தொழுகை நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

0 743

ஒரு மாத காலத்­துக்கும் மேலாக கொட்­டாம்­பிட்டி லுஃலு அல்­அமார் பள்­ளி­வா­சலில் தொழு­கைக்கு விதிக்­கப்­பட்­டி­ருந்த தடை உத்­த­ரவு கடந்த 28 ஆம் திகதி முதல் ஹெட்­டி­பொல பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரி­யினால் நீக்­கப்­பட்­டுள்­ளது. 

ஹெட்­டி­பொல பொலிஸ் நிலை­யத்­துக்கு கடந்த 28 ஆம் திகதி லுஃலு பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் அழைக்­கப்­பட்டு குறிப்­பிட்ட தடை­யுத்­த­ரவு நீக்­கப்­பட்டு விட்­ட­தா­கவும் வழ­மைபோல் தொடர்ந்து பள்­ளி­வா­சலில் தொழு­கை­களை நடாத்த முடியும் எனவும் தெரி­விக்­கப்­பட்­டது. தடை­யுத்­த­ரவு நீக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து ஐவேளை தொழுகை இடம்­பெ­று­வ­தா­கவும் கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஜும்ஆ தொழு­கையும் நடை­பெற்­ற­தா­கவும் லுஃலு அம்மார் பள்­ளி­வாசல் நிர்­வாக சபை செய­லாளர் மொஹமட் ஷாபி ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.

குறிப்­பிட்ட பள்­ளி­வாசல் தௌஹீத் ஜமா­அத்­துக்கு உரி­ய­தென முறைப்­பாடு செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்தே அப்­பள்­ளி­வா­சலில் சமயக் கட­மை­க­ளுக்கு பொலி­ஸாரால் தடை விதிக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்தத் தடையை நீக்­கு­மாறு அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் பிரதி பொலிஸ்மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர்.ஏ.பரீல்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.