போரா ஆன்மீக மாநாட்டுக்காக 100 ஹோட்டல்களில் 3000 அறைகள் பதிவு

0 814

உல­கெங்­கி­லு­முள்ள தாவுதி போரா சமூ­கத்தின் ஆன்­மிக மாநாடு எதிர்­வரும் செப்­டெம்பர் 1 ஆம் திகதி முதல் 10 தினங்கள் கொழும்பில் நடை­பெ­ற­வுள்­ளது. எதிர்­வரும் 1 ஆம் திகதி பம்­ப­ல­பிட்டி மெரைன் டிரைவில் அமைந்­துள்ள தாவூதி போரா பெரிய பள்­ளி­வா­சலில் இம்­மா­நாடு ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இம்­மா­நாட்­டுக்கு போரா சமூ­கத்தின் ஆன்­மிகத் தலைவர் கலா­நிதி செய்­தினா முபத்தல் செய்­னுத்தீன் தலைமை வகிக்­க­வுள்ளார்.

இந்த ஆன்­மிக மாநாட்டில் கலந்து கொள்­வ­தற்­காக உல­கெங்­கி­லு­மி­ருந்து போரா சமூ­கத்தைச் சேர்ந்த சுமார் 21 ஆயிரம் பேர் இலங்கை வர­வுள்­ளனர். தொடர்ந்து 10 தினங்கள் நடை­பெ­ற­வுள்ள இந்த ஆன்­மிக மாநாட்டில் கலந்­து­கொள்ள வரு­ப­வர்கள் தங்­கி­யி­ருப்­ப­தற்­காக கல்­கிசை, கொழும்பு மற்றும் நீர்­கொ­ழும்பு பகு­தி­களில் சுமார் 100 பிர­பல ஹோட்­டல்­களில் சுமார் 3000 அறைகள் பதிவு செய்­யப்­பட்டு ஒதுக்­கப்­பட்­டுள்­ளன. மேலும் இந்தப் பிர­தே­சங்­களில் சொகுசு மாடி வீடு­களும் ஒதுக்­கப்­பட்­டுள்­ளன என சுற்­றுலா அமைச்சின் அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்தார். இந்த மாநாடு இலங்­கையில் நடை­பெ­று­வதன் கார­ண­மாக சுற்­று­லாத்­துறை 31 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை வரு­மா­ன­மாகப் பெற்றுக் கொள்ளும் என எதிர்­பார்ப்­ப­தா­கவும் அவர் கூறினார்.

பெரும் எண்­ணிக்­கை­யி­லானோர் கலந்து கொள்ளும் இம்­மா­நாட்டில் பொலித்தீன் பாவ­னைக்கு தடை விதித்­துள்­ள­தா­கவும், உணவு வீண்­வி­ரயம் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் போரா பள்­ளி­வாசல் தெரி­வித்­துள்­ளது. இம்­மா­நாட்டில் இலங்கை, அவுஸ்­தி­ரே­லியா, பஹ்ரைன், பங்­க­ளாதேஷ், கனடா, சீனா, எகிப்து, பிரான்ஸ், ஜேர்மன், ஹொங்கொங், இந்­தியா, இந்­தோ­னே­ஷியா, ஈராக், அயர்­லாந்து, ஜப்பான், கென்யா, குவைத், மலே­சியா, மியன்மார், நெதர்­லாந்து, நோர்வே, ஓமான், பாகிஸ்தான், போர்த்­துக்கல், கட்டார், சவூதி அரே­பியா, சிங்­கப்பூர், தென்­னா­பி­ரிக்கா, சுவீடன், தன்­சா­னியா, தாய்­லாந்து, ஐக்­கிய அரபு இராஜ்­ஜியம், உகண்டா, ஐக்­கிய இராச்­சியம், யேமன் மற்றும் சம்­பியா ஆகிய நாடு­களைச் சேர்ந்த தாவூதி போரா சமூ­கத்­தினர் சமு­க­ம­ளிக்­க­வுள்­ளனர்.

இந்த ஆன்­மிக மாநாட்­டிற்கு அரசாங்கம் விஷேட பாதுகாப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதற்கு முன்பு 2009 ஆம் ஆண்டு போரா சமூகத்தின் இவ்வாறான ஆன்மிக மாநாடொன்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.