பயங்கரவாதிகளின் தொடர்பாடல் தகவல்கள் சி.ஐ.டி.க்கு : வேறு திட்டங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பம்

0 1,349

4/21 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்­கொலைத் தாக்­கு­தல்­களை ஐ.எஸ்.ஐ.எஸ். சர்­வ­தேச பயங்­க­ர­வா­திகள் முன்­னெ­டுத்­த­தாக சித்­தி­ரிக்க, விசேட வலை­ய­மைப்பு ஊடாக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்பட்­டுள்ள நிலையில்,

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­புடன் தொடர்­பு­பட்ட சந்­தேக நபர்கள் பயன்­ப­டுத்­தி­யுள்ள வட்ஸ்அப், வைபர் மற்றும் டெலி­கிராம் தக­வல்­களை சி.ஐ.டி. பெற்­றுக்­கொண்­டுள்­ளது. சர்­வ­தேச பொலிஸார் மற்றும் சர்­வ­தேச விசா­ரணை அமைப்­புக்­களின் உத­வி­யுடன் அந்த தக­வல்­களைப் பெற்றுக் கொண்­டுள்­ள­தா­கவும், அதன் ஊடாக பயங்­க­ர­வா­தி­களின் ஏனைய திட்­டங்கள் தொடர்பில் விசேட விசா­ர­ணைகள் நடாத்­தப்ப­டு­வ­தா­கவும் கோட்டை நீதி­வா­னுக்கு நேற்று அறி­விக்­கப்­பட்­டது.

குற்றப் புல­னாய்வுப் பிரிவின் விஷேட விசா­ரணைப் பிரிவு அறை இலக்கம் 4 இன் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் கீர்த்­தி­சிங்க இதனை நீதி­வா­னுக்கு விஷேட அறிக்கை ஊடாக அறி­வித்தார். இந்­நி­லையில் தற்­கொலை தாக்­கு­தல்­களை ஐ.எஸ்.ஐ.எஸ். சர்­வ­தேச பயங்­க­ர­வா­திகள் முன்­னெ­டுத்­த­தாக சித்­தி­ரிக்க நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­த­தாகக் கூறப்­படும் தடை செய்­யப்­பட்ட தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் உறுப்­பினர் அஹ­மது மொஹ­மது அர்­ஷாதின் விளக்­க­ம­றி­யலை எதிர்­வரும் ஒக்­டோபர் 2 ஆம் திக­தி­வரை நீதிவான் நீடித்தார். கொழும்பு கிங்ஸ்­பெரி ஹோட்­டலில் நடாத்­தப்­பட்ட தற்­கொலை தாக்­குதல் விவ­கார விசா­ர­ணை­க­ளின்­போது சந்­தேக நபர் தொடர்பில் தகவல் வெளிப்­ப­டுத்­தப்­பட்டு, பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தின்கீழ் கைது செய்­யப்­பட்டு தடுத்­து­வைத்து விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்ட நிலையில் சந்­தேக நபர் கடந்த ஒரு வாரத்­துக்கு முன்னர் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்டு நேற்­று­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்தார். இந்­நி­லை­யி­லேயே நேற்று அவர் நீதிவான் முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­பட்­ட­போதே இவ்­வாறு விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­வி­டப்பட்­டது.

அஹ­மது முஹ­ம்­மது அர்ஷாத் எனும் குறித்த சந்­தேக நபர், தற்­போதும் சி.ஐ.டி. பொறுப்பில் விசா­ரிக்­கப்­பட்­டு­வரும் தேசிய தெளஹீத் ஜமாஅத் உறுப்­பினர் பஸ்ஹுல் சஹ்ரான் எனும் சந்­தேக நபரின் ஆலோ­ச­னைக்­க­மைய, இந்த தாக்­கு­தல்­களை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தாக்­கு­த­லாக சித்­தி­ரிக்க, யாரும் ஊட­றுத்து கேட்க முடி­யாத விசேட வலை­ய­மைப்­பொன்றின் ஊடாக நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ள­தாக சி.ஐ.டி.யினர் குற்றம் சுமத்­தி­யுள்­ளனர்.

குறித்த சந்­தேக நபரை கடந்த ஒரு மாதத்­துக்கு முன்னர் காத்­தான்­குடி பகு­தியில் வைத்து இரா­ணுவ புல­னாய்வுப் பிரி­வினர் கைது செய்து விசா­ர­ணை­க­ளுக்­காக சி.ஐ.டி.யிடம் கையளித்துள்ளனர். அதன்படி முன்னெடுக் கப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபர் விசேட வலையமைப்பு ஊடாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புகளைக் கொண்டிருந்துள்ளமை வெளிப்படுத்தப் பட்டுள்ளதாக சி.ஐ.டி.யின் அறிக்கை ஊடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எம்.எப்.எம்.பஸீர்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.