ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படுவார்

கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிம் தெரிவிப்பு

0 632

ஐக்­கிய தேசியக் கட்சி ஜன­நா­யக ரீதியில் செயற்­படும் ஒரு கட்­சி­யாகும். அந்த வகையில் குடும்ப ஆட்­சியை கொண்டு நடத்­தாத ஐக்­கிய தேசியக் கட்சி எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் மக்கள் விரும்­பக்­கூ­டிய அல்­லது மக்கள் ஆத­ரிக்கக் கூடிய ஒரு வேட்­பா­ளரை நிறுத்தும்.

அதற்­கான அறி­விப்பு இன்னும் ஓரிரு தினங்­களில் வெளி­யாகும். அதன்­போது வேட்­பா­ளரை நாம் நிய­மிப்­போ­மென ஐக்­கிய தேசியக் கட்­சியின் தவி­சா­ளரும், நெடுஞ்­சா­லைகள், வீதி அபி­வி­ருத்தி மற்றும் பெற்­றோ­லிய வள அபி­வி­ருத்தி அமைச்­ச­ரு­மான கபீர் ஹாசிம் தெரி­வித்தார்.

கினி­கத்­தேனை மினு­வான்­தெ­னிய இட்­டி­கே­கம, உட­பொல்­கஸ்­வத்த ஊடாக தெர­ணி­ய­கல செல்லும் பிர­தான வீதியை காபட் வீதி­யாக செப்­ப­னிட்டு மக்கள் பாவ­னைக்கு கைய­ளிக்கும் நிகழ்வு நேற்று மினு­வான்­தெ­னிய பகு­தியில் இடம்­பெற்­றது.

சுமார் 8 கிலோ மீற்றர் கொண்ட இந்த காபட் வீதிக்கு நெடுஞ்­சா­லைகள், வீதி அபி­வி­ருத்தி மற்றும் பெற்­றோ­லிய வள அபி­வி­ருத்தி அமைச்சின் ஊடாக 300 மில்­லியன் ரூபா செல­வி­டப்­பட்­டுள்­ளது.

இந்­நி­கழ்வில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் நுவ­ரெ­லியா மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கே.கே.பிய­தாஸ, வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபை அதி­கா­ரிகள் மற்றும் பலரும் கலந்து கொண்­டனர்.

இந்­நி­கழ்வில் பிர­தம அதி­தி­யாகக் கலந்­து­கொண்டு மக்கள் மத்­தியில் உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஊடாக ஜனா­தி­பதி வேட்­பாளர் ஒரு­வரை நிய­மிப்­பதில் கட்­சிக்குள் எந்தப் பிரச்­சி­னையும் இல்­லை­யெனத் தெரி­வித்த அவர், தாம் வேட்­பா­ள­ராக வர வேண்­டு­மெனக் கட்­சியை சார்ந்த ஐவர் விண்­ணப்­பித்­துள்­ளனர். இவர்­களில் எவரை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக மக்கள் விரும்­பு­கின்­றார்­களோ அவரை வேட்­பா­ள­ராக ஐக்­கிய தேசிய கட்சி நிறுத்தும் எனவும் தெரி­வித்தார்.

அதே­நே­ரத்தில் சில கட்­சிகள் தற்­போது ஜனா­தி­பதி வேட்­பா­ளரை அறி­வித்­தி­ருந்­தாலும், இது தொடர்­பாக ஏனை­ய­வர்­க­ளிடம் கலந்­தா­லோ­சனை செய்­யாது நிறுத்­தி­யுள்­ளனர். ஆனால் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு ஜன­நா­ய­கத்தை பின்­பற்­றக்­கூ­டிய நிலை உள்­ளதால் அவ­ச­ர­மின்றி வேட்­பாளர் ஒரு­வரை நிய­மிக்க கட்­சியின் கொள்­கைக்­கேற்ப நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும்.

இந்த நாட்டை 20 வரு­ட­மாக ஆட்சி செலுத்­திய சிலர் இப்­போது நாட்டை எம்­மிடம் தாருங்கள் என்று கேட்­கின்­றனர். ஆனால் கடந்த காலங்­களில் இவர்கள் நாட்டு மக்­களின் பொது­வான பிரச்­சி­னை­களை கூட முறை­யாக தீர்க்­க­வில்லை. இந்த நிலையில் நாட்டை ஆளக்­கூ­டிய பொறுப்பை மக்கள் எம்­மிடம் வழங்­கினர். நாம் இந்தப் பொறுப்பை ஏற்­கும்­போது நாடு கடன் சுமை, குப்பை மற்றும் சைட்டம் ஆகிய பிரச்­சி­னை­க­ளுடன் பொறுப்­பேற்றோம்.

நல்­லாட்சி என்ற வகையில் நாம் செயற்­பட்­டி­ருந்த போதிலும் கடந்த 6 மாத கால­மாக தனி­யான அமைச்­ச­ரவை அந்­தஸ்­துடன் செயற்­பட்டு வரு­கின்றோம். ஐக்­கிய தேசியக் கட்சி இந்த நாட்டை பொறுப்­பேற்ற பின் இது­வரை 6,500 கோடி ரூபாய் கடன் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

இதில் 4000 கோடி ரூபாய் கடன் மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்தில் அவர்கள் முன்­னெ­டுத்த பணி­க­ளுக்கு செலுத்­தப்­பட்­டுள்­ளது. இருந்த போதிலும் இந்­நி­லையில் எமக்கு எதி­ராக நம்­பி­கை­யில்லா பிரே­ர­ர­ணை­களை கொண்டு வந்­தார்கள். மக்­களை தூண்டி விட்டு போராட்­டங்­களை நடத்­தி­னார்கள்.

இவை அனைத்­தையும் எதிர்­கொண்டு ஆட்­சியை நடத்தி வரு­கின்றோம்.
எமது ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆட்சி காலப்­ப­கு­தியில் பாட­சா­லைகள் அபி­வி­ருத்தி செய்­யப்­பட்­டுள்­ளன. பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு காப்புறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. சமுர்த்தி உதவி பெறுபவர்களுக்கு கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது பிரதமர் தலைமையில் தொழில் வாய்ப்புகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறாக நாட்டை முன்னெடுத்து செல்ல பல்வேறு வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

(ஹட்டன் நிருபர்)

vidivelli

Leave A Reply

Your email address will not be published.