சவூதி இளவரசர் சல்மான் துருக்கிய ஜனாதிபதி அர்துகானை சந்திக்க விரும்புவதாக தெரிவிப்பு 

0 814

சவூதி அரே­பி­யாவின் பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ரசர் மொஹமட் பின் சல்மான், துருக்­கிய ஜனாதி­பதி ரிசெப் தைய்யிப் அர்­து­கானை ஆஜென்­ரீ­னாவில் நடை­பெ­ற­வுள்ள இரு நாள் ஜீ 20 உச்சி மாநாட்­டின்­போது சந்­திக்க விரும்­பு­வ­தாக வேண்­டுகோள் விடுத்­துள்ளார் என துருக்­கிய வெளி­நாட்­ட­மைச்சர் தெரி­வித்­துள்ளார்.

ஆம், அவர் தொலை­பேசி மூல­மாக அர்­து­கா­னிடம் புவ­னஸ்­அ­யர்ஸில்  சந்­திப்­பினை மேற்­கொள்ள முடி­யுமா எனக் கேட்­டுள்ளார், அதற்கு பதி­ல­ளித்த அர்­துகான் ‘பார்க்­கலாம்’ எனத் தெரி­வித்­துள்ளார் என வெளி­நாட்­ட­ம­மைச்சர் கவு­சொக்­லுவின் நேர்­கா­ணலை செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்ற வெளி­யிட்ட ஜேர்மன் செய்­தித்தாள் தெரி­வித்­துள்­ளது.

சவூதி அரே­பி­யாவின் பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ரசர் மொஹமட் பின் சல்­மா­னு­ட­னான சந்­திப்பை தவிர்ப்­ப­தற்கு தற்­போது எவ்­வித கார­ணங்­களும் இல்லை எனத் தெரி­வித்த கவு­சொக்லு, இந்தக் கோரிக்கை தொலை­பேசி உரை­யா­ட­லின்­போது முன்­வைக்­கப்­பட்­ட­த­ாகவும் தெரி­வித்தார்.

எதிர்­வரும் நவம்பர் 30 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 1 ஆம் திகதி வரை ஆஜென்­ரீ­னாவின் புவனஸ் அயர்ஸில் நடை­பெ­ற­வுள்ள ஜீ 20 உச்சி மாநாட்­டின்­போது சவூதி அரே­பி­யாவின் பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ரசர் மொஹமட் பின் சல்மான் மற்றும் துருக்­கிய ஜன­தி­பதி ரிசெப் தைய்யிப் அர்­துகான் ஆகி­யோரும் பங்­கேற்­கின்­றனர்.

சவூதி அரே­பிய எழுத்­தா­ளரும் வொஷிங்டன் போஸ்ட் பத்­தி­ரி­கையின் பத்தி எழுத்­தா­ள­ரு­மான ஊட­க­வி­ய­லாளர் கமால் கஷோக்கி தனது விவா­க­ரத்து தொடர்­பான ஆவ­ணங்­களை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­காக இஸ்­தான்­பூ­லி­லுள்ள சவூதி அரே­பிய துணைத் தூத­ர­கத்­தினுள் கடந்த ஒக்­டோபர் மாதம் 02 ஆம் திகதி நுழைந்­ததன் பின்னர் காணாமல் போயி­ருந்தார்.  ஆதனைத் தொடர்ந்து சவூதி அரே­பியா மற்றும் துருக்கி இடை­யே­யான உறவில் விரி­சல்கள் எழ ஆரம்­பித்­தன.

இரண்டு வாரங்­க­ளுக்கும் அதி­க­மாக மறு­த­லித்து கருத்துத் தெரி­வித்து வந்த சவூதி அரே­பியா,  துருக்­கியின் இஸ்­தான்­பூ­லி­லுள்ள தனது நாட்டுத் துணைத் தூத­ர­கத்­தினுள் ஊட­க­வி­ய­லாளர் ஜமால் கஷோக்கி கொலை செய்­யப்­பட்­டுள்ளார் என்­பதை கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று ஏற்­றுக்­கொண்­டது. மூர்க்­கத்­த­ன­மான மோதலால் மரணம் சம்­ப­வித்­த­தாக சவூதி அரே­பியா தெரி­வித்­தது.

பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ர­ச­ருக்கும் இக்­கொ­லைக்கும் எவ்­வ­கை­யிலும்  தொடர்­பில்லை என ரியாத் தெரி­வித்து வருகின்ற போதிலும், மொஹமட் பின் சல்மானுடன் மிகவும் நெருக்கமான 15 பேர் கொண்ட குழுவினால் இஸ்தான்பூலிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூரகத்தினுள் ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொலை செய்யப்பட்டுள்ளாரென துருக்கி தெரிவித்து வருகின்றது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.