ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபயவுக்கு ஆதரவு நல்குவதா? இல்லையா? என்பது தொடர்பில் எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் அபேட்சகர் கோத்தாபய ராஜபக் ஷவுக்கு ஆதரவு அளிப்பதில் பிரச்சினையில்லை என்றாலும் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதென்றால் ஆதரவளிக்க முடியாதென மத்திய செயற்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பொதுஜன பெரமுனவுடன் ஜனாதிபதி தேர்தலில் ஒன்றிணைவ தென்றால் அதற்கென புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் உபதலைவருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை மத்திய செயற்குழுக் கூட்டத்திலும் அவர் சமர்ப்பித்தார்.
இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் வரைபு நேற்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஏ.ஆர்.ஏ.பரீல்
vidivelli