ஹஜ் செல்ல தயாராகவிருந்த 8 பேர் ஏமாற்றப்பட்டனர்

0 853

புனித ஹஜ் கடமை அடுத்த வாரம் நிறை­வுக்கு வர­வுள்­ளது. இவ்­வ­ருடம் கடந்த புதன்­கி­ழமை வரை 1.8 மில்­லியன் ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் சவூதி அரே­பி­யாவை சென்­ற­டைந்­துள்­ளனர் என சவூதி அரே­பிய ஹஜ் அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளார்கள்.

1,725,455 ஹாஜிகள் வான்­மார்க்­க­மா­கவும் 95,634 பேர் தரை­மார்க்­க­மா­கவும் 17,250 பேர் கடல்­மார்க்­க­மா­கவும் வருகை தந்­துள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

சுமார் 2.5 மில்­லியன் ஹாஜிகள் பங்­கேற்­பார்கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இவ்­வ­ருடம் சவூதி ஹஜ் அமைச்­சினால் ஆரம்­பத்தில் 3500 ஹஜ் கோட்டா வழங்­கப்­பட்­டது. பின்பு மேல­திக கோட்­டா­வாக 500 வழங்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இலங்­கை­யி­லி­ருந்து முத­லா­வது ஹஜ் குழு கடந்த 15 ஆம் திகதி கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­தி­லி­ருந்து ஜித்தா நோக்­கிப்­ப­ய­ண­மா­னது. இறு­தி­யாக கடந்த 7 ஆம் திகதி இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுடன் இரு சவூதி அரே­பிய விமா­னங்கள் ஜித்­தா­வுக்குச் சென்­ற­டைந்­தன.

ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்­காக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக் மற்றும் ஹஜ் குழு உறுப்­பி­னர்கள் சிலர் கடந்த 27 ஆம் திகதி சவூதி அரே­பி­யாவைச் சென்­ற­டைந்­தனர்.

மேலும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், இரா­ஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம்.பௌஸி, அமைச்சர் ஹலீமின் பிரத்­தி­யேக செய­லாளர் எம்.எச்.எம்.பாஹிம் ஆகியோர் கடந்த 5 ஆம் திகதி சவூதி அரே­பி­யாவைச் சென்­ற­டைந்­தனர்.

இலங்கை ஹாஜி­களின் மருத்­துவ சேவை­க­ளுக்­காக ஒரு பெண் டாக்டர் உட்­பட 5 டாக்­டர்கள் மக்கா, மதீ­னாவில் பணியில் அமர்த்­தப்­ப­ட்ட­ுள்­ளனர். அங்கு இலங்கை ஹாஜி­க­ளுக்­கென பிரத்­தி­யேக மருத்­துவ முகாம்கள் நிறு­வப்­பட்­டுள்­ளன.

இவ்­வ­ருடம் ஹஜ் ஏற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தற்­காக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் 93 ஹஜ் முக­வர்கள் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தனர். இவ்­வ­ருடம் ஹஜ் ஏற்­பா­டுகள் எவ்­வித பிரச்­சி­னை­க­ளு­மின்றி முன்­னெ­டுக்­கப்­பட்­டாலும் இறுதி நேரத்தில் இரண்டு ஹஜ் முக­வர்­க­ளினால் ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் அலைக்­க­ழிக்­கப்­பட்­டனர்.

இறுதி நேரத்தில் கைவி­டப்­பட்ட ஹஜ் யாத்­தி­ரி­கர்கள்

இவ்­வ­ருட ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்­காக ஹஜ் முக­வர்­க­ளிடம் உரிய கட்­ட­ணங்­களைச் செலுத்தி ஹஜ் பய­ணத்­துக்குத் தயா­ரான நிலை­யி­லுள்ள 123 ஹஜ் யாத்­தி­ரி­கர்­களை இரண்டு ஹஜ் முக­வர்கள் இறுதி நேரத்தில் ஏமாற்­றி­யுள்­ளதால் அவர்கள் நிர்க்­க­தி­யா­கி­யுள்­ளனர். இவர்­களில் 30 க்கும் மேற்­பட்ட ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் கடந்த 6 ஆம் திகதி முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தை முற்­று­கை­யிட்டு முறைப்­பா­டு­களை முன்­வைத்­தனர். முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலீக் ஹஜ் பய­ணத்தை மேற்­கொண்­டுள்­ளதால் பாதிக்­கப்­பட்­டுள்ள ஹஜ் பய­ணிகள் உதவிப் பணிப்­பாளர் அன்வர் அலி­யிடம் நியாயம் கோரி­னார்கள்.

123 ஹஜ் யாத்­தி­ரி­களில் 8 ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் ஒரு ஹஜ் முக­வ­ரிடம் ஹஜ் கட்­ட­ணங்­களைச் செலுத்­தி­யுள்ள நிலையில் அவர்கள் செலுத்­திய கட்­ட­ணங்கள் அவர்­களை ஹஜ் கட­மைக்கு அழைத்துச் செல்லும் ஹஜ் அனு­ம­திப்­பத்­திர உரி­மை­யா­ள­ரான மற்­றுமோர் ஹஜ் முக­வ­ருக்கு குறிப்­பிட்ட முக­வ­ரினால் வழங்­கப்­ப­ட­வில்லை. இதனால் குறிப்­பிட்ட 8 ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் பயண ஏற்­பா­டு­களைச் செய்ய முடி­யாது என ஹஜ் அனு­ம­திப்­பத்­திர உரி­மை­யா­ள­ரான ஹஜ் முகவர் மறுத்­துள்ளார். இந்தப் பிரச்­சினை தொடர்­பான கலந்­து­ரை­யாடல் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் நீண்­ட­நேரம் இடம்­பெற்­றாலும் தீர்­மானம் எட்­டப்­ப­ட­வில்லை. ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளி­ட­மி­ருந்து அற­வி­டப்­பட்ட கட்­ட­ணத்தை அனு­ம­திப்­பத்­திரம் கொண்ட முக­வ­ரிடம் செலுத்­து­வ­தாக குறிப்­பிட்ட ஹஜ் முகவர் உறு­தி­ய­ளிக்­க­வில்லை. இதனால் 8 ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளையும் பணம் பெற்­றுக்­கொண்ட ஹஜ் முக­வ­ருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கும்­படி முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.

இதே­வேளை, மேலும் 115 ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் கடந்த 6 ஆம் திகதி மாலை­வரை உரிய விமான டிக்கட் வழங்­கப்­ப­டாது ஒரு ஹஜ் முக­வ­ரினால் அலைக்­க­ழிக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்கள் ஹஜ் முக­வ­ருக்கு உரிய கட்­ட­ணங்­களை செலுத்­தி­யி­ருந்­தாலும் சவூதி அரே­பியா விமா­னத்தில் பய­ணிப்­ப­தற்­கான விமான டிக்­கட்­டுக்குப் பணம் வழங்­கப்­ப­ட­வில்லை. இதனால் சவூதி அரே­பிய விமான சேவை விமான டிக்­கட்­டு­களை விநி­யோ­கிக்­க­வில்லை.

விமான டிக்­கட்­டுகள் வழங்­கப்­ப­டா­ததால் ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் பல அசௌ­க­ரி­யங்­களை எதிர்­நோக்­கி­யி­ருந்­தனர். அவர்கள் நாட்டின் பல பகுதிகளிலிருந்து பயணத்தை மேற்கொள்ள வந்தவர்கள் ஆவர்.

115 பேர் பயணம் 8 பேர் ஹஜ் யாத்­திரை இழப்பு

ஹஜ் முக­வர்­களால் இறுதி நேரத்தில் கைவி­டப்­பட்­டி­ருந்த 123 ஹஜ் யாத்­தி­ரி­கர்­களில் 115 பேர் 7 ஆம் திகதி காலை சவூதி விமான சேவை­யூ­டாக ஹஜ் கட­மைக்­காக சவூதி அரே­பியா நோக்கிப் பய­ண­மா­னார்கள்.

ஏனைய 8 ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் ஹஜ் முகவர் ஒரு­வ­ருக்கு செலுத்­திய ஹஜ் கட்­டணம் தொடர்­பான பிரச்­சினை குறிப்­பிட்ட ஹஜ் முக­வ­ரினால் தீர்க்­கப்­ப­டா­மை­யினால் அவர்கள் 8 பேரும் புனித ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்கு தடை­யேற்­பட்­டது.

இறுதி நேரத்தில் ஹஜ் முக­வர்­களால் கைவி­டப்­பட்­டி­ருந்த ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் விவ­காரம் 6 ஆம் திகதி முன்­தினம் இரவு 11 மணி வரை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் உத­விப்­ப­ணிப்­பாளர் அன்வர் அலியின் தலை­மையில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. இக்­க­லந்­து­ரை­யா­டலில் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சின் அதி­கா­ரிகள் பாதிக்­கப்­பட்ட ஹஜ் யாத்­தி­ரி­கர்­களில் ஒரு தொகு­தி­யினர் சம்­பந்­தப்­பட்ட ஹஜ் முக­வர்கள் கலந்து கொண்­டிருந்தனர்.

115 ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்­கான சவூதி அரே­பிய விமான சேவையின் பய­ணச்­சீட்­டு­க­ளுக்­கு­ரிய கட்­ட­ணத்தை செலுத்­து­வ­தற்கு சம்­பந்­தப்­பட்ட ஹஜ் முகவர் உடன்­பட்டார். அதற்­கி­ணங்க 115 ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் 7 ஆம் திகதி சவூதி நோக்கி பய­ண­மா­கினர்.

ஏனைய 8 ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் ஹஜ் முக­வ­ரொ­ரு­வ­ருக்குச் செலுத்­திய கட்­ட­ணங்கள் ஹஜ் அனு­ம­திப்­பத்­தி­ரத்­துக்கு உரித்­தான ஹஜ் முக­வ­ருக்கு செலுத்­து­வதில் தீர்­வொன்று எட்­டப்­ப­டா­மை­யினால் அவர்­க­ளது ஹஜ் பய­ணத்தில் தடை­யேற்­பட்­டது.

குறிப்­பிட்ட 8 ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கும் ஹஜ் முக­வ­ருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்­ளு­மாறு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள அதி­கா­ரிகள் ஆலோ­சனை வழங்­கி­னார்கள்.

இதே­வேளை, இவ்­வி­வ­காரம் ஹஜ் கடமையில் தற்போது ஈடுபட்டிருக்கும் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டது. அமைச்சர் ஹலீம் சவூதியிலிருந்து தேவையான அறிவுரைகளை வழங்கியிருந்தார்.

ஊழல் முக­வர்­க­ளுக்கு சட்ட நட­வ­டிக்கை

ஊழல்­களில் ஈடு­பட்­டுள்ள ஹஜ் முக­வர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என ஹஜ் குழு உறுப்­பினர் எம்.எச்.எம்.பாஹிம் தெரி­வித்தார். ஹஜ் முக­வர்கள் தொடர்­பான முறைப்­பா­டு­களை விசா­ரிப்­ப­தற்கு ஓய்வு பெற்ற நீதி­ப­தி­யொ­ரு­வரின் தலை­மையில் மூவ­ர­டங்­கிய குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் கூறினார்.

8 ஹஜ் விண்­ணப்­ப­தா­ரி­களை ஏமாற்றிப் பணம் பெற்றுள்ள முகவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 8 ஹஜ் விண்ணப்பதாரிகள் குறிப்பிட்ட முகவருக்கு கட்டணமாக தலா 6 இலட்சத்து 70 ஆயிரம் கடந்த மே மாதம் செலுத்தியிருந்தும் அவர்கள் ஹஜ் வாய்ப்பை இழந்துள்ளமை அனுமதிக்கப்பட முடியாதது என்றும் தெரிவித்தார்.

மக்காவிலிருந்து எஸ்.என்.எம்.ஸுஹைல்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.