இவ்வருட ஹஜ் குறித்து இரு முறைப்பாடுகள்

0 1,393

இவ்­வ­ருடம் ஹஜ் கட­மையை நிறை­வேற்­றிய ஹஜ்­ஜா­ஜி­க­ளி­ட­மி­ருந்து இது­வரை 2 ஹஜ் முறைப்­பா­டு­களே கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. ஹஜ் கட­மையை நிறைவு செய்துள்ள ஹஜ்­ஜா­ஜிகள் தங்கள் பய­ணத்தில் ஹஜ் முக­வர்­க­ளினால் அசௌ­க­ரி­யங்­களை எதிர்­நோக்­கி­யி­ருந்தால் உறுதியளிக்­கப்­பட்ட சேவைகள் வழங்­கப்­பட்­டி­ருக்­கா­விட்டால் அவர்கள் எதிர்­வரும் 21 ஆம் திக­திக்கு முன்பு தங்கள் முறைப்­பா­டு­களை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு அனுப்பி வைக்க முடியும் என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக் தெரி­வித்தார்.

முறைப்­பா­டு­களை பதி­வுத்­தபால் மூலம் அனுப்பி வைக்­கும்­ப­டியும் வேண்­டி­யுள்ளார். முறைப்­பா­டுகள் ஹஜ் முறைப்­பாட்டு விசா­ரணைக் குழு­வினால் விசா­ரிக்­கப்­பட்டு உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படுமெனவும், ஓய்­வு­பெற்ற நீதி­ப­தி­யொ­ரு­வரின் தலை­மையில் ஹஜ் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் கூறினார். ஹஜ் முறைப்­பா­டுகள் விசா­ர­ணையின் பின்பு உறு­தி­செய்­யப்­பட்டால் சம்­பந்­தப்­பட்ட முகவர் நிலை­யங்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வுள்­ளன.

இதே­வேளை, இவ்­வ­ருட ஹஜ் கட­மையை நிறை­வு­செய்து இறு­தி­யாக ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் குழு எதிர்வரும் 5 ஆம் திகதி இலங்கை வந்தடையவுள்ளது. இக்குழுவில் சுமார் 200 பேர் அடங்கியுள்ளதாகவும் பணிப்பாளர் எம்.ஆர்.எம்.மலிக் தெரிவித்தார்.   

ஏ.ஆர்.ஏ.பரீல்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.