மே இனவாத வன்முறைகளில் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் திருத்தங்களுக்கு நிதியளிப்பு
வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சு நடவடிக்கை
கம்பஹா மற்றும் வடமேல் மாகாணத்தில் மே மாதம் 13 ஆம் திகதி இடம்பெற்ற இனவாத வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்களை திருத்தும் நடவடிக்கைகளுக்கு வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சினால் நாளை மறுதினம் நிதி வழங்கப்படவுள்ளது.
மினுவாங்கொடை மற்றும் குளியாப்பிட்டி, பண்டுவஸ்நுவர, பிங்கிரிய, நிக்கவரெட்டிய தொகுதிகளிலுள்ள பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்களுக்கு அமைச்சர் சஜித் பிரேமதாச நாளை மறுதினம் நேரடியாகச் சென்று இவ்வாறு காசோலைகளை கையளிப்பாரென அமைச்சின் ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன், புத்தளம் மாவட்டத்தின் நாத்தாண்டிய தொகுதியில் பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்களுக்கான திருத்தங்களுக்குரிய காசோலைகள் பிறிதொரு தினத்தில் வழங்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், பிரதேச அரசியல் தலைமைகளும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
vidivelli