முஸ்லிம் கட்­சிகள் நிபந்­த­னை­யு­டனே ஆத­ரிக்க வேண்டும்

முஸ்லிம் சிவில் சமூகம் கோரிக்கை

0 781

ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான அறி­விப்பு சில தினங்­களில் வெளி­யா­கலாம் என எதிர்­பார்க்­கப்­படும் நிலையில் முஸ்லிம் கட்­சிகள் எந்­த­வொரு ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்கும் நிபந்­த­னை­யு­ட­னேயே ஆத­ரவு தெரி­விக்க வேண்டும் என சிவில் சமூக மட்­டத்தில் கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

முஸ்லிம் சமூ­கத்தின் நீண்­ட­கால மற்றும் சம­கால பிரச்­சி­னைகள் தொடர்பில் ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட்ட ரீதியில் தீர்வை முன்­வைத்து அதனை நிறை­வேற்றும் நிபந்­த­னை­யுடனே எந்­த­வொரு ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரையும் ஆத­ரிக்க முன்­வர வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் ஜனா­தி­பதி தேர்தல் தொடர்­பான தீர்­மானம் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகி­ய­வற்றின் செய­லா­ளர்ளை தொடர்­பு­கொண்டு வின­வியபோது இரு கட்­சி­களும் இது­வரை எந்த தீர்­மா­னமும் மேற்­கொள்­ள­வில்லையென சுட்­டிக்­காட்­டினர். 

மு.கா. செய­லாளர் நிஸாம் காரி­யப்பர்:

பிர­தான கட்­சிகள் இன்னும் தமது வேட்­பா­ளர்­களை அறி­விக்­க­வில்லை. அவ்­வாறு இரு பிர­தான கட்­சி­க­ளி­னது வேட்­பா­ளர்கள் அறி­விக்­கப்­பட்­டதன் பின்னர் கட்­சியின் உயர்­பீடம் கூடி மஷூறா அடிப்­ப­டை­யி­லேயே தீர்­மானம் எடுக்­கப்­படும்.

ஐக்­கிய தேசியக் கட்சி இன்னும் தமது வேட்­பாளர் யார் என தீர்­மா­னிக்­க­வில்லை. அக் கட்­சிக்குள் இருக்கும் முரண்­பா­டு­களை தீர்த்த பின்­னரே அக்­கட்­சியின் கூட்­டணி அமைப்­பது தொடர்­பாக ஆராய முடியும் என எமது கட்­சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் திட்­ட­வட்­ட­மாக தெரி­வித்­தி­ருக்­கிறார்.

அத்­துடன், இது­வரை எந்தக் கட்­சியும் தமக்கு ஆத­ரவு தெரி­விக்­கு­மாறு எமக்கு அழைப்பு விடுக்­க­வில்லை. அவ்­வாறு அழைப்­புகள் விடுக்­கப்­ப­டினும் கட்­சியின் உயர்­பீ­டத்தின் தீர்­மா­னத்­துக்கு அமை­யவே ஜனா­தி­பதி தேர்தல் தொடர்­பான முடிவு எடுக்­கப்­படும்.

முஸ்லிம் காங்­கி­ரஸின் உயர்­பீடம் இது­வரை ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில் ஆராய்­வ­தற்­காக கூட­வில்லை. ஐ.தே.க.வின் வேட்­பாளர் அறி­விப்பின் பின்னர் நாம் கூடிய தீர்­மா­னிப்போம். இதன்­போது, சிவில் சமூ­கத்­தி­னரால் முன்­வைக்­கப்­படும் ஜனா­தி­பதி தேர்தல் நிபந்­த­னைகள் தொடர்பில் ஆராய்ந்து முடி­வெடுப்போம் என்றார்.

அ.இ.ம.க. செய­லாளர் சுபைர்தீன்:

ஜனா­தி­பதி தேர்தல் தொடர்­பிலும் சம­கால அர­சியல் நிலை­மைகள் குறித்தும் கட்சி மட்­டத்தில் குழு­நிலை பேச்­சுக்கள் நடந்­துள்­ளன. ஆனாலும், ஐக்­கிய தேசியக் கட்சி தமது வேட்­பா­ளரை அறி­வித்­த­பின்­னரே அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தீர்­மா­னத்­திற்கு வரலாம். அத்­துடன், இரு பிர­தான கட்­சி­களின் வேட்­பா­ளர்­க­ளி­னது தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து நாம் ஆராய்ந்த பின்­ன­ரேயே இறுதித் தீர்­மா­னத்தை எட்­ட­மு­டியும்.

எந்தக் கட்­சி­யி­ட­மி­ருந்தும் மக்கள் காங்­கி­ர­ஸுக்கு இது­வரை அழைப்பு விடுக்­கப்­ப­ட­வில்லை. பேச்சு நடத்­தப்­ப­டவும் இல்லை. இருந்­தாலும் அர­சியல் கட்­சி­களின் சம­கால நகர்­வுகள் பற்றி கூடுதல் அவ­தானம் செலுத்தி வரு­கிறோம்.
இது­த­விர சமூ­க­மட்­டத்தில் நிபந்­த­னை­யு­ட­னான ஆத­ரவு குறித்த கோஷம் மேலெ­ழுந்­துள்­ளது. நாம் சமூக பிரச்­சி­னைகள் குறித்து ஆராய்ந்து அதற்­கான தீர்வை பெற்­றுத்­தரும் வேட்­பா­ள­ருக்கே ஆத­ரவு வழங்­குவோம். எனினும், ஐ.தே.க.வின் வேட்­பாளர் தெரிவின் பின்பே இறுதி முடி­வுக்கு வர முடியும்.

4/21 தாக்­கு­த­லுக்கு பின்னர் முஸ்­லிம்கள் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகம்­கொ­டுத்து வரு­கின்­றனர். பாது­காப்­பற்ற நிலைமை தொடர்­கின்­றது. அத்­துடன் முஸ்லிம் சமூ­கத்தின் மீது திட்­ட­மிட்­ட­படி சட்டம் பாய்ச்­சப்­ப­டு­வ­துடன், அவ­ச­ர­கால சட்டம் மற்றும் பயங்­க­ர­வாத சட்­டத்­தி­னூ­டாக அநா­வ­சிய கைது­களும் இடம்­பெற்­றுள்­ளன. இவ்­வி­டயம் குறித்து ஜனா­தி­பதி தேர்­தலின் போது பேசப்­பட வேண்டும் என முஸ்லிம் சிவில் சமூ­கத்­தினர் வேண்­டு­கின்­றனர்.

அத்­துடன், முஸ்லிம் தனியார் சட்ட விவ­காரம், வட­புல முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்றம் மற்றும் அத­னுடன் தொடர்­பு­டைய காணிப் பிரச்­சி­னைகள், தொல்­பொருள் திணைக்­க­ளத்­துடன் தொடர்­பு­பட்­ட­தாக கூறப்­படும் காணிப் பிரச்­சி­னைகள், கிழக்கின் முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள இடப்பற்றாற்குறை, கல்வித் துறையிலுள்ள பிரச்சினைகள், தெற்கில் அரச துறையில் விகிதாசாரத்துக்கமைய இட ஒதுக்கீடுகளின்மை, கொழும்பு மக்களின் வீட்டுப் பிரச்சினை, புத்தளம் அருவாக்காலு குப்பை பிரச்சினை, விவசாயம் மீன்பிடி துறைகளில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எஸ்.என்.எம்.ஸுஹைல்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.