இரத்தக்கறை படிந்தவர் ஜனாதிபதியாக முடியாது

இலங்கை ராஜபக்ஷ குடும்பத்தின் தனிப்பட்ட சொத்தல்ல என்கிறார் மங்கள

0 745

ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளி­னதும், மேலும் பல அப்­பா­வி­க­ளி­னதும் இரத்­தத்தை தமது கைகளில் கொண்­டி­ருக்கும் குற்ற­வாளி நாட்டின் அடுத்த ஜனா­தி­ப­தி­யாக வர முடி­யாது.

கோத்­தா­பய ராஜ­ப­க் ஷவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகப் பெய­ரிட்­ட­மையின் மூலம் மஹிந்த எதற்கு முக்­கி­யத்­துவம் வழங்­கி­யுள்ளார் என்­பது வெளிப்­பட்­டுள்­ளது என நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்­துள்ளார். ‘இலங்­கையும், அதன் மக்­களும் ராஜ­பக் ஷ குடும்­பத்தின் தனிப்­பட்ட சொத்து’ என்­ப­தா­கவே மஹிந்­தவின் மன­தி­லுள்ள எண்ணம் என்­பதை நாம் புரிந்­து­கொள்ள வேண்டும் என்றும் அவர் கடு­மை­யாகச் சாடினார்.

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கோத்­த­பாய ராஜ­பக் ஷ ஞாயிற்­றுக்­கி­ழமை அக்­கட்­சியின் தலை­வரும், முன்னாள் ஜனா­தி­ப­தியும், தற்­போ­தைய எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான மஹிந்த ராஜ­பக் ஷ­வினால் அறி­விக்­கப்­பட்­ட­மையைத் தொடந்து அமைச்சர் மங்­கள சம­ர­வீர மிக­ நீண்ட அறிக்­கை­யொன்றை வெளி­யிட்­டி­ருக்­கின்றார். அதில் மேலும் கூறப்­பட்­டி­ருப்­ப­தா­வது:

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ இன்றை தினம் (நேற்று முன்­தினம்) அவ­ரது குடும்­பத்தின் கட்­சி­யான ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ளரை அறி­வித்தார். அக்­கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் யாராக இருப்பார் என்­பது தொடர்பில் கடந்த சில வார­கா­ல­மா­கவே உல­வி­வந்த வதந்­தி க­ளுக்குப் பதி­ல­ளிப்­பதை அவர் தவிர்த்து வந்தார். மஹிந்த ராஜ­பக் ஷவை நான் பல வரு­ட­கா­ல­மாக அறிவேன்.

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்­கவின் தலை­மைத்­து­வத்தின் கீழ் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் நாங்கள் இரு­வரும் ஒன்­றி­ணைந்து செயற்­பட்­டி­ருக்­கின்றோம். ஒரு­மித்து தேர்தல் பிர­சா­ரங்­களை மேற்­கொண்­டதுடன், ஒன்­றா­கவே அவற்றில் வெற்­றியும் பெற்­றி­ருக்­கிறோம். மஹிந்­தவின் அமைச்­ச­ர­வை­யிலும் நான் அங்கம் வகித்­தி­ருக்­கிறேன்.

ஆனால் கடந்த 2006 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜ­பக் ஷவின் அர­சாங்­கத்­தை­விட்டு வில­கிய போது நான் முன்னர் அறிந்­தி­ருந்­ததை விடவும் அவர் வேறொரு மனி­த­ராக இருந்தார். ஒரு ஜனா­தி­ப­தி­யாக நாட்டை முன்­னி­லைப்­ப­டுத்­து­வ­திலும் பார்க்க தனது குடும்­பத்தை வளப்­ப­டுத்திப் பாது­காப்­ப­தற்கே அவர் முக்­கி­யத்­துவம் வழங்­கினார். முன்­பொரு காலத்தில் அவர் உண்­மை­யி­லேயே இம்­மண்ணின் மைந்­த­னா­கவும், இந்­நாட்டின் சாதா­ரண மக்­க­ளுக்­காக சிந்­திக்­கின்ற ஒரு­வ­ரா­கவும் இருந்தார்.

கடந்த 2015 ஜன­வ­ரியில் 400,000 இற்கும் அதி­க­மான வாக்­கு­களால் தோற்­க­டிக்­கப்­பட்டு, மெத­மு­லா­ன­விற்குத் திருப்பி அனுப்­பப்­பட்ட போது மஹிந்த தனது செயற்­பா­டு­களில் காணப்­பட்ட தவ­று­களை இனங்­கண்­டி­ருப்பார் என்றும், அவற்­றி­லி­ருந்து பாடம் கற்­றுக்­கொண்­டி­ருப்பார் என்ற நிலைப்­பாட்­டிற்கு வந்­தி­ருந்தேன்.

நாட்டின் நிர்­வா­கத்தில் தனது குடும்­பத்­தி­னரை அமர்த்­தி­யமை தொடர்­பிலும், மக்­களின் பணம் கொள்­ளை­யி­டப்­படும் போது அதனைத் தடுப்­ப­தற்கு முற்­ப­டாமை குறித்தும், மீண்டும் காண­மு­டி­யா­த­படி ஊட­க­வி­ய­லா­ளர்கள் வெள்ளை வான்­களில் அடைக்­கப்­பட்­டமை தொடர்­பிலும் அவர் வருந்­துவார் என்று கரு­தினேன். முதலில் தமி­ழர்­க­ளுக்கு எதி­ரா­கவும், அதனைத் தொடர்ந்து முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­கவும் இன­வா­தத்தைத் தூண்­டி­யதன் ஊடாக தனது அர­சியல் அதி­கா­ரத்தைப் பலப்­ப­டுத்திக் கொண்­ட­மைக்­காக வருந்­துவார் என நினைத்தேன்.

ஆனால் கடந்த வருடம் அக்­டோ­பரில் அவர் முறை­கே­டாகப் பத­விக்கு வர­முற்­பட்ட போது மேற்­கண்­டவை அவர் கற்­றுக்­கொண்ட பாடங்கள் அல்ல என்­பதை நான் உணர்ந்­து­கொண்டேன்.

அவரைப் பொறுத்­த­வ­ரையில் சட்­டத்தின் ஆட்சி என்­பது ஒரு பொருட்­டல்ல. அவ­ர­ளவில் ஜன­நா­யகம் என்­பது வெறும் வார்த்தை ஜாலம். அத்­த­ரு­ணத்தில் மஹிந்­த­விற்கு எதி­ராக நீதி­மன்றம் தீர்ப்­ப­ளிக்கும் வல்­ல­மையைப் பெற்­றி­ருந்­த­மை­யி­னா­லேயே அவர் மீண்டும் பத­வி­யி­றங்­கினார்.

ஆனால் இன்று (நேற்று முன்­தினம்) தான் மஹிந்த ராஜ­பக் ஷ எதி­ர­ணியில் இருந்த காலப்­ப­கு­தியில் உண்­மை­யி­லேயே எதனைக் கற்­றுக்­கொண்­டி­ருக்­கிறார் என்­பதை அறிந்­து­கொண்டேன். மஹிந்த தனது குடும்­பத்­திற்கு மட்­டும் ­மீ­றிய அதி­கா­ரங்­களைக் கொடுத்­த­மையை உண­ர­வில்லை. தனது குடும்­பத்­திற்குப் போதி­ய­ளவு அதி­கா­ரங்­களை வழங்­க­வில்லை என்றே அவர் உறு­தி­யாக நம்­பு­கின்றார். அவரைச் சார்ந்­தவர்கள் பல மில்­லியன் பெறு­ம­தி­யான மக்கள் பணத்தை மோசடி செய்­ததை அவர் உண­ர­வில்லை. அவர் இந்த நாட்டை அதி­க­ளவில் தீவி­ர­வா­த­ம­யப்­ப­டுத்­தினார் என்­பதை உண­ர­வில்லை. நாட்டின் நீதித்­துறை சுதந்­தி­ரத்­திற்கு அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்­தி­யமை குறித்து அவர் வருந்­த­வில்லை.

பிரகீத் எக்­னெ­லி­கொட காணாமல் ஆக்­கப்­பட்­டமை, லசந்த விக்­ர­ம­துங்க கொலை செய்­யப்­பட்­டமை, கீத் நொயார் கடத்திச் செல்­லப்­பட்டு துன்­பு­றுத்­தப்­பட்­டமை மற்றும் மேலும்­பல எண்­ணற்ற ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீதி தொடர்பில் மஹிந்த ராஜ­பக் ஷ வருந்­த­வில்லை. மாறாக ஏனைய ஊட­க­வி­ய­லா­ளர்கள் இக்­குற்­றச்­செ­யல்­களைப் புரிந்த மனி­தரைக் கண்­ட­றி­வார்­க­ளாயின் அவர்­க­ளுக்கும் இதே கதிதான் என்­பதே அவரின் எண்­ண­மா­க­வுள்­ளது.

சுமார் 5 வரு­ட­கா­ல­மாக எதி­ர­ணியில் இருந்த பின்­னரும் தன்­னு­டைய சகோ­தரன் நாட்டின் ஜனா­தி­பதி, தானே பிர­தமர், மற்­றொரு சகோ­தரன் சபா­நா­யகர், பொரு­ளா­தார விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பாக நான்­கா­வது சகோ­தரன், மக­னுக்கு அவர் விரும்பும் பதவி என்­பது தான் மஹிந்த ராஜ­பக் ஷ இந்­நாட்டு மக்­க­ளுக்கு வழங்­கு­கின்ற செய்­தி­யாக இருந்தால், இதி­லி­ருந்து ‘இலங்கை நாடும், அதன் மக்­களும் ராஜ­பக் ஷ குடும்­பத்தின் தனிப்­பட்ட சொத்து’ என்­பதே மஹிந்­தவின் மன­தி­லுள்ள எண்ணம் என்­பதை நாம் புரிந்­து­கொள்ள வேண்டும்.
இந்­நாட்டின் வர­லாற்றில் முதற்­த­ட­வை­யாக பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு உள்­ளான, இந்­நாட்டின் குடி­யு­ரிமை தொடர்பில் கேள்வி எழுப்­பப்­பட்டு வரு­கின்ற ஒருவர் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகப் பெய­ரி­டப்­பட்­டமை குறித்து வெட்­க­ம­டை­கிறேன்.

அர­சியல் என்­பது அதிக தூரத்­திற்கு ஓடு­ப­வர்­க­ளுக்­கா­னதே அன்றி, வேக­மாக ஓடு­ப­வர்­க­ளுக்­கா­னது அல்ல. மரதன் ஓட்­டப்­போட்­டியில் ஆரம்­பத்தில் முன்­ன­ணியில் இருப்­பவர் இறு­தியில் வெற்­றி­பெறும் வாய்ப்­புக்கள் மிகவும் குறை­வாகும். தேர்­த­லுக்குப் பல மாதங்­க­ளுக்கு முன்னர் மஹிந்­தவின் தற்­போ­தைய செயற்­பாடு அவர் எதற்கு முக்­கி­யத்­துவம் வழங்­கு­கின்றார், அவ­ரது சொத்­துக்கள் என்ன, அவ­ரது நேர்மை எங்கே பொய்­யா­கி­றது உள்­ளிட்ட அனைத்­தையும் முழு நாட்டு மக்­க­ளுக்கும் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. இந்தக் கேள்­வி­க­ளுக்­கான விடை ராஜ­பக் ஷ, ராஜ­பக் ஷ மற்றும் ராஜ­பக் ஷவே.

இந்த நாட்டின் அடுத்த ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக் ஷ­வா­கவோ அல்­லது வேறெந்த ராஜ­பக் ஷ­வா­கவோ இருக்க முடி­யாது. பல ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளி­னதும், மேலும் பல அப்­பா­வி­க­ளி­னதும் இரத்­தத்தை தமது கைகளில் கொண்­டி­ருக்கும் குற்­ற­வாளி நாட்டின் அடுத்த ஜனா­தி­ப­தி­யாக முடி­யாது. இந்­நாட்டில் பிறந்த ஒருவரும், நாட்டைவிட்டுத் தப்பியோடாத ஒருவரே ஜனாதிபதியாக வரவேண்டும்.

தனது குடும்பத்தை விடுத்து நாட்டை முன்னிறுத்துவதுடன், ஜனநாயகத்தைப் பாதுகாத்து நீதித்துறை, அரசதுறை என்பவற்றின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளால் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்படுபவரே ஜனாதிபதியாவார். எம்முடைய வேட்பாளரே நாட்டின் அடுத்த ஜனாதிபதியாவார்.

யார் எம்முடைய வேட்பாளர்? ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டு, மதச்சார்பற்ற வகையில் அனைவரையும் ஒன்றிணைப்பதுடன் ராஜபக் ஷ குடும்பம் மற்றும் அவர்களின் வெள்ளைவான் கலாசாரத்திற்கு எதிராக நேருக்கு நேராக நின்று போராடத்தக்கதும், கொடுங்கோண்மை மற்றும் ஒடுக்குமுறை என்பவற்றுக்கு எதிராக மக்களை ஒன்றிணைத்து வெல்லும் ஒருவரே எமது வேட்பாளராவார்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.