கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களிடம் நாளை முதல் தகவல் திரட்ட நடவடிக்கை

இழப்பீட்டுக்கான அலுவலகம்

0 735

நாட்டில் கடந்த காலத்தில் இடம்­பெற்ற கல­வ­ரங்கள் மற்றும் மூன்று தசாப்­த­கால போர் ஆகி­ய­வற்­றினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை நேரில் சந்­தித்து விப­ரங்­களைப் பெற்­றுக்­கொள்ளும் நட­வ­டிக்­கைகள் நாளை புதன்­கி­ழ­மை­யி­லி­ருந்து ஆரம்­ப­மா­க­வி­ருப்­ப­தாக இழப்­பீட்­டுக்­கான அலு­வ­லகம் தெரி­வித்­தி­ருக்­கி­றது.
பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்ட விசேட சட்­டத்தின் ஊடாக ஸ்தாபிக்­கப்­பட்ட இழப்­பீட்­டுக்­கான அலு­வ­லகம், கடந்த காலத்தில் நாட்டில் இடம்­பெற்ற கல­வ­ரங்கள் மற்றும் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான இழப்­பீட்டைப் பெற்­றுக்­கொ­டுக்கும் நோக்­கத்தைக் கொண்­ட­தாகும். அத்­தோடு கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற பயங்­க­ர­வாத குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான நட்­ட­ஈடும் இந்த இழப்­பீட்­டுக்­கான அலு­வ­ல­கத்தின் மூல­மா­கவே வழங்­கப்­பட்டு வரு­கின்­றது.

இந்­நி­லையில் யுத்தம் மற்றும் கல­வ­ரங்­களால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை அடை­யாளம் காணுதல், அவர்­க­ளுக்கு அத­ன­டிப்­ப­டையில் இழப்­பீட்டை ஒதுக்­கீடு செய்தல் உள்­ளிட்ட இழப்­பீட்­டுக்­கான அலு­வ­ல­கத்தின் கொள்கை உரு­வாக்கப் பணிகள் இடம்­பெற்று வரு­வ­துடன், செப்­டெம்பர் மாதத் தொடக்­கத்தில் அதனைப் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிப்­ப­தற்கும் எதிர்­பார்க்­கப்­பட்­டுள்­ளது.
இதே­வேளை, போரி­னாலும், கல­வ­ரங்­க­ளி­னாலும் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை நேரில் சந்­தித்து விப­ரங்­களைப் பெற்­றுக்­கொள்ளும் பணிகள் நாளைய தினத்­தி­லி­ருந்து ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன. அதன்­படி நாளை மன்­னா­ருக்கு விஜயம் மேற்­கொண்டு பாதிக்­கப்­பட்­ட­வர்­களைச் சந்­திக்­க­வுள்ள இழப்­பீட்­டுக்­கான அலு­வ­ல­கத்தின் அதி­கா­ரிகள், தொடர்ந்து யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா உள்ளிட்ட பிரதேசங்களுக்கும் விஜயம் செய்வார்கள். அதேபோன்று தென்மாகாணத்திலும் இத்தகைய சந்திப்புக்களை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.