இலங்கையின் 23 ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.
22 ஆவது இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கவின் பதவிக்காலம் கடந்த 18 ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 22 ஆவது இராணுவத்தளபதியாக இதுவரை காலம் கடமையாற்றிய லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கவின் பதவிக்காலம் கடந்த 18 ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்துள்ள நிலையில் புதிய இராணுவத்தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று நியமிக்கப்பட்டார். இவர் இலங்கை இராணுவத்தின் 23 ஆவது இராணுவத்தளபதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். கெடெட் அதிகாரியாக 1984ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் சேர்ந்த ஷவேந்திர சில்வா, இராணுவ தளபதி பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர் இராணுவ பணிக்குழாம் பிரதானியாக கடமை புரிந்தார்.
இந்நிலையில் அடுத்த நிலையில் இராணுவ தளபதிக்கான பரிந்துரையில் இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில் அது குறித்த சில எதிர்ப்புகளும் எழுந்திருந்தன. இந்நிலையில் ஜனாதிபதி, சவேந்திர சில்வாவையே நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட ஆகியோரும் பிரசன்னமா கியிருந்தனர்.
Vidivellihi