சமூகம் படிப்பினை பெறுமா?

0 706

ஏப்ரல் 21 தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்டு நான்கு மாதங்கள் கடந்­து­விட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் பல சவால்­களை எதிர்­நோக்கி வரு­கி­றது. பாது­காப்புத் தரப்­பினர் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தொடர்ந்தும் பலரைக் கைது­செய்து வரு­கின்­றனர்.
ஏலவே கைது செய்­யப்­படட்ட பயங்­க­ர­வாத சந்­தேக நபர்கள் கடு­மை­யாக விசா­ரிக்­கப்­பட்டு அவர்கள் வழங்கும் தக­வல்­க­ளுக்கு அமை­யவே இவ்­வாறு கைதுகள் தொடர்­வ­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

உயிர்த்த ஞாயிறு தொடர் தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து நாட­ளா­விய ரீதியில் முன்­னெ­டுக்­கப்­பட்ட சிறப்பு விசா­ர­ணை­க­ளைத தொடர்ந்து 293 பயங்­க­ர­வாத சந்­தேக நபர்கள் கடந்த மாதம்­வரை கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் –பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்­துள்ளார். பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கைகள், அந்­ந­ட­வ­டிக்­கை­க­ளுக்கு உத­வி­ய­வர்கள், தடை செய்­யப்­பட்­டுள்ள அமைப்­பு­களின் உறுப்­பி­னர்­க­ளாக இருந்து ஆயு­தப்­ப­யிற்சி பெற்­ற­வர்­களே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ளார்கள்.

கைது செய்­யப்­பட்­டுள்ள 293 சந்­தேக நபர்­களில் 115 பேர் மீதான விசா­ர­ணைகள் நிறை­வ­டைந்து அவர்கள் தற்­போது விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர். ஏனைய 178 பேரும் தடுத்து வைக்­கப்­பட்டு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். இந்த 178 பேரில் 62 பேர் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­விலும் 47 பேர் சி.ரி.ஐ.டி எனப்­படும் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரி­விலும், 41 பேர் சி.சி.டி எனப்­படும் கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரி­விலும் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்­ளனர். மேலும் அம்­பாறை பொலிஸ் பிரிவில் 16 பேரும், கல்­கிசை பொலிஸ் பிரிவில் 4 பேரும், கொழும்பு தெற்கு பொலிஸ் பிரிவில் 4 பேரும், நுகே­கொடை பொலிஸ் பிரிவில் 3 பேரும், கண்டி பொலிஸ் பிரிவில் ஒரு­வரும் தடுத்து வைக்­கப்­பட்டு விசா­ர­ணை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றனர்.
விசா­ர­ணை­களில் வெளி­வந்த தக­வல்­க­ளை­ய­டுத்து 41 சந்­தேக நபர்­க­ளுக்கு சொந்­த­மான 100 வங்கிக் கணக்குள் முடக்­கப்­பட்­டுள்­ள­துடன் அந்தக் கணக்­குகள் 134 மில்லின் ரூபாவைக் கொண்­டுள்­ளன. அத்­தோடு பயங்­க­ர­வாத சந்­தேக நபர்­க­ளி­ட­மி­ருந்து மீட்­கப்­பட்ட 20 மில்­லியன் ரூபா சி.ஐ.டி யின் பொறுப்பில் உள்­ளது. மேலும் பயங்­க­ர­வா­தி­க­ளுக்குச் சொந்­த­மான 6 பில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான சொத்­துகள் தடை செய்­யப்­ப­ட­வுள்­ளன. அதற்­கான இறு­திக்­கட்ட விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அவற்றில் காணிகள், கட்­ட­டங்கள், வாக­னங்கள் மற்றும் சில அசையும் சொத்­து­களும் உள்­ள­டங்­கி­யுள்­ள­தாக பொலிஸ் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இத்தகைய பாரிய கைதுகளுக்கும் பொருளாதார முடக்கங்களுக்கும் வழிவகுத்துள்ளன. சமூகத்தின் ஓர் அங்கமாகவிருந்த இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு தவறான வழிக்கு இட்டுச் செல்லப்பட்டமையே இதற்குக் காரணமாகும்.

எனினும் தீவிரவாத சிந்தனைகளுடனோ செயற்பாடுகளுடனோ எந்தவகையிலும் தொடர்புபடாத பலரும் இன்னமும் சிறைகளிலுள்ளமை கவலைக்குரியதாகும். அவர்களது குடும்பங்கள் கடுமையான பாதிப்புகளையும் மன உளைச்சல்களையும் சந்தித்துள்ளன. பல குடும்பங்களின் தலைவர்கள் சிறையிலுள்ளதால் அக்குடும்பங்களின் வருமான வழிகள் முடக்கப்பட்டு பலரும் வறுமையின் பிடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிக்கை கிடைக்கப்பெற வேண்டும் என சட்டத்தரணிகள் கூறுகின்றனர்.

இதற்கிடையில் தீவிரவாத செயல்களுடன் நேரடியாக தொடர்புபடாது ஆனால் ஏதோ ஒரு வகையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் அங்கத்தவர்களாக இருந்தோரும் கைதாகி கடந்த நான்கு மாதங்களாக சிறை வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக எவ்வாறான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது? இவர்களை புனர்வாழ்வளித்து விடுவிக்கலாமா? என்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.
மறுபுறம் நேரடியாக தீவிரவாத செயல்களுடன் சம்பந்தப்பட்டோருக்கு உச்சபட்ச தண்டனைகளை அரசாங்கம் வழங்க வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்துக்கும் இடமிருக்க முடியாது.

எது எப்படியிருப்பினும் இந்த சம்பவம் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் கறுப்பு அத்தியாயம் ஒன்றை திறந்துவிட்டுள்ள போதிலும் அதிலிருந்து நாம் படிப்பினை பெற வேண்டும். குறைகளை திருத்தி நாட்டில் ஐக்கியமாக வாழ வழிசெய்ய வேண்டும். சமூகத் தலைமைகள், சமயத் தலைமைகள் இதன் பிறகும் மௌனித்து இருக்காது இளைஞர்களை நேர்வழியில் இட்டுச் செல்லும் திட்டங்களை வகுத்து செயற்படுத்த முன்வர வேண்டும்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.