முஸ்லிம் எம்.பி.க்களை பிரதமர் அழைத்து பேச்சு

தனியார் சட்ட திருத்தம் , மத்ரஸா சட்டமூலம் , கைதிகள் விடுதலை , கல்முனை விவகாரம் குறித்து ஆராய்வு

0 1,316

முஸ்லிம் விவாகம், விவாக ரத்து மற்றும் தனியார் சட்டம் தொடர்­பான திருத்­தங்­களை இறு­திப்­ப­டுத்­து­வது, அமைச்­ச­ர­வைக்கு அடுத்­த­வாரம் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வி­ருக்கும் மத்­ரஸா சட்­ட­மூலம், ஏப்ரல் 21 தாக்­கு­தலின் பின்னர் கைது­செய்­யப்­பட்டு தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள அப்­பாவி முஸ்­லிம்கள் மற்றும் கல்­முனை வடக்கு பிர­தேச செய­லக விவ­காரம் உள்­ளிட்ட சம­கால நெருக்­க­டிகள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்­காக நேற்­று­முன்­தினம் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க அலரி மாளி­கைக்கு அழைத்து பேச்சு நடத்­தினார்.

இதில் அமைச்சர் அப்துல் ஹலீம், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ஏ.எச்.எம்.பௌஸி, ரிஷாத் பதி­யுதீன், முஜிபுர் ரஹ்மான், எச்.எம்.எம்.ஹரீஸ், அலி­சாஹிர் மௌலானா, பைஸர் முஸ்­தபா, இஸ்­மாயில், எஸ்.எம்.மரிக்கார், காதர் மஸ்தான், மஹ்ரூப் உள்­ளிட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் சட்­டமா அதிபர் திணைக்­கள அதி­கா­ரிகள், பொலிஸ் அதி­கா­ரிகள் உள்­ளிட்ட பலரும் கலந்­து­கொண்­டனர்.

முஸ்லிம் தனியார் சட்டம்

முஸ்லிம் தனியார் சட்ட விவ­காரம் தொடர்பில் இறுதித் தீர்­மா­ன­மொன்று எடுக்­க­வேண்­டி­யி­ருக்­கி­றது. எனினும், குறித்த திருத்­தங்கள் தொடர்­பாக மேலும் சில கலந்­து­ரை­யா­டல்கள் நடத்­தப்­பட்டே இறுதி முடி­வுக்கு வர­மு­டி­யு­மென முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் அப்துல் ஹலீம் பிர­த­ம­ரிடம் கேட்­டுக்­கொண்டார்.

இது­த­விர முஸ்லிம் தனியார் சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்த விட­யங்கள் குறித்து மீளவும் பேச்சு நடத்த வேண்­டு­மென அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா கேட்­டுக்­கொண்­டமை குறித்தும் முஸ்லிம் எம்.பி.களால் பிர­த­ம­ரிடம் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

மத்­ரஸா சட்­டமூலம்

அரபுக் கல்­லூ­ரிகள் மற்றும் குர்ஆன் மத்­ர­ஸாக்கள் என்­பன கல்வி அமைச்சின் கீழ் விசேட சபை ஊடாக கொண்­டு­வ­ரு­வது குறித்த சட்­ட­மூலம் அடுத்­த­வாரம் அமைச்­ச­ர­வையில் சமர்­ப்பிக்­கப்­ப­ட­வி­ருக்­கி­றது. இதில் திருத்­தகள் ஏதும் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டி­யுள்­ளதா என பிர­தமர் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் வின­வி­ய­துடன், குறித்த யோசனை தொடர்­பி­லான கருத்­து­க­ளையும் கேட்­டுக்­கொண்டார். இதற்­க­மைய சிறு சிறு மாற்­றங்கள் செய்­யப்­பட்­டுள்­ள­துடன் அடுத்­த­வாரம் அமைச்­ச­ர­வையில் சமர்­ப்பிப்­ப­தற்­கான ஒப்­பு­த­லையும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் பிர­தமர் பெற்­றுக்­கொண்டார்.

கைதிகள் விடு­தலை

ஏப்ரல் 21 ஆம் திகதி நட்­சத்­திர ஹோட்­டல்கள் மற்றும் கிறிஸ்­தவ தேவா­ல­யங்கள் மீது பயங்­க­ர­வா­தி­களால் தாக்­குதல் நடத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து, நாடு­மு­ழு­வதும் பாது­காப்புத் தரப்­பி­னரால் முன்­னெ­டுக்­கப்பட்ட சோதனை நட­வ­டிக்­கை­க­ளின்­போது கைது செய்­யப்­பட்ட முஸ்­லிம்­களின் விடு­தலை குறித்தும் இதன்­போது அவ­தானம் செலுத்­தப்­பட்­டது. இது குறித்து சட்­டமா அதிபர் திணைக்கள அதி­கா­ரி­களின் ஆலோ­சனை பெறப்­பட்­ட­துடன் பொலி­ஸா­ருக்கு விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டது.

பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுடன் தொடர்­பில்­லாத ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்டோர் கைது செய்­யப்­பட்ட நிலையில் பலர் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர். எனினும் தற்­போது 300 பேர்­வ­ரையில் தொடர்ந்தும் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் சுட்­டிக்­காட்­டினார்.
கல்­முனை விவ­காரம்

கல்­முனை வடக்கு தமிழ் பிர­தேச சபை கோரிக்கை விடயம் வலு­ப்பெற்­றி­ருப்­ப­துடன் முறுகல் நிலை­யொன்று தோற்­று­விக்­கப்­பட்­டுள்மை குறித்து பிர­த­மரின் கவ­னத்­திற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்டுவந்தனர். இதனை யடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகளுக்குமிடையில் கலந்துரையாடிய பின்னர் இதற்கு சுமுக தீர்வை எட்ட முடியுமென பிரதமாரால் ஆலோசனை வழங்கப்பட்டது. இதற்கமைய நேற்றை தினம் சந்திப்பொன்று இடம்பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவித்தார்.

(எஸ்.என்.எம்.ஸுஹைல்)

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.