மாகாண சபைத் தேர்தல் உடன் நடத்தப்பட வேண்டும்
மாகாண சபைத் தேர்தல் மேலும் தாமதப்படுத்தப்படாது உடன் நடத்தப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டத்தில் பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ஊவா மாகாண முதலமைச்சர் சாமர திசாநாயக்கவினால் கொண்டு வரப்பட்ட இப்பிரேரணை பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வாவினால் ஆமோதிக்கப்பட்டதுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. உடனடியாக உயர்நீதிமன்றின் கருத்தினை வினவி விரைவில் மாகாண சபை தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என பிரேரணை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது எனவும் அவர் கூறினார்.
தேர்தல்கள் ஆணையாளர் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான பிரச்சினைகளை ஜனாதிபதியிடம் முன்வைத்-துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
vidivelli