முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு கலந்துரையாடுவதற்குத் தான் தயாராக இருப்பதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் சிவில் சமூகத்தூதுக்குழு ஒன்று அண்மையில் ஜாதிக ஹெல உறுமயவியன் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்கவை அவரது இல்லத்தில் சந்தித்து நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை குறித்து கலந்துரையாடியது. நீதிக்கும் நியாயத்துக்குமான அமைப்பின் அங்கத்தவரும் மாலைதீவின் முன்னாள் இலங்கை தொழிற்றுறை அதிகாரியுமான எம்.கே.எம்.நௌபரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் தேசிய பாதுகாப்பு ஆணைக்குழுவின் அங்கத்தவர் சட்டத்தரணி ஜாவித் யூசுப், ஹிழ்ரு சித்திக், சட்டத்தரணி ரிசாம் தஹ்லான் மன்சூர், ஸ்ரீலங்கா டெலிகொம் ஓய்வுபெற்ற சந்தைப்படுத்தல் முகாமையாளர் எம்.எஸ்.எம். முஸம்மில், டாக்டர் ரியாஸ் காசிம் ஆகியோருடன் அமைச்சரின் இணைப்பாளரும் கோட்டே மாநகர சபை உறுப்பினரும் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பில் அண்மைக்காலமாக முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாம் தொடர்பாக எழுப்பப்படும் சந்தேகங்கள் பற்றி தூதுக்குழுவினர் விளக்கினர். இதுபோன்ற கலந்துரையாடல்களை எதிர்காலத்தில் தொடருவதற்கு அமைச்சர் இணக்கம் தெரிவித்ததாக கூட்ட ஏற்பாட்டாளர் எம்.கே.எம். நௌபர் தெரிவித்தார்.
vidivelli