­களின் ஆலோ­ச­னை­களைப் பெற்று ஹஜ் ஏற்­பா­டு­க­ளுக்­கென்று மிகவும் எளி­தான வச­தி­யான வழி­மு­றை­யொன்­றினை அறி­மு­கப்­ப­டுத்­தினார்.

புதிய ஹஜ் கமிட்­டி­யினால் 2015 ஆம் ஆண்டில் ஹஜ் ஏற்­பா­டு­களில் அதி­க­மான மாற்­றங்­களைச் செய்ய முடி­யா­மற்­போ­னது. என்­றாலும் 2016 ஆம் 2017 ஆம் ஆண்­டு­களில் ஹஜ் குழு புதிய ஹஜ் வழி­மு­றை­களை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யது. ஐக்­கிய தேசி­யக்­கட்சி ஆட்­சி­யி­லி­ருந்த 2018 ஆம் ஆண்டு நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்­தலில் அக்­கட்சி தோல்­வி­யுற்­றது. அமைச்சர் ஹலீமின் தொகு­தி­யிலும் ஐக்­கிய தேசி­யக்­கட்சி உள்­ளூராட்சிமன்ற தேர்­தலில் தோல்­வி­ய­டைந்­தது. தோல்வி அவ­ருக்கு அவ­ரது தொகு­தியில் பெரும் சவால்­களை ஏற்­ப­டுத்­தி­யது. இந்­நி­லையில் அவர் தனது அர­சியல் பலத்தை ஹஜ் நிர்­வா­கத்தில் காட்ட வேண்­டிய தேவை ஏற்­பட்­டது. அதனால் அவர் தனது தொகு­திக்கு 200 க்கும் அதி­க­மான ஹஜ் விசாக்­களை வழங்­கு­மாறு ஹஜ் குழுவை கட்­டா­யப்­ப­டுத்­தினார். புதி­தாக ஹஜ் வழி­மு­றையில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட பதிவு விதி­க­ளையும் மீறி இந்த ஹஜ் விசாக்கள் வழங்­கப்­பட்­டன. இச் செயல் மூலம் அவர்கள் தங்­க­ளது ஹஜ் வழி­மு­றை­யின் ஒழுங்­கு­களை மீறி­யுள்­ளார்கள்.

இச் சம்­பவம் ஹஜ் முக­வர்கள் மத்­தியில் பெரும் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யது. இந்­நி­லையில் சில முக­வ­ர்கள் மேலும் பல அடிப்­ப­டை­யற்ற குற்­றச்­சாட்­டு­க­ளையும் முன்­வைத்து ஜனா­தி­ப­திக்கு அழுத்­தங்கள் பிர­யோ­கித்­ததால் ஜனா­தி­பதி இது தொடர்பில் விசா­ரணை நடத்தி அறிக்கை சமர்ப்­பிக்­கு­மாறு ஜனா­தி­பதி செய­ல­கத்­திற்கு உத்­த­ர­விட்டார். ஆனால் அறிக்கை ஒரு­போதும் வெளி­வ­ர­வில்லை.

இந்­நி­லையில் ஹஜ் குழுவின் தலைவர் மொஹமட் சியாத் தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்யும் நிர்ப்­பந்­தத்­துக்­குள்­ளானார். என்­றாலும் அவ­ரது இரா­ஜி­னாமா ஏற்றுக் கொள்­ளப்­ப­ட­வில்லை. 51 நாட்கள் இடம்­பெற்ற அர­சியல் நாட­கத்­தின்­பின்பு கலா­நிதி சியாத் ஹஜ் ஏற்­பா­டு­களின் தலை­மைத்­து­வத்தை தொடர்ந்தார். அர­சியல் தலை­யீ­டு­க­ளின்றி ஹஜ் ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­படும் என்ற உறு­தி­மொ­ழி­யுடன் அவ­ரது பணி ஆரம்­ப­மா­னது. 2019 ஆம் ஆண்டு ஹஜ் ஏற்­பா­டுகள் சிறப்­பாக முன்­னெ­டுக்­கப்­பட்­டன. என்­றாலும் ஹஜ் யாத்­தி­ரி­கர்­களை அசௌ­க­ரி­யங்­க­ளுக்­குள்­ளாக்­கிய இரு கவ­லைக்­கு­ரிய சம்­ப­வங்கள் இடம்­பெற்­றன. 6 ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் என்.எம். டிரவல்ஸ் நிலை­யத்துக்கு ஹஜ் கட்­ட­ண­மாக தலா 7 இலட்சம் ரூபா வழங்­கியும் இறுதி நேரத்தில் அவர்­க­ளுக்கு ஹஜ் கட­மையை மேற்­கொள்ளும் வாய்ப்பு கிடைக்­க­வில்லை.

இன்­னொரு சம்­ப­வத்தில் 100க்கும் மேற்­பட்ட ஹஜ் யாத்­திரிகர்­க­ளுக்கு இறுதி நேரத்தில் விமான டிக்கட் வழங்­கப்­ப­டாது நிரா­க­ரிக்­கப்­பட்­ட­மையால் அவர்கள் பெரும் அவ­லங்­க­ளுக்­குள்­ளா­னார்கள். மௌலானா டிரவல்ஸ் எனும் முகவர் நிலையம் ஹஜ் யாத்­தி­ரி­க­ளி­ட­மி­ருந்து முழு­மை­யான கட்­டணம் அற­விட்­டி­ருந்தும் அவர்­க­ளது விமான பயணச் சீட்­டு­க­ளுக்­கான கட்­ட­ணங்கள் விமான பய­ணச்­சீட்டு முக­வ­ருக்கு செலுத்­தப்­பட்­டி­ருக்­க­வில்லை. இதனால் இறுதி நேரத்தில் 100 க்கும் மேற்­பட்ட ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் பலர் அசௌ­க­ரிங்­களை எதிர்­கொண்­டனர். இந்­நி­லையில் குறிப்­பிட்ட ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் அரச ஹஜ் குழுவைத் தொடர்பு கொண்டனர். ஹஜ் குழுவின் தலை­யீட்­டி­னை­ய­டுத்து இறுதி நேரத்தில் விமான பயணச் சீட்­டு­களைப் பெற்றுக் கொண்­டனர்.

புதிய முறை­மையின் நன்­மைகள்

*ஹஜ் முக­வர்­களின் ஏக­போகத் தனி­யு­ரிமை முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்­டது.
* ஹஜ் முறைப்­பா­டுகள் தொடர்பில் முறை­யான விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.
* ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் பதி­வுகள் சீர­மைக்­கப்­பட்­ட­துடன் இணை­யத்­தளம் ஊடான பதிவும் அண்­மையில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

ஹஜ் ஏற்­பா­டு­களின் குறை­பா­டுகள்

*ஹஜ் யாத்­தி­ரைக்­காக பதிவு மேற்­கொள்­வது யாத்­தி­ரி­கர்­களை தொல்­லைப்­ப­டுத்­து­வ­தாக உள்­ளது.

* ஹஜ் யாத்­தி­ரிகர் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வர்கள் திணைக்­க­ளத்­திற்கு பல தட­வைகள் விஜயம் செய்ய வேண்­டி­யுள்­ளது. இது சிக்­க­லான நடை­மு­றை­யாகும். இணை­யத்­தளம் மூலம் பதிவு அறிமு­கப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தாலும் பெரும்­பா­லானோர் இணை­யத்­தளம் மூலம் பதி­வு­களை மேற்­கொள்ள தெரி­யா­த­வர்­க­ளாக இருக்­கி­றார்கள். இந்­நி­லைமை ஹஜ் முக­வர்கள் ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் மீது செல்­வாக்குச் செலுத்தும் நிலை­மையை உரு­வாக்­கி­யுள்­ளது.

*சில சந்­தர்ப்­பங்­களில் அர­சி­யல்­வா­திகள் இந்த விதி­மு­றை­களைத் தவ­றாக பயன்­ப­டுத்திக் கொள்­கின்­றனர். இந்­நி­லைமை 2018 ஆம் ஆண்டில் ஏற்­பட்­டது. அமைச்சர் 200 ஹஜ் யாத்­தி­ரி­கர்­களை விதி­மு­றை­களை மீறி இணைத்துக் கொண்டார். இது உண்­மை­யாகும். எதிர்­கா­லத்தில் எந்த அமைச்­சரும் இவ்­வாறு செயற்­ப­டலாம்.

*மக்கள் ஹஜ் யாத்­தி­ரைக்­காக பதிவு செய்து விட்டு தங்­க­ளுக்­கான சந்­தர்ப்பம் கிடைக்கும் வரை காத்­தி­ருக்­கி­றார்கள். திணைக்­களம் யாத்­தி­ரைக்­காக காத்­தி­ருப்போர் பட்­டி­ய­லொன்­றினை தயா­ரிப்­ப­தாக இல்லை. அவ்­வாறு காத்­தி­ருப்போர் பட்­டி­ய­லொன்று நடை­மு­றையில் இருந்தால் யாத்­தி­ரி­கர்கள் தங்கள் பயணம் குறித்து உரிமை கோர முடியும்.

*பதிவுக் கட்­டணம் 25 ஆயிரம் ரூபா செலுத்­தப்­பட வேண்டும் என்­பதை பலர் அறி­யா­தி­ருக்­கி­றார்கள். இதனால் அவர்கள் பய­ணத்தை தவ­ற­விட வேண்­டி­யேற்­ப­டு­கி­றது.

*திணைக்­களம் ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுடன் முறை­யான தொடர்­பா­டல்­களை மேற்­கொள்­வ­தில்லை. இதன் கார­ண­மா­கவும் ஹஜ் முக­வர்கள் ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் மீது பல வகை­களில் செல்­வாக்குச் செலுத்­தும் நிலைமை ஏற்படுகிறது.

*முக­வர்கள் தலா 25 ஆயிரம் ரூபா கட்­டணம் செலுத்தி பல பதி­வு­களைச் செய்து பின்பு அந்த பதி­வு­களில் திருத்­தங்­களைச் செய்­கி­றார்கள். இது வழ­மை­யாக நடை­பெ­று­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

சில முக­வர்கள் 25 ஆயிரம் ரூபா பதிவுக் கட்­ட­ண­மாக பெற்றுக் கொண்டு முழு­மை­யான ஹஜ் கட்­ட­ணத்­தையும் அற­விட்டுக் கொள்­கி­றார்கள். பதிவுக் கட்­டணம் 25 ஆயிரம் ரூபா திணைக்­க­ளத்­துக்­கு­ரி­யது என்று யாத்­தி­ரி­கர்­களை ஏமாற்­று­கி­றார்கள்.

காத்­தி­ருப்போர் பட்­டியல் (Waiting List)

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் ஹஜ் யாத்­தி­ரைக்­காக காத்­தி­ருக்கும் யாத்­தி­ரி­கர்கள் பட்­டியல் ஒன்­றினைத் தயா­ரித்து நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும். இவ்­வா­றான பட்­டி­ய­லொன்­றினைத் தயா­ரிப்­பது கடி­ன­மான பணி­யாகும். இதற்கு இரு கார­ணங்­களை முன் வைக்­கலாம்.

ஹஜ் கட­மைக்­கான பதி­வு­களைச் செய்து யாத்­தி­ரையை உறுதி செய்­தி­ருந்தும் யாத்­தி­ரையை இறுதி நேரத்தில் ரத்துச் செய்­ப­வர்­களின் விப­ரங்கள் முக­வர்­க­ளுக்கு இறுதி நேரத்­திலே கிடைக்­கப்­பெ­று­கி­றது. தனது யாத்­தி­ரையை உறுதி செய்­தி­ருந்தும் இறுதி நேரத்தில் பய­ணத்தை நடப்பு வரு­டத்தில் மேற்­கொள்ள முடி­யாது என முகவர் நிலை­யங்­க­ளுக்கு அறி­வித்­தாலும் முகவர் நிலை­யங்கள் அது தொடர்பில் திணைக்­க­ளத்­திற்கு உட­ன­டி­யாக அறிவிப்பதில்லை. அதனால் திணைக்களம் பல சிரமங்களை எதிர்கொள்கிறது.

திணைக்களம் காத்திருப்போர் பட்டியலொன்றைத் தயாரித்து அந்தப் பட்டியலிலிருந்து யாத்திரிகர்களைத் தெரிவு செய்ய விரும்பவில்லை. ஏனென்றால் அது அவர்களுக்கு சிரம சாத்தியமானது. அல்லது அதனை திறம்பட செய்வதற்கன தொழில் நுட்ப அறிவு இல்லை. எனவே இவ்விடயத்தில் திணக்களம் முகவர்களிலேயே தங்கி நிற்கிறது. இந்நிலைமை புதிய ஹஜ் வழிமுறைகளை அர்த்தமற்றதாக்கி விடுகிறது.

ஹஜ் முகவர்களே பிரதான குற்றவாளிகளாவர். திணைக்களம் என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில்லை. அதனால் பிரச்சினைகளைத் தீர்க்க மாற்று வழிகள் கையாளப்பட வேண்டும்.

ஹஜ் ஏற்பாடுகளின் எந்த விதிமுறையென்றாலும் அதன் முன்னேற்றம் கருதி சமூகத்துடன் அல்லது பங்குதாரர்களுடன் தொடர்ச்சியாக கலந்துரையாட வேண்டும். தற்போதைய குழு உணர்வு பூர்வமாக தனது புதிய வழி முறைகளை முன்வைத்துள்ளது. பொது மக்களிடம் கருத்தறிந்து அவற்றை மீளாய்வு செய்தல் வேண்டும்.

திணைக்களமும் ஹஜ் குழுவும் ஹஜ் ஏற்பாடுகளில் தெளிவான வழிமுறைகளை கையாள வேண்டும். வழிமுறைகள் ஊழல்களற்றதாக இருக்க வேண்டும்.
அரசியல் நோக்கங்களுக்காக ஹஜ் பயன்படுத்தப்படக் கூடாது.

ஹஜ் கடமைக்காக திணைக்களத்தில் ஹஜ் யாத்திரிகர்கள் பதிவு செய்வது இலகுவானதாகவும், ஹஜ் முகவர்களால் ஏமாற்றப்படவோ மோசடி செய்யவோ முடியாதவாறு பாதுகாப்பானதாகவும் அமைய வேண்டும்.

புதிய ஹஜ் சட்டமூலம் நிறைவேற்றப் பட்டால் இந்தப் பிரச்சினை எல்லாம் தீர்ந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அமைச்சர் ஹலீம் தனது காலத்தில் எட்டிய பெரும் சாதனைகளில் ஒன்றாக இந்தச் சட்டமூலம் அமையும் என்பதில் சந்தேமில்லை.
ஹஜ் பற்றிய வலுவான சட்ட பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதற்கான சாத்தியமும் இருக்கின்றது. என்றாலும் நடைமுறை ஒழுங்குகள் ( Rules and Regulations) வரையப்பட்டு இந்த புதிய சட்டமூலம் நடை முறைப்படுத்தப்படாவிட்டால் இந்த சட்டமூலம் வலுவற்ற ஒன்றாகவே இருக்க முடியும்.

ஆகவே, இந்த சட்டமூலத்தை விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுதற்கு அமைச்சர் ஹலீம் முயற்சிக்க வேண்டியுள்ளது. Rules and Regulations தயாராக வேண்டும், இதில் ஹஜ் கமிட்டி கூடிய கவனம் செலுத் த வேண்டும்.

அத்தோடு ஹஜ் யாத்திரிகர் பதிவு தொடர்பிலும் ஏனைய நடைமுறைகள் தொடர்பிலும் திறந்த மனதுடன் மறுபரிசீலனை செய்ய வேண்டும். சமூகத் தலைமைகளுடனும் சிவில் அமைப்புக்களுடனும் 2015 இல் போன்று மீண்டும் கலந்தாலோசிக்க வேண்டும்.  அதனூடாக சிறந்த ஹத் நடைமுறைகளை அமுல்படுத்த ஆவன செய்ய வேண்டும்.  – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.