ஞானசாரரின் விடுதலைக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை டிசம்பரில்

0 1,340

நீதி­மன்­றினை அவ­ம­தித்த குற்­றத்தில் 6 வருட கால சிறைத்­தண்­டனை அனு­ப­வித்­து­வந்த பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் பொது மன்­னிப்பின் கீழ் விடு­தலை செய்­யப்­பட்­ட­மைக்கு எதி­ராக உயர் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள அடிப்­படை உரிமை மனுக்கள் இரண்­டினை எதிர்­வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­வ­தற்கு உயர் நீதி­மன்றம் தீர்­மா­னித்­துள்­ளது.

காணாமல் போன ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொ­டவின் மனைவி சந்­தியா எக்­னெ­லி­கொட மற்றும் மாற்­றுக்­கொள்­கை­க­ளுக்­கான நிலை­யத்தின் பணிப்­பாளர் பாக்­கி­ய­சோதி சர­வ­ண­முத்து ஆகி­யோரால் இந்த அடிப்­படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளன.

பாக்­கி­ய­சோதி சர­வ­ண­முத்­து­வினால் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள மனுவில் பிர­தி­வா­தி­க­ளாக சட்­டமா அதிபர், ஜனா­தி­பதி செய­லாளர் உதய சென­வி­ரத்ன, நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ரள, நீதி­ய­மைச்சின் செய­லாளர் ஆர்.எம்.டி.பி மீகஸ்­முல்ல, கல­கொட அத்தே ஞான­சார தேரர், சிறைச்­சாலை ஆணை­யாளர் டி.எம்.ஜே. டப்­ளியூ தென்­னகோன் ஆகியோர் பெயர் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளனர்.
சந்­தியா எக்­னெ­லி­கொட தாக்கல் செய்­துள்ள மனுவில் பிர­தி­வா­தி­க­ளாக சட்­டமா அதிபர் கல­கொட அத்தே ஞான­சார தேரர், நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ரள, வெலிக்­கடை சிறைச்­சாலை அதி­காரி டி.ஜி.உடு­வர, ஜனா­தி­பதி செய­லாளர் உதய சென­வி­ரத்ன, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­தர, பதில் பொலிஸ்மா அதிபர் எஸ்.எம்.விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் பெயர் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளனர். இந்த இரு மனுக்­களே எதிர்­வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.

ஞான­சார தேரர் 6 வருட சிறைத்­தண்­டனை அனு­ப­வித்து வந்த நிலையில் கடந்த மே மாதம் ஜனா­தி­பதி அவரை பொது மன்­னிப்பு வழங்­கி­வி­டு­தலை செய்தார். இவ்­வாறு விடு­தலை செய்­யப்­பட்­டமை அர­சி­ய­ல­மைப்பை மீறும் செயல் என மனுக்­களில் தெரி­விக்­கப்­பட்­டது.

இம்­ம­னுக்கள் நேற்று முன்­தினம் உயர் நீதி­மன்ற நீதியரசர்கள் சிசிர த ஆப்ரு, பிரசன்ன ஜயவர்தன, விஜித் மலல்கொட ஆகியோர் முன்னிலையில் ஆராயப்பட்டபோதே எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.