முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் : மீளாய்வு செய்வதற்கு நான்கு பேரடங்கிய குழு
ஹலீம், பைஸர் முஸ்தபா, ஹக்கீம், ரிஸ்வி முப்தி உள்ளடக்கம்
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டதிருத்தங்களுக்கான சிபாரிசுகளுக்கு வழங்கியுள்ள அங்கீகாரத்தை மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடலொன்று நேற்று மாலை பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்றது.
நீதியமைச்சர் தலதா அத்துகோரளவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களுக்கான சிபாரிசு அறிக்கையினை மீளாய்வு செய்து அறிக்கையொன்றினைத் தயாரிப்பதற்கு நேற்று நால்வரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இக்குழுவில் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், பாராளுமன்ற உறுப்பினர்கள் ரவூப் ஹக்கீம், பைசர் முஸ்தபா மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி அடங்கியுள்ளனர். இக்குழு தயாரிக்கும் அறிக்கை ஒருவார காலத்தினுள் நீதியமைச்சர் தலதா அத்துகோரளவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நேற்றைய சந்திப்பில் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், பாராளுமன்ற உறுப்பினர்கள் ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், ஏ.எச்.எம்.பௌஸி, பைசர் முஸ்தபா, முஜிபுர் ரஹ்மான், எச்.எம்.எம்.ஹரீஸ், காதர் மஸ்தான், எம்.எஸ்.தௌபீக், அப்துல்லாஹ் மஹ்ரூப், எஸ்.எம்.மரிக்கார், ஏ.எல்.நஸீர் ஆகியோரும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாசபையின் சார்பில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி, பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக், உதவிச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.தாஸிம், அஷ்ஷெய்க் பாஸில் பாரூக், அஷ்ஷெய்க் முர்சித் முழப்பர், அஷ்ஷெய்க் அப்துல் காலிக், அஷ்ஷெய்க் ஹசன் பரீட், அஷ்ஷெய்க் எஸ்.எல்.நௌபர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
ஏ.ஆர்.ஏ.பரீல்
vidivelli