வீட்டில் பிர­சவம் பார்க்­கையில் குழந்தை மரணம் இர­க­சி­ய­மாக அடக்கம் செய்த தாய், தந்தை கைது

கஹடகஸ்திகிலியவில் சம்பவம், குழந்தையின் ஜனாஸா தோண்டியெடுக்கப்பட்டது

0 722

வைத்­தி­ய­சா­லைக்குச் செல்­லாது வீட்டில் வைத்து பிர­சவம் பார்த்த நிலையில் குழந்தை உயி­ரி­ழந்து பிறந்­துள்­ள­தை­ய­டுத்து, பிர­தே­ச­வா­சி­க­ளுக்குத் தெரி­யாது இர­க­சி­ய­மான முறையில் அடக்கம் செய்த குழந்­தையின் தந்­தை­யையும் தாயையும் பொலிசார் கைது செய்­துள்­ளனர். இச் சம்­பவம் அநு­ரா­த­புரம் மாவட்­டத்­திற்­குட்­பட்ட கஹ­க­ட­கஸ்­தி­கி­லிய,

மஹா கிரிப்­பேவ கிரா­மத்தில் கடந்த ஜூலை 28 ஆம் திகதி இடம்­பெற்­றுள்­ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வரு­வ­தா­வது, குறித்த தந்­தையும் தாயும் தீவிர தப்லீக் ஜமாஅத் கொள்­கையை பின்­பற்­று­ப­வர்­க­ளாவர். அதிலும் நுஸ்ரான் பின்­னூரி எனும் நபரால் பிர­சாரம் செய்­யப்­படும் வைத்­தி­ய­சா­லை­க­ளுக்குச் சென்று சிகிச்சை பெறக் கூடாது எனும் நடை­மு­றையை நீண்ட கால­மாக பின்­பற்றி வரு­ப­வர்­க­ளாவர். இக் குடும்­பத்­தினர் எந்­த­வொரு நோய்க்கும் வைத்­தி­ய­சா­லைக்கு சென்று மருந்­தெ­டுப்­ப­தில்லை என்றும் குறிப்­பாக ஆண் வைத்­தி­யர்­களை நாடு­வ­தில்லை என்றும் பிர­தே­ச­வா­சிகள் தெரி­விக்­கின்­றனர்.

இந்­நி­லை­யி­லேயே 20 வய­தே­யான குறித்த யுவதி, கர்ப்­ப­ம­டைந்­துள்ள நிலையில் வைத்­தி­ய­சாலை மூல­மாக எந்­த­வித சிகிச்­சை­க­ளையோ மருத்­துவ பரி­சோ­த­னை­க­ளையோ பெறு­வதை தவிர்த்து வந்­துள்­ளனர். இந்­நி­லை­யி­லேயே கடந்த ஜூலை 28 ஆம் திகதி வீட்டில் குழந்தை பிறந்­துள்­ளது. தாய்க்கு வயது 20 ஆகும். அத்­துடன் இதுவே முதல் பிர­ச­வமு­மாகும். இப் பெண்ணின் கண­வரின் மூத்த தாய் ஒரு­வரே வீட்டில் பிர­ச­வத்­துக்கு உத­வி­யாக இருந்­துள்ளார்.

இந் நிலை­யி­லேயே குழந்தை உயி­ரி­ழந்து பிறந்­துள்­ளது. இந்­நி­லையில் குழந்­தையை பிர­தேச முஸ்லிம் மைய­வா­டிக்குக் கொண்டு சென்று இர­க­சி­ய­மான முறையில் குடும்­பத்­தினர் அடக்கம் செய்­துள்­ளனர். இவ்­வாறு குழந்தை பிறந்து மர­ணித்த விடயம் பிர­தே­ச­வா­சி­க­ளுக்குத் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை.
இச் சம்­பவம் நடந்து இரண்டு நாட்­களின் பின்னர் வேறொரு ஜனா­ஸாவை அடக்கச் சென்­ற­போதே அங்கு புதி­தாக ஜனாஸா ஒன்று அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ளதை பிர­தேச மக்கள் கண்­டுள்­ளனர். பின்னர் இது குறித்து விசா­ரித்­த­போதே இவ்­வாறு வீட்டில் குழந்தை பிறந்து உயி­ரி­ழந்த விடயம் தெரிய வந்­துள்­ளது.

பின்னர் பிர­தேச மக்கள் பொலி­சா­ருக்கு தகவல் வழங்­கிய நிலை­யி­லேயே குழந்­தையின் தாயும் தந்­தையும் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர். குழந்தை உயி­ரி­ழந்­துதான் பிறந்­ததா இன்றேல் உயி­ருடன் பிறந்து பின்னர் இறந்ததா என்பது தொடர்பில் பொலிசாரும் மருத்துவ அதிகாரிகளும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இது குறித்து ஆராயும் வகையில் அதிகாரிகளால் குழந்தையின் ஜனாஸா நேற்று முன்தினம் தோண்டியெடுத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.