இஸ்லாமிய அடிப்படைவாத சந்தேக நபர்களை அமெரிக்க புலனாய்வுப்பிரிவினர் சந்தித்தது ஏன்?

நோக்கம் என்ன என்றும் விமல் கேள்வி

0 647

இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத தாக்­கு­தல்­களின் பின்னர் நாட்டின் உள்­நாட்டு விவ­கா­ரங்­களில் அமெ­ரிக்கா ஆதிக்கம் செலுத்தத் தொடங்­கி­யுள்­ளது என்று தெரி­வித்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்ச, அமெ­ரிக்க புல­னாய்வுப் பிரிவு பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­பட்­டுள்­ளார்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள சந்­தேக நபர்­களை சந்­தித்­ததன் நோக்கம் என்ன என்றும் கேள்வி எழுப்­பினார். 

அடிப்­ப­டை­வா­தத்­திற்கு எதி­ரான மக்கள் இயக்­கத்தின் மாநாடு ஞாயிற்­றுக்­கி­ழமை குரு­நா­கலில் இடம்­பெற்­றது. இந்த மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே விமல் வீர­வன்ச இவ்­வாறு கேள்வி எழுப்­பினார்.

அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­றிய அவர் தெரி­வித்­த­தா­வது,

நாட்டில் பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்கள் இடம்­பெற்­ற­போது ஜனா­தி­பதி நாட்டில் இருக்­க­வில்லை. பிர­தமர் கொழும்பில் இருக்­க­வில்லை. தாக்­கு­தல்கள் தொடர்பில் தக­வல்கள் கிடைத்­தி­ருந்தும் எவ்­வித பாது­காப்பு நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. இம்­மாதம் 21 ஆம் திக­தி­யுடன் குண்­டுத்­தாக்­கு­தல்கள் இடம்­பெற்று 3 மாதங்கள் நிறை­வ­டைந்த போதும் இது வரையில் தீர்­வொன்று வழங்­கப்­ப­ட­வில்லை.

இம்­மாதம் 24 ஆம் திகதி காலை 9.30 மணி­ய­ளவில் வெலி­சறை கடற்­படை தளத்தில் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள சந்­தேக நபர்­களை அமெ­ரிக்க பிர­தி­நி­திகள் சிலர் சந்­தித்­துள்­ளனர். அமெ­ரிக்க புல­னாய்வுப் பிரிவைச் சேர்ந்த இரு­வரும், இலங்­கைக்­கான அமெ­ரிக்க தூது­ரக அதி­கா­ரி­யொ­ரு­வரும், தூது­ர­கத்தில் பணி­பு­ரியும் மொழி­பெ­யர்ப்­பாளர் ஒரு­வரும் இந்த சந்­திப்பில் கலந்து கொண்­டுள்­ளனர். வேறு யாருக்கும் இதில் அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை என்று அறி­யக்­கி­டைத்­துள்­ளது.

கடற்­ப­டை­யினர் இந்த சந்­திப்­பிற்கு அனு­மதி வழங்க மறுத்த போதும் பயங்­க­ர­வாத விசா­ரணைப் பிரிவு அனு­மதி வழங்­கி­யுள்­ளது. ஆனால் அவர்கள் கூட அந்த சந்­திப்பில் கலந்து கொள்­ள­வில்லை. சுமார் 2 மணித்­தி­யா­லயம் இந்த சந்­திப்பு நீடித்­தி­ருந்த போதிலும் இது­வ­ரையில் அது தொடர்­பான தக­வல்கள் யாருக்கும் தெரி­யாது.

இதனை அடிப்­ப­டை­யாகக் கொண்டு பார்க்­கும்­போது அனைத்து விட­யங்­க­ளிலும் அமெ­ரிக்­கா­வுக்கு ஏற்­றாற்­போல இலங்கை முழு­மை­யாக மாறி­யி­ருப்­பது தெளி­வா­கி­றது. அண்­மையில் அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து பெயர்­கூட குறிப்­பி­டப்­ப­டாத விமா­ன­மொன்று இலங்­கையை வந்­த­டைந்­துள்­ளது. இது தொடர்­பிலும் யாரும் கவனம் செலுத்­த­வில்லை. இவ்­வாறு பொறுப்­பற்று செயற்­ப­டு­வதன் மூலம் பயங்­க­ர­வாதம் மிக இல­கு­வாக இலங்­கையில் ஊடு­ரு­வ­தற்கு அர­சாங்கம் தான் வழி­ய­மைத்துக் கொடுத்­துள்­ளது. மட்­டக்­க­ளப்பு பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு சவூதி அரே­பி­யா­வி­லி­ருந்து கிடைக்­கப்­பெற்ற நிதி தொடர்பில் மத்­திய வங்­கிக்கு நட­வ­டிக்கை எடுக்க முடி­யாமல் போன­மைக்கும் இந்த அர­சாங்­கத்தின் முறை­யற்ற கொள்­கை­களே கார­ண­மாகும்.

தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்­பாளர் கைது செய்­யப்­பட்டு பிணையில் விடு­விக்­கப்­பட்டார். இதற்கு பொலிஸ் உள்­ளிட்ட யாருமே எதிர்ப்பு தெரி­விக்­க­வில்லை. பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­பட்டு கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்ட முஸ்லிம் இளை­ஞர்­க­ளுக்கு பிணை வழங்­கப்­பட்டால் அதற்கு யாரும் எதிர்ப்பு தெரி­விக்கக் கூடாது என்று அர­சாங்கம் கட்­ட­ளை­யிட்­டுள்­ளது. ஆனால் எந்தத் தவறும் இழைக்­காது சிறை தண்­டனை அனு­ப­வித்து வரும் இரா­ணுவ வீரர்­க­ளுக்கு பிணை வழங்­கப்­பட்டால் மாத்­திரம் நாலா­பக்­கமும் இருந்து எதிர்ப்­புக்கள் வெளி­யி­டப்­படும்.
எக்சா ஒப்­பந்­தத்தின் மூலம் வீசா இன்றி கூட அமெ­ரிக்க இரா­ணுவம் இலங்­கைக்கு வரு­கை­தர முடியும் என்ற வாய்ப்பை இந்த அர­சாங்கம் வழங்­கி­யுள்­ளது. ஐந்து பக்­கங்கள் மாத்­தி­ரமே உள்­ளன என்று தெரி­வித்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எக்சா உடன்­ப­டிக்­கையை பாரா­ளு­மன்­றத்தில் காண்­பித்தார். ஆனால் அதில் நூற்­றுக்கும் அதி­க­மான பக்­கங்கள் இருக்­கின்­றன என்­பதை நான் வெளிப்­ப­டுத்­தி­யுள்ளேன்.

வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரனால் நாட்டில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட பிரி­வி­னை­வாதம் நிறை­வுக்குக் கொண்டு வரப்­பட்டு, தற்­போது முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தி­களின் பிரி­வினை வாதத்­துக்கு எதி­ராக செயற்­பட வேண்­டிய தேவை ஏற்­பட்­டுள்­ளது. பாரா­ளு­மன்றம் , தேர்­தல்கள் ஆணைக்­குழு உள்­ளிட்ட பல முக்­கிய அரசதுறைகளில் அமெரிக்காவிடமிருந்து ஊதியம் பெற்றுக் கொண்டு பலர் பணிபுரிகின்றனர். அதேபோன்று அரச ஊடகங்களில் அமெரிக்க பிரஜைகள் பணிபுரிகின்றனர். இது நாட்டின் சுயாதீனத்தன்மையை கேள்விக்குட்படுத்துகின்றது.

இவ்வாறான நிலைமைகளை மாற்றியமைக்க வேண்டும். அதற்கு ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். அந்தப் பொறுப்பு எம்மிடம் உள்ளது. எமக்கான பொறுப்பை நிறைவேற்றுவதில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னின்று செயற்பட வேண்டும்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.