இலங்கை ஹஜ் யாத்திரிகர்கள் எவ்வித உடல்நல பாதிப்புகளுமின்றி மக்காவில் தங்களது ஹஜ் கடமைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர்களுக்குத் தேவையான வைத்திய சேவைகளை வழங்குவதற்கு மக்காவிலும் மதீனாவிலும் இலங்கையின் வைத்திய முகாம்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரச ஹஜ் குழு தெரிவித்துள்ளது. இலங்கை ஹஜ் யாத்திரிகர்களின் நலன்களைக் கவனிப்பதற்காகவும் தேவையான உதவிகளை வழங்குவதற்காகவும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரச ஹஜ் குழுவின் கலாநிதி தலைவர் எம்.ரி. சியாத் தெரிவித்தார்.
இதேவேளை இலங்கையிலிருந்து இறுதி ஹஜ் விமானம் எதிர்வரும் 7 ஆம் திகதி மக்கா நோக்கி பயணிக்கவுள்ளது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் எதிர்வரும் 27 ஆம் திகதியும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் எதிர்வரும் ஆகஸ்ட் 6 ஆம் திகதியும் ஹஜ் கடமைக்காக சவூதி அரேபியாவுக்குப் பயணிக்கவுள்ளனர்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுல்கள் திணைக்களத்தின் பணிப்பாளரும் முஸ்லிம் சமய விவகார அமைச்சரும் மக்கா மற்றும் மதீனாவில் இலங்கை ஹஜ் யாத்திரிகள் மற்றும் ஹஜ் முகவர்களைச் சந்தித்து குறைநிறைகளைக் கேட்டறிந்துள்ளார்கள்.
ஹஜ் யாத்திரிகர்களுக்கு ஹஜ் முகவர்கள் மூலம் பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டால் உறுதியளித்தபடி சவூதி அரேபியாவில் சேவைகள் வழங்கப்படாவிட்டால் அது தொடர்பான முறைப்பாடுகளை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு சமர்ப்பிக்கலாம் எனவும் அரச ஹஜ் குழுவின் தலைவர் தெரிவித்தார்.
ஏ.ஆர்.ஏ.பரீல்
vidivelli